சருகுகள் உதிர
தன்னிலை இழக்கிறது மரம்
இலைகள் ஏதுமின்றி
கிளைகளில் வெறுமை படர
வறட்சியை முன்னிறுத்துகிறது
அதனிருப்பு.
எதிர்வரும் பருவத்தை நோக்கி
துளிர்விட தொடங்குகின்றன இலைகள்
தோல்விகளைச் சுமந்து
வெற்றியை நோக்கி
முயற்சிகளைத் தொடரும்
நம்பிக்கை மனிதனென.

More articles by ச.கோபிநாத்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.