உக்கிரமேறிய தனிமை
உலகை உருக்கும் வெம்மை
தங்கும் கருவீடு
வரங்களை மறுக்கும்
கொடுந் தவம்
தன்னை அழித்தே
எரியூட்டும் இருப்பு
ஆழி குடித்து
துளி நிரப்ப முடியா
அட்சய தாகம்
பாலை
அவள்
பெண் மட்டுமே
உவர்க்கும் இரவுகள்
நிறங்கள் நெருங்கி நேர்கோடாகி
சிதிலமடையா வெண்ணிற ஒளியின்
பிணைப்பு முறுக்கேறி பிழிய
வழிகிறது இரவு நதியின் பாடலாய்
கோரைப்பற்கள் அணியும்
இரவின் சிரிப்பு பிரபஞ்ச
இடுக்குகளை துளையிட்டு நிரப்ப
அலாவுதீனின் அடிமை பூதமும்
கருமை நிறமேறிய கருவறைகளும்
கதற ஆரம்பிப்பது அநேகமாய்
சதிகள் கூர்தீட்டப்படும் கொடிய
இந்த இரவுப் பொழுதில் தான்
தொடர்புடைய படைப்புகள்
அணங்கு - மார்ச் 2007
உவர்க்கும் இரவுகள்
- விவரங்கள்
- எஸ்.தேன்மொழி
- பிரிவு: அணங்கு - மார்ச் 2007
பாலை
More articles by எஸ்.தேன்மொழி
- சாத்தானும் சோதிடமும் (11 மே 2010)
- நாகாபரணம் (16 டிச 2009)
- எஸ். தேன்மொழி கவிதைகள் (25 செப் 2007)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.