திறந்தே கிடக்கிறது
சன்னல் கதவுகளற்ற
மிகச்சிறிய என்வீடு.

திருடர்கள்
வெகுஎளிதாக நுழைந்து
திருட முடியாதபடிக்கு
ஏகப்பட்டவைகள்
அடைத்துக் கொண்டுள்ளன.

இருந்தபோதும்
விருந்தினரை வரவேற்கும்
ஒரு நாற்காலி காலியாக உள்ளது.

யாதுமற்ற ஒரு வழிப்போக்கன்
வெகுஇலகுவான நிர்வாணத்துடன்
அனுமதியின்றி நுழைந்து
யாவற்றையும் நிர்மூலமாக்கி
வெளியேறிவிடுகிறான்.

நாற்காலி மட்டும்
எதையோ நிரப்பிக் கொண்டுள்ளது.

இறுதியில்
மிகச்சிறிய என்வீடு
சுவர்களற்ற பெருவெளியாய்
மிகப்பிரமாண்டத்துடன்
விரிந்துக் கொண்டேயிருக்கிறது

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.