விதைபருவம் கடந்து வந்த
இயல்பற்ற மழையில் காலணியுறையை
கையில் சுழற்றியபடி நடந்து வரும்
சிறுவன் இன்பா தரையில் சில தீவுகளை
உருவாக்குகிறான். மழையைப் பற்றியதொரு
எதிர்மறை  பிம்பத்தை உருவாக்கியபடியே
அவனது உடுப்புகளை கழற்றி உலர்த்தினாள்
அதன் நுனியிலிருந்து சொட்டிய மழையில்
அறையில் வளரும் மெல்லிய வனங்கள்
முதன் முதலாய் நனைகின்றன.

- சி.அதிரதன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.