காலையில் கூட்டமாய் குளிக்கக்

கரையும் காக்கைகள் உண்டு

ஜோடியாய் சிரித்துப் பறக்கும்

பக்கத்ததுத் தோட்டத்துக் கிளிகள்

தந்திக் கம்பியில் வரிசையாய்

குருவிகள் தட்டிக் கேட்கும்

மாடுகள் மேயும் வெளிகள்

மலர்களாய் விரியும் செடிகள்

மரத்தின் கீழே முளைக்கும்

மரத்தின் கூடவே நிழல்கள்

கிணற்றின் ராட்டினச் சத்தம்

கீழ்ப்பக்கம் நாதமாய்ப் பரவும்

மனிதர்கள் எப்போதாவது

மவுனமாய்த் தெருவில் போவார்

நாளைக்கு நானும் போகணும்

நகரத்தின் உள்ளே பிழைக்க

-சுப்ரமண்ய ராஜு

Pin It