மூச்சுக் குழலை பிரித்துக் காட்டினால்
மூன்று மதிப்பெண்கள் கூடுதல்
இரைப்பை பெருங்குடலின் இணைப்பை
தனியாகக் காட்டுபவர்களுக்கு
இன்னும் சற்று கூடுதல் மதிப்பெண்கள்
மலவாயையும் மலக்குடலையும்
தனித்துக் காட்டாதவர்களுக்கு
இரண்டு மதிப்பெண்கள் குறைக்கப்படும்
என்றார்கள் ஆசிரியர்கள்
உதரவிதானத்தை அறுத்தபோதோ
இதயத்தைக் கிழித்தபோதோ
என்னுள் எந்த வேட்கையும் இல்லை
குடல்களின் மென்மையும்
மூச்சுக்குழாயின் தன்மையும்
என் உயிரில் ஊசி குத்தியது
இருந்தும் என் அழுகையெல்லாம்
வேண்டாம் என்று ஒதுக்கிவிட்ட
எலியின் இதயமும்
என்னிடமிருந்து நீக்கப்பட்ட இதயமும்
சந்திக்குமா என்ற கணத்திற்காகத்தான்.
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.