time 350

அன்று
பார்த்தேன் அவளை
பார்த்தாள் அவளும்
காதல் இருந்தது கண்களில்
காலம் பிரித்தது எங்களை!

இன்று
எனக்கொரு பேரன்
அவளுக்கொரு பேத்தி
பார்த்தான் அவளை
பார்த்தாள் அவளும்
காதல் இருந்தது கண்களில்
காலம் சேர்த்தது அவர்களை!

தடுத்தது சாதி அன்று
உடைந்தது அதுவே இன்று!

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.