தமிழ் வழிக்கல்விக்கு எதிராகவும்,ஆசிரியர் பணி நியமனத்தில் சமூகநீதிக்கு எதிராகவும் செயல்படும் தமிழக அரசைக் கண்டித்து 24 - 05 - 2013 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்குச் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் நடைபெற்ற இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்குப் பேரவைப் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் தலைமை தாங்கிக் கண்டன உரை ஆற்றினார். பேரவையின் பொருளாளர் எழில்.இளங்கோவன், தலைமைநிலையச் செயலாளர் மு.குமரன்,இளைஞரணி செயலாளர் மகிழன்,மத்திய சென்னைச் செயலாளர் எட்வின், இலக்குவனார் பேரவைத் தலைவர் உ.தேவதாசு ஆகியோரும் கண்டன உரையாற்றினார்கள்.

வடக்கு மண்டலச் செயலாளர் மு.மாறன்,திருவள்ளூர் மாவட்டத் தலைவர் சூர்யா,காஞ்சி மாவட்டச்செயலாளரஇளமாறன்,அம்பத்தூர் ராஜு,பொன்னேரி ரகுபதி,மோகன்ராம், மேடவாக்கம் அன்பு,அகரம் இளங்கோ,வீரக்கனல்,இளங்கோ உள்படப் பேரவைத் தோழர்களும்,ஆயிரம் விளக்கு மா.பா.அன்புதுரை,வளசரவாக்கம் செயசீலன்,நேருநகர் பாட்சா உள்பட திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களும் திரளாகக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.