உனது நதிக்கரையில்
நனைந்து கொண்டிருக்கிறேன்
நீலநிற மீனின் செவுள்களை விரித்தபடி
பெரும் அத்யாயத்தின்
புரட்சிப் பக்கங்களைப்போல
இவ்வாழ்க்கை பரிச்சயம் எனக்கு
என்னால் முடிந்த அல்லது
அப்படி நானேற்றுக்கொண்ட
எனதெல்லைகளை
தீர்மானிக்காமல் பழக்கு
ஒரு பஞ்சினைப்போல் அரவணைத்து
உன்தூரங்களை
அப்போதுதான்
நதிக்கரை துக்கம் விசாரித்தாலும்
இன்னும் தீவிரமாய் - இனிமையாய்
கடக்க முடியும் எனதன்பை
உன்னில் கரைத்தபடி
உன்னதம் - ஜூலை 2005
உனது நதிக்கரையில்…
- விவரங்கள்
- கு.உமாதேவி
- பிரிவு: உன்னதம் - ஜூலை 2005
More articles by கு.உமாதேவி
- அவளிடமிருந்து உனக்குத் தருகிறேன் (16 நவ 2012)
- அம்மணக் குழந்தைகளும் செருப்புக் கவிதைகளும் (15 டிச 2010)
- கு.உமாதேவி கவிதைகள் (20 மே 2010)
- அக்காவைப் போலொரு கொலை செய்தாள் (12 மே 2010)
- கு.உமாதேவி கவிதைகள் (03 மே 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.