உலகம் சுற்றும் வாலிபனாக மாறிவிட்ட மோடி அவர்கள் மார்ச் 1 ஆம் தேதி மதுரை வருகிறார் என்று சொல்கிறார்கள்.
எதற்கு...? பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொள்ள. என்ன பிரச்சாரம்...? தேர்தல் பிரச்சாரம். எப்படி பிரச்சாரம் செய்வார்...?
ஒன்றிய கல்வித்திட்டத்தை தமிழ்நாடு ஏற்காமல் இந்தியைப் புறக்கணிக்கும்வரை தமிழ் நாட்டிற்குக் கல்விக்கான நிதியைத் தரமாட்டோம்.
இந்தி மொழியைத் திணிக்காமல் விடமாட்டோம். கீழடி ஆய்வுகளை எங்களுக்குச் சாதகமாக மாற்றிச் சொல்லாவிட்டால், அதை ஏற்கமாட்டோம்.
எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் திறப்பதாகச் சொல்வோம், செய்ய மாட்டோம். மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை நிறைவேற்ற மாட்டோம்.
மாநில ஆட்சி என்று நீங்கள் கேட்கக்கூடாது. அந்த வேலையைத்தான் கவர்னர் ரவி பார்த்துக்கொண்டு இருக்கிறாரே!
இதைப்பார்த்தாவது, புரிந்துகொண்டு பெரியார், பெரியார் மண் என்றெல்லாம் பேசாமல் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும். பாரத் மாத்தாகீ ஜே !
இப்படி உண்மையைப் பேசிப் பிரதமர் பிரச்சாரம் செய்வாரா? என்று கேட்கத் தோன்றுகிறது.
அவர் திருக்குறள் சொல்லி, தமிழ் படிக்க முடியவில்லையே என்று எப்படித்தான் உருகி உருகிப் பேசினாலும் தமிழர்களிடம் அவரின் 'பாச்சா' பலிக்காது.
சமத்துவமற்ற, மதவாத, எதேச்சதிகார, சர்வாதிகார ஆட்சியைத் தமிழர்கள் ஏற்கமாட்டார்கள்.
ஏன் தெரியுமா? எங்கள் தந்தை பெரியார் மறையவில்லை, வாழ்ந்து கொண்டு இருக்கிறார், தமிழர் நெஞ்சங்களில்.
அதனால், தலைவர் ஸ்டாலின் சொன்னதுபோல இன்னும் இரண்டு மாதங்களில், வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவைத் துடைத்து எறியப் போகிறார்கள், தமிழர்கள்!
- கருஞ்சட்டைத் தமிழர்