வாழ்கை குறித்த பிரயாசையோடும்
பாதுகாப்பின்மை குறித்த அச்சத்தோடும்
நடுநடுங்கி வளர்கிறது
ஒரு பச்சை மரம்.
வெட்டப்படும் கிளைகளுக்கு
புத்துயிர் தரும் அதன்
வேர்களை நம்பி...
வேரும் கைவிட, வேடிக்கையாக்கப்பட்ட
சிலரை மௌனமாய் கண்டும் காணாதபடி...

***
தன் மானம் வேண்டி
கையேந்திய வேசை நங்கையின் கையில்
திணிக்கப்படுகிறது
நிர்வாணம்
வேகமாய் மூடி மறைக்க முயன்றவளுக்கு
அரைகுறையாய் உதவுகிறது
சில பத்து ரூபாய் நோட்டுகள்

***
ஒரு ஜிப்ஸியைப் போல துவங்கும் மறுபிறப்பில்
காதைப் பிளக்கும் தட்டல் ஓசை...
வன்மங்களின் தாக்குதலில்
காய்ந்துப் போன குதங்கள்
மாரைக் கீறி ரத்தம்
கேட்கும் குரூர நயவஞ்சகங்கள்
ஆற்றாமையின் கணங்களை
அளக்கும் நிராகரிப்புகளுமாய்
சொர்க்கம் வரை தொடர்கிறது
சில துர்சொப்பனங்கள்
Pin It