பூக்களால் நிரப்பிட
முயல்கிறான்
காலியாகிக் கொண்டிருக்கிறது
அவனது பூக்கூடை
நிசிதோறும் நீளும்
பயணத்தில்
இவனது புறக்கணிப்பை
பொருட்படுத்தாது துணை நின்ற
நிலா நிழலை
காணாது தேடுகையில்
தட்டுப்படுகின்றது
உடைந்த நிலா,
நிலாத் துண்டுகளை
ஒன்று சேர்க்கையில்
ஒரு விம்மலோடு
மடிகிறது நிலா
அவனை வெற்று வானமாக்கி!

- ஸ்ரீமதி

More articles by ஸ்ரீமதி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.