என்னிடம் வார்த்தைகள்
இல்லை அல்லது
எனக்கு
பிரயோகிக்கத் தெரியவில்லை.
எனவேதான்
மௌனமாயிருக்கிறேன்
நீங்கள் வாதிக்கையில்...
உங்களின் ஒவ்வொரு
குற்றச்சாட்டுக்கும்
தலையசைப்பே
என்னிடம்
இருக்கின்ற பதில்
அதிக பட்சம்
ஒரு "இல்லை..”.
 
பேசத்தெரியாதவன்
தோற்றுப் போகிறான்
என்பதினாலேயே
கற்றுக் கொள்ள
வேண்டியதில்லை
பேச...

- இரா.பூபாலன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.