பசுமை திரைப்படம் விழா மறுபக்கம் மாற்று திரைப்பட களம் ஏற்பாடு செய்திருந்து. மண், மலை, காடு, நீர் என்று அதன் விளம்பரங்களில் வாசங்கள் பெரிதாக இருந்தன.

பசுமை திரைப்பட விழாவை துவக்கி வைத்து உரையாற்றிய பபா ரமணி : பெரிய நிறுவனங்களுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் லாபம் தான் குறிக்கோளாக இருக்கிறது அவர்கள் சுற்றுச்சூழலை கவனிப்பதில்லை அவர்கள் கவனம் முழுக்க வியாபாரம் சார்ந்திருக்கிறது. இந்த நிலையில் சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வை தர வேண்டியது முக்கியமாக இருக்கிறது என்றார்

இந்த பசுமை திரைப்பட விழாவின் நெறியாள்கை செய்த ஆவணப்பட இயக்குனர் அமுதன் அவர்கள் : நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான தரவுகள் இன்றைய நாளில் நமக்குக் கிடைக்கிறது. பலர் அதை பதிவு செய்வதில்லை.. என்ன செய்ய.. கொஞ்சமாவது பதிவு செய்தால் நன்று என்று ஆவணப்படங்கள் எடுக்க வேண்டி இருக்கிறது ஆனால் வருகையாள 50 வயதுக்கு மேல் தான் இருக்கிறார்கள் இன்று இந்த திரைப்பட விழாவுக்கு வந்திருக்கிறார்கள். இளைய தலைமுறை­யினர் அக்கறை கொள்ள வேண்டும்.

 முதல் படமாக ”கோரல் வுமன்“ என்ற படம் பிரியா துவச்சேரி அவர்களுடைய இயக்கத்தில் இடம்பெற்றது.. பவளப் பாறைகள் பற்றிய படம். பவளப் பாறைகள் பிரியாணி பாத்திரங்கள் போல் இருப்பதாக வருணனை வருகிறது. உமா மணி என்ற ஒரு பெண்மணி பவளப் பாறைகள் பற்றிய ஓவியங்கள் வரைவதில் ஆர்வம் கொள்கிறார் 49 வயதில் அவர் நீச்சல் மூலமாக கடல் பகுதிக்கு சென்று இந்த பவளப் பாறைகளை காண்கிறார்.. பழைய காலத்தில் சுவற்றில் கற்களுக்கு பதிலாக பவளப்பாறைகள் இருப்பது காட்டப்படுகிறது. கடல் நீலமாக இருந்தாலும் உள்ளே பவளப் பாறைகள் வசீகரம் இழந்து போய் பாலையாக தான் காட்சியளிக்கிறது. சுமார் 120 வகையான பவளப்பாறைகள் உள்ளன. தூத்துக்குடி பகுதியில் உள்ள பவளப்பாறை பகுதியில் கடல் ஆய்வுகளும் கடல் பகுதி உணவுகளும் சேகரிப்பு சிறந்த முறையில் காட்டப்படுகிறது.

நான் ஒரு நல்ல பெயிண்டர் அல்ல. ஆனால் ஒரு மகிழ்ச்சிகரமான பெயிண்டர் என்று அவர் சொல்கிறார். தண்ணீரில் நெகிழி துணுக்குகள் படிந்து நீர் கருப்பு நிறத்தில் மாறுபடுகிறது. ராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் பக்தர்கள் குளித்துவிட்டு துணிகளைப் போட்டு ஒரு வகை குப்பைகளை உருவாக்குகிறார்கள்.. அப்படி துணிகளை கழட்டி போட்டு விட்டால் தங்கள் தோஷம் கழியும் பாவம் குறையும் என நினைக்கிறார்கள்.. மன்னார் வளைகுடா பகுதிகளில் ஹோட்டல் கழிவுகளும் வீட்டுக்கு கழிவுகளும் பவளப் பாறைத் திட்டு பகுதிகளை நாசமாக்குகிறது. அதிக வெப்பம் காரணமாக பவளப்பாறைகள் நிறமிழந்து விடுகின்றன. நான் பார்த்த உலகத்தை நீங்களும் பார்க்க வேண்டும் எனவே கடலுக்கு சென்று அவற்றையெல்லாம் பாருங்கள். பார்க்க முடியாதவர்கள் என்னுடைய பெயிண்டிங் மூலமாக அவற்றை காணுங்கள் என்கிறார் அந்த பெண்மணி

பெஸ்டரிங் ஜெர்னி: சுற்றித் திரியும் பறவைகள் பூச்சிகள். அமைதியாக இருக்கிற சூழல். மேலே பறக்கும் ஹெலிகாப்டர் சத்தங்களும் தொழிற்சாலை இயந்திர வேகங்களும் அவற்றை நிம்மதியைத் தடுக்கின்றன.

பூச்சி கட்டுப்பாடு என்று சிறு பூச்சிகளை கொல்வது மனிதர்கள் இயல்பாக இருக்கிறது. ரோஸ்டர் முதல் கொண்டு எலி பொறி வரைக்கும் பல வகையான விஷயங்கள் இவற்றையெல்லாம் அழிப்பதற்காக பயன்படுத்துகின்றனர்.

பூச்சி என்றால் என்ன

பூச்சி என்பது நீயா

நானா

நீ என்னை பார்க்கும் பார்வையா

என்ற வாசகங்கள் தொடர்ந்து இந்த படத்தில் இடம்பெற்று கொண்டே இருக்கின்றன.. பூச்சிகள் சார்ந்த உலகம் அவை இயற்கைக்கு எப்படி உதவியாக இருக்கின்றன என்பதும் காட்டப்படுகிறது பூச்சிகளைத் தாண்டி மனிதர்களுக்கும் இப்படி நகர்கிறது படம்.

அடுத்த பகுதி பஞ்சாபின் பருத்தி விளையும் பகுதிகளைக் காட்டுகிறது. கொங்கு பகுதியில் பின்னலாடை துறை வளர்ந்து வந்தாலும் இன்று பருத்தி விளைச்சல் இல்லாமல் போய்விட்டது. ஆனால் பஞ்சாபில் பருத்தி நல்ல விளைச்சல் இருக்கிறது. ஆனால் அதன் விளைவுகளை பார்க்க பயமாக இருக்கிறது. பிடி காட்டன் விரைவடைகிறது. அதற்காக நிறைய மருந்துகளை அடிக்கிறார்கள். அதனால் மக்களுக்கு புற்றுநோய் வருகிறது பூச்சி மருந்துகளும் மற்றும் ரசாயன மருந்துகளும் பயன்படுவதால் இந்த நோய் வருகிறது. இந்த பஞ்சாப்பில் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு இந்த விவசாயம் சார்ந்த பகுதியிலிருந்து புற்றுநோய் பாதிக்கப்பட்ட மக்களை கொண்டு செல்லும் ஒரு தொடர்வண்டியை கேன்சர் டிரெயின் என்று அழைக்கிறார்கள் மக்கள். அவை புற்றுநோய் மருத்துவமனைக்கு மக்களை கொண்டு செல்கின்றன. அவர்களை கொண்டு செல்வதற்காக சாதாரண மக்களும் ரிக்க்ஷாக்காரர்களும் புரோக்கர்களும் இருக்கிறார்கள்.

 இன்னொரு பக்கம் கேரளாவில் எண்டோசல்பான் விளைவித்த பாதிப்புகளை இந்த படம் காட்டுகிறது 74 நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தியாவில் அவற்றின் பயன்பாடு எப்படி மக்களை ஊனமாக்கி நடமாட வைக்கிறது என்பதை காசர்கோடு பகுதியை மையமாக வைத்து இந்த படம் சொல்கிறது. வானத்தில் ஹெலிகாப்டர்கள் பூச்சி மருந்துகளை தூவி விட்டு போகின்றன அல்லது சிமெண்ட் தொட்டிகளில் நிரப்பி நிறைய விளைச்சலை தர வேண்டும் என்று சொல்லி நம்பிக்கையை ஊட்டுகிறார்கள். எல்லாம் பொய்யாகிப் போகிறது இந்த சூழலில் லீலா குமாரி போன்றவர்கள் இதை எதிர்த்து போராடுகிறார்கள். விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள் இவர்கள் தங்கள் பிரச்சினைகளை தொலைக்காட்சி மூலம் செய்தித்தாள்கள் மூலம் சொன்னாலும் பயன் இல்லை ஆனால் சிரமங்களும் துயரங்களும் தொழுது கொண்டிருக்கின்றன. சுதந்திர இந்தியா அணிவகுப்பை ஒரு வண்டியின் மீது இருந்து வேடிக்கை பார்க்கும் ஒரு பூச்சியின் பார்வையோடு இந்த படம் முடிகிறது. மக்களும் பூச்சியாளராக மாறிவிட்டார்கள். மருந்து தெளிப்பு நிறுத்திய பின்னால் எல்லாமும் மாறிவிட்டது. மருந்து என்பது பொதுப் பிரயோகம் இந்த ரசாயனங்கள் பற்றி இயல்பாக இருக்கிறது என்கிறார்கள். இந்த அம்சங்களையும் இந்த படம் பதிவு செய்து இருக்கிறது பூமிக்கு தீ வைத்தோம் என்று அலறுகிறது படம்

 என் பெயர் பாலாறு :தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர் ஆர் சீனிவாசன் இயக்கியிருந்த ஆவணப்படம் இந்த ஆறு எனக்கு நேரடியாக பல அனுபவங்களை திருப்பத்தூரில் வசிக்கிற போது அறிந்திருக்கிறேன், அந்த ஆறு இப்படி மக்களின் வாழ்க்கையில் பங்கு போட்டுக் கொள்கிற இந்திய வாழ்க்கையில் ஒன்றுபட்ட பாரதம் என்ற பெயரும் உண்டு

 பாலாறு பகுதியில் வீட்டுக் கழிவால் தொழிற்சாலை கழிவுகளால் ஆறு மாசுபட்டு வறண்டு போயிருப்பதையும் இது சார்ந்த போராளிகளும் எழுத்தாளர்களும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்கள் நீண்ட படத்தில் இது போன்ற விளக்கங்களும் விவரங்களும் தரும் கூட நிறைய பேர் இருக்கின்றனர் எதிர்ப்பையும் பகிர்ந்து கொள்கிறார்கள். முக்கிய எதிர்ப்புக்குரல்.

பொன். குமார் இப்படி கருத்து தெரிவித்தார்:

 ஐம்பது வருடங்களாக ஜீவநதியாக பயணபட்ட நான் இன்று ஒரு நீரோடையாக மாறி பின் சாக்கடையாக உருமாற்றம் பெற்றுள்ளேன் என பெண் குரலில் தன் வரலாறு கூறுவதாக படம் தொடங்குகிறது. பின்னணியில் குரல் கொடுத்து இருப்பவர் பிரமிளா. நதியின் சோகத்தை முழுமையாக உள் வாங்கி ஒலித்துள்ளார்.

பாலாறைக் காக்க வேண்டும் என்று ஆர். ஆர். சீனிவாசன் ஆவணப்படம் வாயிலாக மாநில, மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். கவனத்தை ஈர்க்க முயன்றுள்ளார். இவரின் இம்முயற்சிக்கு பலர் ஒத்துழைத்துள்ளனர். இதுவொரு கூட்டு முயற்சியே. கூட்டு முயற்சி இருந்தால் பாலாறையும் மீட்க இயலும். மக்கள் மனத்தில் பாலாறு பாய்ந்தது போல் இருக்கும்.

‘ஒரு மண்ணு குடமெடுத்து தண்ணிக்கு போனியே இவ்வளவு நேரமென்ன?’ - ஆண்

‘பாலாற்று தண்ணி சுழன்று வருவதை வேடிக்கை பார்த்தய்யா - பெண்

 என்னும் பாடல் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. கண்களிலும் காட்சியாக விரிகிறது.

‘பாலகனைக் கொன்ற பாவம்

தீர்ந்தாலும் தீரும்

பாலாற்றைக் கொன்ற பாவம்

தீரவே தீராது'

என்று ‘தேவையல்ல பெண்கள்’இல் யாழினி முனுசாமி எழுதிய ‘பாலாற்றுச் சாதம்‘ கவிதையே முடிவில் நினைவிற்கு வருகிறது.

புத்தர் சிரித்தார் என்று அணுகுண்டு வெடிக்க சங்கேத வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. மீண்டும் அணுகுண்டுகள் வெடிக்கிற போது புத்தகம் மீண்டும் சிரித்தார் என்ற சங்கேத வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன ஆனால் புத்தர் அழுதார் என்று இந்தப்படத்திற்கு பேர் இருக்கிறார்கள் புத்தா வீப்ஸ் என்கிறார்கள் அது சாதாரண அழுகையல்ல. விம்மிவிம்மி அழுவது. ஜார்க்கண்ட் பகுதி மக்கள் அங்கிருக்கும் கனிம வளம் அவர்களுக்கு சாபம் என்று இருக்கிறார்கள் அந்த கனிமவளத்தின் காரணமாக அவர்கள் அங்கிருந்து துரத்தப்படுகிறார்கள். பிரிட்டிஷ் காலத்தில் இருந்த சுரங்கங்களின் தன்மை சொல்லப்படுகிறது. ஜாகுடா போன்ற பகுதிகளில் இன்று இருக்கும் சுரங்கங்கள் காட்டப்படுகிறது. யுரேனியம் கழிவு சிறு ஆறு போல ஓடுகிறது அப்பகுதிகளும் சுற்றியுள்ள பகுதிகளும் எப்படி கதிர்வீச்சால் பாதிக்கப்படுகிறது. அது தெரியாமல் விளையாடும், மகிழும் குழந்தைகள், வேலைக்குப் போகும் சாதாரண மக்கள். எந்த நிவாரணம் என்று இல்லாமல் அவர்கள் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது. சுரங்கங்கள் வெடி மருந்து வைத்து தகர்க்கப்படுகின்றன.. நல்ல காலுறையும் கையுறையும் கூட அவர்களுக்கு தரப்படுவதில்லை.. கொடுக்கிற முகக் கவசங்களையும் பலர் அணிவதில்லை.. பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் அவர்களுக்கு ஏதோ மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது. அங்கு நிகழ்கிற கதிர்வீச்சு மக்களை பாதிக்கிறது. குழந்தைகளை பாதிக்கிறது. பெண்களை பலவீனமாக்குகிறது. பெரிய தலை, சூம்பிய கால்கள், சிறிய தலைகள் என்று குழந்தைகள் பிறக்கின்றன மனரீதியாக அவர்கள் சோர்வடைகிறார்கள், குழந்தைகள் அழுகிறார்கள். கருக்கலைப்பு அதிகமாக உள்ளது. புத்தர் அழுது கொண்டிருக்கிறார் என்று இந்த படம் சங்கேத வார்த்தைகளால் முடிகிறது மக்களின் கனிமவளம் பூமியில் அது சார்ந்த சுரண்டலும் அவர்களின் வாழ்க்கை பாதிப்புகளும் இந்த படத்தில் காட்டப்படுகிறது

 அல்மா: இந்த படத்தில் விலங்குகள் கூட்டமாக வாழ்வது மற்றும் அவற்றின் தனித்த இயல்புகள் சொல்லப்படுகின்றன. எப்படி காட்டு­யிர்கள் அழிக்கப்படுகின்றன. வேட்டையாடப்படுகின்றன அவற்றின் மூலம் லாபம் சம்பாதிக்கப்படுகிறது என்று சொல்லப்படுகிறது. விங்கும் நமக்குமான உறவு என்பது என்றைக்கும் தொடர்ந்து கொண்டிருப்பதை இந்த படம் காட்டுகிறது

 ”கிரீன்“ என்ற படம் ஒரு மனித குரங்கை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. படுக்கையில் அந்த குரங்கு தூங்குகிறது விழிக்கிறது. விளையாடும் இயல்பை பற்றி நினைக்கிறது. பெரும் மரங்கள் அசைந்து வெளிப்படுத்தும் சத்தங்களும் காற்றும் ஆசுவாசமாக இருக்கிறது. அவை வெட்டப்படுகின்றன அவைகள் பெட்டிகளாகின்றன காகிதங்களை உருவாக்குகிறார்கள் மரத்துண்டில் இருக்கும் நுண்ணுயிர்களை சாப்பிடும் குரங்குகள் மகிழ்ச்சியாக இருக்கிறன. காட்டு உயிர் வாழ்க்கையும் அவர்கள் மகிழ்ச்சியும் காட்டப்படுகிறது. படுக்கையில் கிடக்கும் மனித குரங்கு.. அதையொட்டி காடுகள் மனிதர்கள் என்று தெரிந்ததை சொல்கிறது. கூண்டில் அடிபட்ட விலங்குகள் பிராணிகள் போலவும் மனிதர்கள் இருக்கின்றனர். மரங்கள் அழிக்கப்படுகிற போது தாவி திரிய மரமில்லாமல் தத்தளிக்கும் குரங்குகள் காட்டப்படுகின்றன. மரம் வெட்டப்பட்டு காகிதழ் கூழ் செய்யப்படுகிறது. செய்தித்தாளாகிறது. புத்தகம் ஆகிறது அவைகள் எல்லாம் கால்கள் மிதிபட வீணான பொருளாகின்றன காடுகள் எரிகின்றன். சின்ன செடிகளை கூட வெட்டி நாசமாக்கி பாதைகளை உருவாக்குகிறார்கள். பார்ம் ஆயிலின் தேவையை உணர்ந்து காடுகள் அழிக்கப்படுகின்றன. காற்று மாசடைய தொழிற்சாலை பெருகி வர பசுமை அழிக்கப்படுகிறது துணையில்லாமல் மரங்களில் ஆடி சலித்துப் போகிற குரங்கு கீழே விழுந்து இறந்து போகிறது. முன்பு அதை பல நாள் படுக்கையில் வைத்து சிகிச்சை அளிக்கிறார்கள். பலன் பெறுவதில்லை இந்த குரங்கின் சாவை முன்வைத்து அமேசான் காடுகளில் இருக்கிற மரங்கள் வெட்டப்படுவதும் காடு அழிவதும் பற்றி ரொம்ப நெகிழ்வாக இந்த படம் சொன்னது

 இதில் கலந்துகொண்ட பார்வையாளர்கள் பல கருத்துக்களை முன் வைத்தார்கள்: இந்தோனேசியாவில் மட்டுமல்ல உலக அளவிலும் இதுபோன்ற காடழிப்புகள் உள்ளன. நிலவில் கால் வைத்து நடக்கிற மனிதனுக்கு கிடைக்கும் உரிமையும் ஒப்பந்தங்களும் நோக்கங்களும் அனைவருக்கும் தெரிந்து விட்டது என்றார் பியூசிஎல் கோபி

 மணல் லாரியில் கசியும் நீர்.. அது மணலின் கண்ணீர் என்றார் திலிப்குமார் அவர்கள். மரம் வெட்டப்படும் போது வீழூம் இலைகள் தற்கொலை செய்கின்ற போக்குவரத்து என்று இவர் சொன்னார். உலக அரசியல் உள்ளூர் அரசியல் எல்லாம் கட்டப்படுகிறது கிரீன் படத்தில் குரங்கின் நிலையை ஒட்டிய காட்சியை விவரித்து ஒரு பத்திரிகையாளர் அழத்துவங்கிவிட்டார் இயற்கை அழித்தது பற்றி எல்லோருக்கும் கவலையினை இந்த படம் காட்டுகிறது குரங்குக்கு தன்னை பொருத்திக் கொள்ள இயற்கை தவிர வேறு இடமில்லை அப்படி இல்லாத போது தானே வாழ்க்கையை முடித்துக் கொள்கிற அவலம் காட்டப்படுகிறது.

சுப்ரபாரதிமணியனின் பசுமை: வெண்மையும் கருப்பும் என்ற நீள் கவிதைகளை மனதில் கொண்டு வந்து இப்பட மையங்களை நினைவூட்டிக் கொண்டேன்.

கலை இலக்கியப் பெருமன்றம், பியூசிஎல் கோபி இந்த விழாவை சிறப்பாக்கினர்.

Pin It