சென்னை இலௌகிக சங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பான குறிப்புகளைக் கீழ்வரும் பகுதியில் காணமுடிகிறது.

“சென்னை இலௌகிக சங்கம்” இந்தப் புதுப் பெயர் தரித்த பின்பு, இந்தச் சங்கத்திற்கு இந்தப் புதுவருஷம் மூன்றாம் வருஷமாகிறது. இந்தச் சங்கத்துச் சென்ற வருஷத்திய விருத்தாந்தத்தை நமது பத்திரிகா நேயர்களுக்கு வழக்கப்படி சங்கிரகமாகத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

மெம்பர்களும் கையொப்ப நேயர்களும்

287-வருசம் ஜனவரி மாசத்தில் ஜாபிதாவிலிருந்த மெம்பர்கள் சங்கியை 45, இங்கிலீஷ் பத்திரிகைக்கும் தமிழ்ப் பத்திரிகைக்கும் கையொப்ப நேயர்களின் சங்கியை 195. 287-வருசம் டிசம்பர் - மாதம் 31 தேதியிலிருந்து மெம்பர்கள், 41 கையொப்பக்காரர்கள் 165. அநேக ஐரோப்பிய மெம்பர்கள் தேசத்தைவிட்டுப் போய்விட்டார்கள், அநேக கையொப்பக் காரர்கள் மிகுதியாய் பாக்கி வைத்துக்கொண்டபடியால் அவர்களுடைய பேர் அடித்துப் போடப் பட்டது. சுமார் இருநூறு ரூபாய் வரையில் பாக்கி நின்றுவிட்டபடியால், விதியில்லாமல் அப்படிச் செய்யவேண்டி வந்ததற்கான விசனப்படுகிறோம். இந்த வருஷத்திலே கண்டிப்பாய் முன்பணம் வாங்கப்படும், இப்போதிருக்கிற நமது கையொப்ப நேயர்கள் யாவரும் கிரமமாய் பணம் செலுத்து வார்களென்று கோருகிறோம்.

மெஸ்ஸர்ஸ் உல்சன், டேல், மக்ளீன், லாப்லின் அவர்கள் புது கையொப்ப நேயர்களைச் சம்பாதித்துத் தருவதில் மனப்பூர்த்தியான உதவிபுரிந்து வருவதற்காக அவர்களுக்கு வந்தனஞ் செய்கிறோம்.

தின்கர் (இங்கிலீஷ்.)

சங்கத்தைச் சேர்ந்த இந்தப் பத்திரிகை நல்ல ஈடுதாசி யிலே சீராக அச்சிடப்பட்ட எட்டு பக்கங்களுடையதாகத் தான் இன்னுமிருக்கிறது. அதற்கென்று எடிட்டர் இல்லாக் குறையால், “The Truthseeker,” “Secular Thought,” “The Freethinker,” “The National Reformer,” “The Secular Review” “The Liberator” முதலான பத்திரிகைகளிலிருந்து சங்கதிகளைத் தேர்ந்தெடுத்து அச்சிட்டு வருகிறோம். இந்த சங்கதி களில் சிறந்தவைகளாகிய சிலவற்றை சிறுபுத்தகங்களாகவும் பதிப்பித்து வருகிறோம்.

தத்துவவிவேசினி (தமிழ்)

இந்தப் பத்திரிகையை ஸ்ரீ-அ. முத்துசாமி முதலியாரும் பு. முனிஸ்வாமி நாயகரும் கூட்டுப் பத்திராதிபர்களாக வெகு திறமாய் நடத்தி வருகிறார்கள். சிறந்த சில விஷயங்கள் சிறு புத்தங்களாக மறுபடி அச்சிடப்பட்டு நல்ல விலையாகி வருகின்றன. ஸர், ட், மாதவராவ் K.C.S.I. அவர்களால் சோதிட மதிமயக்கத்தைக் குறித்து பிரசுரஞ் செய்யப்பட்ட திறமான புத்தகத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு அவரது அனுமதியின் பேரில் நமது பத்திரிகையில் பிரசுரஞ் செய்யப் பட்டதுமல்லாமல் சிறு புத்தகமாகவும் அச்சிடப்பட்டிருக் கிறது. அது சோதிடத்தை ஒரு சாஸ்திரமாக மதியீனர்களை நம்பும்படிச் செய்கிற மோசத்தைத் தீரத்துடனே வெளி யிடுகிற கிரந்தமாதலால், அதை இவ்வருஷத்தில் விரிவாய்ப் பரவவிட எண்ணங்கொண்டிருக்கிறோம்.

கடைசியில் பொம்பாயிலே இரண்டு கையொப்பக் காரர்கள் சேர்ந்திருக்கிறார்கள், ஆனால் கல்கத்தாவில் இன்னும் ஒருவரும் சேரவில்லை. ஆக்கியாபிலே ஒருவரும் மந்தாலேயிலே ஒருவரும் சேர்ந்திருக்கிறார்கள்; இந்தியா விலே எங்கள் பத்திரிகை செல்லாத பெரிய பட்டணம் ஒன்றுமில்லை.

புத்தக விற்பனை சாலை

புத்தக விற்பனை சாலையானது உள்ளபடி வெகு நன்மை செய்து வருகிறது, திரவிய விஷயத்திலே சங்கத்திற் குப் பேருதவியாயிருக்கிறது, சுமார் ஆயிரம் ரூபாய் பெறு மான சுவக்கியான புஸ்தகங்களும் சிறு புஸ்தகங்களும் இங்கிலாந்திலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் வரவழைக்கப் பட்டு கிட்டத்தட்ட அவையெல்லாம் இந்தியாவின் பல பாகங்களிலும் உடனே விற்பனையாய் விட்டன.

முதற்பணக்குறைவினாலே அடிக்கடி அதிக புஸ்தகங் கள் வரவழைக்கக் கூடாமையாயிருக்கிறது, சொற்ப விராளவுதவி செய்யும்படி கேட்டுக்கொள்ளுகிறோம். விராளம் கொடுக்கக்கூடாமையாயிருப்பவர்கள் எங்கள் புஸ்தகங்களில் சிலவற்றையாவது வாங்குவார்களென்றும், வாங்க இஷ்டமுள்ளவர்களுடைய பேர்களையும் இருப்பிடத் தையும் தெரிவிப்பார்களென்றும் கோருகிறோம்.

“The Freethought Publishing Company,” “The Progressive Publishing Company,” “W.Stewart and Co.,” “Messrs Morrish & Co.,” “The Truthseeker Company” ஆகிய இந்தக் கூட்டத்தார்கள் தாங்கள் பிரசுரஞ்செய்யும் புஸ்தகங்களை எங்கள் சங்கத்திற்குக் குறைந்த விலைக்குக் கொடுத்துவருவ தற்காக அவர்களுக்குப் பின்னுமொருதரம் வந்தனம் செய் கிறோம்.

எங்கள் புத்தக விற்பனை சாலையானது சென்ற வருஷத் தில் உபயோகமான வேலை செய்து வந்ததென்பதை, லண்டன் பட்டணம் எக்ஜிட்டர் ஹாலில் இந்திய மிஷனேரிகள் செய்த ரிபோர்ட்டுகளை வாசிப்பதினாலே சுலபமாய்த் தெரிந்துகொள்ளலாம். இந்தியாவிலே சுதேசி களுக்குள் சுவக்கியானம் அதிகமாய் விர்த்தியாவதைக் குறித்தும் சுவக்கியான புஸ்தகங்களும் சிறு புத்தங்களும் மிகுதியாய்ப் பரவுவதைக் குறித்தும் அவர்களில் ஒவ்வொருவரும் பேசியிருக்கிறார்கள். இந்தியாவிலுள்ள பாடசாலைகளில் மத நூல்களை நுழைப்பதினாலே மிஷினெரி காரியத்திற்கு உதவி புரியும்படி இந்தியாவின் ஸ்ட்டேட்டு செக்ரிட்டேரியவர்களை வருந்திக் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரியவருகிறது.

இந்தியாவிலிருப்பதுபோல பலஜாதியார்கள் கலந்த ஜனங்களுக்குள்ளே எல்லா வகுப்பாருக்கும் ஒத்திருக்கும் படியான ஒருமதநூல் கிடைப்பது அசாத்தியமே. ஆகை யால் மிஷினெரிகளும் துரைத்தனத்தாரும் மத போதனை யாகி உளைச்சேற்றில் உழன்று கொண்டிருக்கையில் நாம் சாந்தமாகவே பார்த்துக்கொண்டிருப்போம். பைபிலை வாசிக்கும்படி சுதேச வித்தியார்த்திகள் எவ்வளவு கட்டாயம் செய்யப்படுகிறார்களோ அவ்வளவு அதிகமாய் பைபிலை யும் கிறிஸ்துமதத்தையும் கண்டிக்கிற சுவக்கியான புஸ்தகங் களும் சிறு புஸ்தகங்களும் எங்கள் புத்தக விற்பனை சாலை யில் செலவாகும்.

விர்த்திக்கிடமானவேலை

கூட்டங்கூடுவதற்கு மந்திரமில்லாமையினாலே கூடி வாசிப்பதற்கும் உபந்நியாசம் செய்தற்கும் தடையுண்டா யிருக்கிறது; இது பெருத்த சங்கட்டமாகக் காணுகிறபடி யால், இன்னும் கொஞ்சகாலவரையில் யாங்கள் சிறு புத்தகங்களையும் பத்திரிகைகளையும் பரவச் செய்து கொண்டு திருப்தியடைந்தே யிருக்கவேண்டும்.

சுவக்கியானவிர்த்திக்காக சங்கத்தாரால் பிரசுரஞ் செய்யப்பட்ட சிறு புத்தகங்கள்:-

இங்கிலீஷ்

Nos

IV. The Decay of Christian Morality by L.K Washburn

V. Social Salvation: A Lay Sermon by Col: R.G. Ingersoll

VI. Why I do not Believe in God by Annie Besant.

VII. The New God by Samuel P. Putnam.

VIII. The Star of Bethlehem by G.W. Foote.

IXChristian Absurdities by John Peck.

X. Our Substitute for Christianity by Edgar C. Beall.

XI Popular Objections to Infidelity by Edgar C. Beall.

XII. Social Problems by Col: R.G. Ingersoll

XIII. Ingersoll’s Reply by to Talmage.(First interview)

XIV. do (Second ,,)

XV. do (Third ,,)

XIX. God the Father and Christ the Son by Charles C.Cattle.

XX. Vindication of Secularism by George Jacob Holy oake.

XXI. Ingersoll’s Reply to-Field..

(தமிழ்)

மெய்யறிவு

பாகம்                அணா     பை

1-வது புலால் - கொலை-மறுத்தல்       ,,3

2-வது ஆத்துமா அழிவில்லாததா        ,,6

3-வது அபிமானமென்பதென்ன           ,,4

4-வது      நல்லொழுக்கத்திற்கு மறுமைப் பயனது

           சித்தாந்தம் அவசியமா?                ,,4

5-வது      இயற்கையறிவும், பகுத்தறிவும்         ,,5

1-வது      இந்துசமயசாரவிளக்கம்      ,,9

2-வது      மேற்படி “தசரதருக்குப் புத்திரருண்டா”

           என்பது,உள்பட              10

           சாதிசமயவாதம்            ,,6

           புராணசங்கை                    ,,3

           இந்துசோதிடம்             16

மேற்கண்டபுத்தகங்கள் யாவும் ஞானஒளியைக் காண நண்பர்களுக்கு உதவிபுரிய இரவல் கொடுப்பதற்கு ஏற்றவை கள், தால்மேஜக்கும் பீல்டுக்கும் இங்கர்சால் எழுதிய மறுமொழிகள் பூர்த்தியான சுவக்கியான ஆயுத சாலை யாகும்; சுவக்கியானி ஒவ்வொருவரும் அவைகள் இல்லாதிருப்பது கூடாமை.

திரவியவிஷயம்

சென்ற வருஷம் வரவுமொத்தம் ரூபாய் 1273-4-3 செலவு ரூபாய் 1408 -4-3. இவ்விதமாய் அதிக செலவு 135-0-0 சங்கத்தாருக்கு கடன் நேர்ந்திருக்கிறது. இந்தக் கடனுக் கீடாக ரூபாய் 200 பெறுமான புஸ்தகங்களும், ரூபாய் 20 பெருமான சமான்களும் கையிருப்பிருக்கின்றன, வெளியில் வரவேண்டிய பாக்கி ரூபாய் 190 வரமாட்டாதென்று தோன்றுகிறபடிiயால் அதை கணக்கில் சேர்க்காமல் தள்ளிவிடலாயிற்று. செக்ரிட்டேரி மிஸ்டர். ஜெ. அப்ஷன் அவர்கள் மேற்படி கடனைச் செலுத்துவதற்காகப் பிரீதி யுடனே வட்டியில்லாமல் ரூபாய் 135/- கொடுத்திருக்கிறார்.

வரவு விவரக் கணக்கு

கையொப்பம்......................................................................................    1230  -     13    -     0

சுவக்கியான வியாபகநிதி...................................................   30    -     15    -     3

டாக்ட்டர் ஆல்பட்டு ஆதரணைநிதி..................11  -     8    -     0

மொத்தம்.  ............................................................................................... 1273  -     4    -     3

சுருக்கியும், இன்னும் மாதாந்தர செலவு ரூபாய் 65 ஆகிறது, ஆனால் எட்டு ரூபாய் சம்பளமுள்ள ஒரு சேவகனுக்கு பதிலாக ஐந்து ரூபாய் சம்பளத்திலே இரண்டு சேவகர்களை வைத்திருக்கிறோம்.

எங்கள் கையொப்பக்காரர்களில் சிலரிடத்தில் கிரமம் குறைவாயிருப்பதைப் பற்றி இங்கே மறுபடி குறிக்க வேண்டியதாயிருக்கிறது, ஆனால் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு பத்திரிகையின் எஜமானனுக்கும் இந்த முறை பாடுதானிருக்கிறது. இந்த தேசத்திலே லௌகிக ஒழுக்க மும் யோக்கியத்தையும் இன்னும் அதிகப்பட வேண்டும்.

புத்தகசாலை

சென்ற வருஷத்திலே அதிகமாய் சில கிரந்தங்கள் சேகரிக்கப்பட்டன, ஆனால் வாசிக்குமிடமில்லாமை யினாலே அதனுடைய உபயோகம் மிகவும் மட்டாயிருக் கிறது.

எங்கள் பத்திரிகைக்கு பதிலாகப் பெறுகிற அடியில் கண்டிருக்கும் பத்திரிகைகள் சென்னையில் வசிக்கிற மெம்பர்களுக்குக் கிரமமாய் அனுப்பப்படுகின்றன:-

The National Reformer

The Truth seeker

The Freethinker

Lucifur

The Secular Review

Secular Thought

The Malthusian

The Liberator

அப்பீல்

தற்காலத்திலிருக்கிற எங்கள் கையொப்பக்காரர்கள் சங்கத்தில் மெம்பர்களாவார்களென்று ஆவலாய்க் கேட்டுக் கொள்ளுகிறோம். எவராவது சேருவதற்குத் தடை யொன்று மிராதென்று தெரிந்துகொள்ளலாம். மாச மொன்றுக்கு உள்ளூர் மெம்பர் ஒரு ரூபாயும் வெளி மெம்பர் பத்தணாவும் கையொப்பம் செலுத்தவேண்டும். மெம்பர்களுக்கு இங்கிலீஷ் பத்திரிகையாவது தமிழ்ப் பத்திரிக்கையாவது ஒவ்வொரு பிரதி இலவசமாகக் கொடுக்கப்படும், இங்கிலாந்திலும் அமெரிக்காவிலுமிருந்து எங்களுக்கு வருகிற சகல சுவக்கியான பத்திரிகைகளும் வாசிப்பதற்காக உள்ளூர் மெம்பர்களுக்கு அனுப்பப்படும். எங்கள் வேண்டுகோள் பிரியத்துடனே அங்கீகரிக்கப் படுமாகில் சங்கத்திற்கு திரவிய சகாயவிர்த்தியுண்டாவது மல்லாமல் மானிடவிர்த்தியையும் சுகத்தையும் விர்த்திசெய்வ தற்கான சங்கத்தின் பெருத்த காரியத்தைப் பின்னும் சீராய் நடத்துவதற்கு அனுகூலமுண்டாகும்.

மகாசபை

288-ம் வருஷம் ஜனவரி மாதம் 29-தேதி ஆதிவாரம் செக்ரிட்டேரியவர்கள் வீட்டில் வருஷாந்தர மகாசபைகூடி அடியில் கண்டிருக்கிற நிகமனங்கள் ஜாரி செய்யப்பட்டன.

(1) செக்ரிட்டேரியால் வாசிக்கப்பட்ட ரிபோர்ட் டை அங்கீகரித்து பத்திரிக்கையில் பிரசுரம் செய்யும்படி தீர்மானம்.

(2) J.F. Clegg Esq. அவர்களை 288-ம் வருஷத்திற்கு சபைத்தலைவராக நேமிக்கும்படி தீர்மானம்.

சபைத்தலைவருடைய வாசஸ்தானமாகிய, நாபியர் பார்க்குதோட்டம், இவின் காட்டேஜில் சபை கூடுவதற்கு ஓர் அறையும் புத்தகசாலையும் ஏற்படுத்துவதற்குப் பிரயத் தனம் செய்யப்படுகிறதென்று சென்னை லௌகிக சங்கத் தின் மெம்பர்களுக்கு அறிக்கையிட சந்தோஷப்படுகிறோம்.

Pin It