திசை திருப்பக் கடிவாளம்
இருந்தும்
ரிதமற்ற குளம்படிச் சத்தமென
திக்கற்றுத் திரிகிறது
மனம்
பழுதடைந்த திசைகாட்டி
தரை தட்டிய கப்பல்
நீ வைத்த உறவுப் புள்ளிகளை
சரீரம் கொண்டு இணைத்தும்
அந்நிய பாவனையில்
முகங்களை சிருஷ்டித்து
உள் சித்திரத்தை
அணுஅணுவாய்
சிதைக்கிறது
இடமும் பொருளும்
ஒன்றெனச் சங்கமித்து
காலத்தைக் கடந்து நிற்கிறது
மனக்குதிரை
உன்னதம் - ஜனவரி 2005
மனக்குதிரை
- விவரங்கள்
- பிரதாபருத்ரன்
- பிரிவு: உன்னதம் - ஜனவரி 2005
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.