வஜ்ஜியர்கள் வலிமையானவர்கள். அவர்களின் சன்ஸ்தகார் சங்கம் வலிமையுடையது. அவர்களை அழிக்க மன்னன் அஜாத சத்ருவால் முடியவில்லை. புத்தரிடம் மண்டியிட்டார்.

விளைவு அஜாதசத்ரு பவுத்தனாக மாறினான். இது இந்தியாவின் தொடக்ககால வரலாறு. இன்றைய வரலாறு வேறு.

மூர்க்கனான அஜாதசத்ருவால் மக்களின் மன்னாக முடிந்தது. ஆனால் ஆர்.எஸ்.எஸ். மோடியால் மக்கள் விரோத சர்வாதிகாரியாக இருக்க மட்டுமே முடிந்தது.

பா.ஜ.க. ஆட்சி நுழைய முடியாத மாநிலங்களை அளிக்க முயல்கிறது மோடி அரசு.

டெல்லியில் கேஜ்ரிவாலுக்கு எதிராக வாலாட்ட முடியாத மோடி, கவர்னர் மூலம் அங்கே அராஜகத்தை முன்னேடுத்தார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தாபேனர்ஜியை தெலைபேசி மூலம் மிரட்டி, அவமானப்படுத்தி மாநில அரசை நிலைகுலையச் செய்ய ஆளுநர் திரிபாதி முயன்றார். இதற்கு ஆளுநர் அழித்த விளக்கம் பிசுபிசுத்துப் போனது.

மேற்கு வங்கத்தில் ஆளுநர் ஆட்சி வரவேண்டும் என கூப்பாடு போடுகிறது பா.ஜ.க.

அதுபோல புதுவை யூனியன் பிரதேசத்திலும் பா.ஜ.க.வின் வால் நீளத்தொடங்கிவிட்டது.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் பா.ஜ.க. தன் கையாளான அன்னா அசாரேயை வைத்து லோக்பால் & லோக்பால் என்ற ஒரு போராட்டத்தைப் பின் நின்று நடத்தியது.

அப்போது அங்கே கூப்பாடு போட்டு தேசிய கொடி ஆட்டிக்கொண்டு இருந்தவர் கிரண் பேடி. பா.ஜ.க.வின் அந்த ‘அசைன்மெண்டுக்காக’ கிரண் பேடிக்குக் கிடைத்தது புதுவை ஆளுநர் பதவி.

புதுவையின் முதல்வர் நாராயண சாமி தலைமையிலான காங்கிரஸ் அரசை நிலை குலையச் செய்ய, அரசு நிர்வாகத்தில் தலையிட்டுக் குழப்பத்தை ஏற்படுத்தத் தொடங்கினார் கிரண்பேடி.

எப்படியும் புதுவையில் கொல்லைப்புறம் வழியாகவாவது நுழைந்து விட வேண்டும் என்று துடிக்கிறது பா.ஜ.க.

சட்ட மன்றத்தில் நுழைய வாய்பில்லாத சமுகங்களுக்கான மூன்று சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை, சட்டத்துக்குப் புறம்பாக மாநில அரசின் பரிந்துரையில்லாமல், மத்திய அரசின் மூலம் மூன்று பா.ஜ.க.வினரை நியமித்தார் கிரண்பேடி.

அதுவும், பேரவைத் தலைவர் செய்ய வேண்டிய பதவிப் பிரமாணத்தை தானே ரகசியமாகச் செய்து முடித்திருக்கிறார், முதல்வரும், பேரவைத் தலைவரும் இல்லாமல்.

இது அப்பட்டமான பா.ஜ.க.வின் சட்ட விரோதச் செயல்.

ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண்பேடி பிரதமர் மோடியின் சர்வாதிகாரக் கைப்பாவை.

தமிழகத்தில் பா.ஜ.க. ஒரு கிள்ளுக்கீரை.

ஆனாலும் மோடி அரசுக்கு எதிரான வலிமையான எதிர் அணியும், போராட்டமும் உருவாகவில்லை என்றால் - நாளைய இந்தியா கேள்விக்குறியாகி விடும்.

Pin It