advocate.balamurugan 350பிரதமர் மோடி கவுகாத்தியில் காவல்துறை உயர் அதிகாரிகளின் மாநாட்டில் உரையாற்றும் போது, ஸ்மார்ட் போலிஸ் என்ற அலங்காரம் மிக்க  சொல்லாடலினை உயயோகித்து காவல்துறையினை நவீனப்படுத்த உள்ளதாக கூறினார். ஸ்மார்ட் என்பதற்கு, ‘காவல் நிலையங்கள், காற்றோட்டமாகவும், இயற்கை வெளிச்சத்துடனும் கட்டப்படும்.

வருகையாளர்களுக்குக் காத்திருக்கும் இடம், குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள், காவலர்கள், பெண் காவலர்களுக்குத் தனித்தனியே ஓய்வறை, தகவல் தொடர்புக்கான ஒயர்லெஸ் அறை, கண்காணிப்புக் கேமராக்கள்....உள்ளிட்ட வசதிகள் செய்யப்படும்’ என உள்துறை அமைச்சக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்தியாவில் உள்ள காவல்துறையானது, 1857 ல் நிகழ்ந்த ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்திற்கு பின், காலனியாதிக்கதிற்கு சேகவம் செய்ய உருவாக்கப்பட்ட காவல்துறை சட்டம் 1862 ன் அடிப்படையில்  உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு சனநாயக சமூகத்திற்கேற்ப மாற்றப்படவில்லை.

சுதந்திர இந்தியாவில் அமைக்கப்பட்ட பல காவல்துறை கமிசன்களின் பரிந்துரைகள் மற்றும் அதே போன்ற தேவைக்காக அமைக்கப்பட்ட ரிபைரோ கமிட்டி,பத்மநாபையா கமிட்டி போன்றவற்றின் பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்தப்படவேயில்லை. தொடர்ந்து காவல்துறையின் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகின்றது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் அதிகாரப்பூர்வமாக 11820 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. மேலும்  3532 காவல் நிலையங்களில் தற்கொலைகள் நடந்துள்ளன. தேசிய மனித உரிமை ஆணையம் 94,985 வழக்குகள் காவல்துறைக்கு எதிராகப் பதிவு செய்துள்ளது. மேலும் காவல்துறையின் போலி மோதல் சாவுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

காவல்துறை நாட்டின் சட்டத்திற்கு அடிபணிந்து சனநாயக தன்மையோடு தனது செயல்பாடுகளை அமைத்துக்கொண்டால்தான் அது ‘ஸ்மார்ட் காவல்துறை’. ஷிவிகிஸிஜி என்பது அந்த அமைப்பின் அகம் சார்ந்து மாற்றம் கொண்டு வருவதுதான், காவல் நிலையங்களை ‘ஸ்மார்ட்’ ஆக்குமே தவிர, புறம் சார்ந்த ஒப்பனைகள் செய்வதால் அன்று. மோடியின் சொல்லாடல் நடைமுறையில் மாற்றத்தை கொண்டுவராது.

தொகுப்பு: இரா.உமா

Pin It