தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கர்நாடக நீதிமன்றத்திற்கு, அக்டோபர் 20ஆம் தேதி நேரில் வர வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உறுதியாகக் கூறிவிட்டது. இப்போது புதிதாய் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார். பெங்களூர் விமான நிலையத்திற்கும், தனி நீதிமன்றத்திற்கும் இடையில் தொலைவு கூடுதலாக இருப்பதால், விமான நிலையத்திற்கு அருகிலேயே சிறப்பு நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று கோரியிருக்கிறார்.

அடேயப்பா... நீதிபதிகள் அனைவரும் போயஸ் தோட்டத்திற்கே வந்துவிட வேண்டும் என்று சொல்லாமல் விட்டாரே! அந்த அளவில் நீதிமன்றத்தின் மானமும், மரியாதையும் காப்பாற்றப்பட்டுள்ளதே என்று நாம் மகிழ்ச்சி அடைய வேண்டியதுதான்.

Pin It