கார்முகில் தன்னைச் சூழ
காற்றோடு கிளம்பிய உறவினராம்
இடிமின்னலைத் துணையாய்க் கொண்டு
இமைப்பொழுதில் பூமி இறங்கி
இன்னல்கள்பல நேர்த்து விட்டு
இன்பத்தையும் கொடுக்கின்ற - மழையே!
உனைக் காணும்போது தோன்றுகின்ற
உற்சாகத்தை எழுத வார்த்தையின்றி
இன்ப வெள்ளத்தில் மூழ்கி
ரணகளம் ஆகின்றது என் இதயமே!
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.