பேசிக் கொண்டிருப்போம்
நேற்றைய பசிக்கு இன்றைய ஆறுதலாய்

வெற்றி கொண்டுவிடுகிறாய்
வெள்ளி முலாம் பூசப்பட்ட வார்த்தைகளாய்

தொட முயற்சித்தும் தோற்றுப் போகிறேன்
நீ கக்கிவிடும் ஏளனப் பார்வையில்

மழைத்துளிக்காய் காத்துக்கிடக்கும்
வெளிவாசலைப் போல்
சுரணையற்ற என் உதடுகள்

விடைபெறுவதற்காய் நீ
அரங்கேற்றும் நாடகத்தில்
நாளைய பசியின் வேட்கையை
தணிக்கும் முயற்சியிலேயே
உறைகிறது என் கணங்கள்

எனை விழுங்கியபடி ஆரம்பமாகிறது
தனிமைப் பசி உன் பிம்பம்
மறையும் முன்னே...

- வீரகரன் மாதேஷ்

More articles by வீரகரன் மாதேஷ்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.