kodanadu estate buildingடெஹல்கா புலனாய்வு ஆசிரியர் மேத்யூ சாமுவேல் டில்லியில்  செய்தியாளர்களிடம் பேசியபோது, அதிமுகவினரின் ஊழல் குறித்த ஒப்புதல் வாக்குமூல ஆவணங்களைக் கொடநாடு மாளிகையில் ஜெயலலிதா வைத்திருந்தார், அதைக் கைப்பற்ற எடப்பாடி நினைத்தார் என்று சொல்லியிருந்தார்.

அன்று தமிழக முதல்வர் எடப்பாடிதான்.

அப்போது உடன் இருந்த, குற்றவாளியாகக் கருதப்படும் சயான், ஜெயலலிதாவிடம் ஓட்டுநராக இருந்த கனகராஜ் (அந்த) முக்கிய ஆவணங்களை எடுக்க தன்னை அழைத்ததாகவும் இதன் பின்னணியில் இருந்தவர் எடப்பாடி என்றும் சொல்லியிருக்கிறார்.

இது தொடர்பாக ஐவர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.

காவலர் ஓம்பகதூர் வாயில் துணி அடைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அவருடன் வேலை பார்த்த கிருஷ்ண பகதூர் காயங்களுடன் கண்டெடுக்கப் பட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் கார் ஓட்டுனராக இருந்த கனகராஜ் கார் விபத்தில் இறந்துள்ளார்.

சயானும் அவரின் மகளும், மனைவியும் கேரளாவில் ஒரு கார் விபத்தில் இறந்து விட்டார்கள். சயான் மட்டும் இன்று சாட்சியாக இருக்கிறார்.

குற்றம் சாட்டப்பட்டவர் கொடுக்கும் வாக்குமூலம் முக்கியத்துவம் பெறுகிறது.

எடப்பாடி ஆட்சியின் இந்த வழக்கு இப்பொழுது  சரியாக விசாரிக்கபடும்போது, எடப்பாடி ஏன் துடிக்கிறார்?

ஆளுநரிடம் ஏன் ஓடுகிறார்?

ஏன் பயப்படுகிறார்?

எடப்பாடியின் இந்தப் பதற்றமே இவரின் மீது ஐயத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

உண்மைக் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும்.

அதற்கு எடப்பாடி இந்த வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும்.

அது அவரின் கடமை!

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It