என்னைக் கவிதை
எழுதச்சொல்லி
கட்டாயப் படுத்தாதீர்...
உங்களின் பிறந்த நாளுக்கான
பரிசாகவோ,
உங்கள் பதவி உயர்வுக்கான
வாழ்த்தாகவோ,
உங்கள் மேடையில்
உங்களைப் பற்றிய
துதியாகவோ
இருப்பதைக் காட்டிலும்
ஒரு குழந்தையின் கையில்
உடைந்த
பொம்மையாகவேனும்
இருக்கவே விரும்புகிறது
என் கவிதை...

- இரா.பூபாலன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.