தமிழக முதல்வர் கருணாநிதியின் எந்த ஒரு அறிவிப்பும், ஏதாவது ஒரு வகையில், தன்னல நோக்கில் தன் குடும்ப நல நோக்கில், தன் ஆட்சி யதிகாரத்தைப் பாதுகாக்கும் நோக்கு டையதாகவே அதற்கான காய் நகர்த்த லாகவே இருக்கும் என்பது அவரது அரசியலைப் புரிந்தவர்களுக்கு அத்துப் படி.

அது மாநில சுயாட்சியோ, தமிழோ, தமிழீழமோ, தமிழர் நலமோ எதுவானாலும் எல்லாவற்றையும் தேவைப்படும் போது ஊறுகாய் போல தொட்டுக் கொள்ளும் வகையில் இருப்பில் வைத்து பயன்படுத்தி வருபவர் கருணாநிதி.

அந்த வகையில் தான் தற்போது அறிவிக் கப்பட்ட உலகத் தமிழ் மாநாடும் தன்னல நோக் கில் அமைந்துள்ளது.

இலங்கை அரசு மூன்று லட்சம் ஈழத் தமி ழர்களை வதை முகாம் கள் போல முள் கம்பி வேலிக்குள் அடைத்து வைத்து நாள்தோறும் அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக கொன்று வர, நாள்தோறும் பல இளைஞர்களைத் தேர்வு செய்து விசாரணைக்காக என அவர்களைத் தனியே அழைத்துச் சென்று, சித்தி ரவதை செய்து சாகடித்து வர, இளம் பெண்கள் வன் பாலுறவுக்கும், கரு வுற்ற பெண்களை கருச் சிதைவுக்கும் உள்ளாக்கப்பட்டு வரும் நிலையில்,

தமிழகத்தில் காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு நதிநீர் உரிமைகள் பறிபோய் அண்டை மாநிலங்களால் வஞ்சிக்கப்பட்டு வரும் நிலையில்,

தமிழக மீனவர்கள் நாளும் சிங்களக் கப்பற்படையால் சுடப் பட்டும், வேட்டையாடப்பட்டும், கொடுமைப் படுததப்பட்டு வரும் நிலையில், இது பற்றியெல்லாம் கவலைப்படாது, இச் சிக்கல்களைத் தீர்க்க வழி காணாது, இதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியாகவே தற்போது இந்த உலகத் தமிழ் மாநாட்டை அறிவித்திருக்கிறார் கருணாநிதி.

உலகத் தமிழ் மாநாட்டை நடத்த வேண்டியது அனைத்து நாட்டுத் தமிழ் ஆய்வு நிறுவனம். இதன் தலைவர் ஜப்பான் நாட்டைச் சார்ந்த நொபுரு கொரோஷிமா. ஆசிய நாடுகள் ஆய்வு நிறுவனத்தின் தலைவராயிருப்பவர். மாநாட்டு இடம், தேதிகள், நிகழ்ச்சி நிரல் அனைத்தையும் அவரை கலந்து தான் முடிவு செய்ய வேண்டும்.

ஆனால் அவரையும், நிறுவனத் தையும் கலந்தாலோசிக்காமல், அவரது ஒப்புதலைப் பெறாமல் எதேச்சாதிகார நோக்கில் தன்னிச்சையாக இப்படி அறிவித்திருக்கிறார் கருணாநிதி.

ஆனால், அவரது இந்த அறிவிப்பு வழக்கமான துதிபாடி ஜால்ராக்களா ல் பூரித்து வாழ்த்தி வரவேற்கப்பட் டாலும், இந்த அறிவிப்பின் நோக்கத் தையும், அதன் பின்புலத்தையும் அறிந்த விழிப்படைந்த உணர்வாளர்கள், இந்த அறிவிப்பை எதிர்த்து இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழ்ச் சூழலில் தமிழ்ப் படைப் பாளிகள் முன்னணி உடனடியாக இதைக் கண்டனம் செய்து அறிக்கை வெளியிட்ட துடன், தமிழகத்தில் உள்ள அனைத்து கலை இலக்கிய அமைப்பு களின் பொறுப்பாளர்களையும் உடன் கூட்டி இதைக் கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றி உலகத் தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள், உணர்வாளர்கள், படைப்பாளிகள் யாரும் இந்த மா நாட்டில் கலந்து கொள் ளாது இதைப் புறக் கணிக்க வேண்டும் என தமிழ் படைப்பாளி கள், உணர்வாளர்கள் கூட்டமைப்புசார்பில் வேண்டுகோளும் விடுத்துள்ளது.

உலகெங்கும் வாழும் தமிழர்களும், தமிழ் அறிஞர்களும் வெவ்வேறு வகையில் தங்கள் வெறுப்பையும், அதிருப்தியையும் வெளியிட்டுள்ளனர்.

அனைத்து நாட்டு தமிழ் ஆய்வு நிறுவனத் துடன் தேதியை உறுதி செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இவை எல்லா வற்றையும் கணக்கில் கொண்டுதான் மாநாட்டை ஜூன் மாதத்திற்குத் தள்ளி அறிவித்திருக்கிறார் கருணாநிதி.

தி.மு.க. தலைவர் கருணாநிதி 5 முறை தமிழக முதல்வராகப் பொறுப் பேற்று 15 ஆண்டுகளுக்கு மேலாக அப்பதவியை வகித்து வந்தாலும், 1967இல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நாளிலிருந்து அண்ணா, அதன் பின் எம்.ஜி.ஆர். பின் ஜெயலலிதா என எல்லாரது ஆட்சிக் காலத்திலும் தமிழகத்தில் உலகத் தமிழ் மாநாடு நடந் துள்ளது. ஆனால், தமிழினத் தலைவர் பட்டம் சுமந்து திரியும் கருணாநிதி ஆட்சியில் மட்டும் தமிழகத்தில் இப்படிப்பட்ட மாநாடு எதுவும் நடக்கவில்லை. தமிழினத் தலைவர் அக்கறை அப்படி. ஆனால் தற்போது திடீரென இப்படி ஒரு அக்கறை பிறந்துள்ளது.

அதாவது இப்படி எதையாவது நடத்தி தமிழ் மக்களின் கவனத்தைத் திசை திருப்ப வேண்டிய அவசியம் நேர்ந்துள்ளது. அதே வேளை தன் தமிழினத் தலைவர் மணி மகுடத்திலும் ஓர் அணிகலனைச் சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பும் கிட்டுகிறது. எனவே இவை எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு தான் உலகத் தமிழ் மாநாட்டை அறிவித்திருக்கிறார் கருணாநிதி.

அது சரி, மாநாடு கோவையில் நடத்தப்படுவதன் நோக்கம், மேலோட் டமாகப் பார்க்கிறவர்களுக்கு, சென்னை, தஞ்சை, மதுரை, அதாவது தமிழகத்தின் வடக்கு தெற்கு கிழக்கு என மூன்று திசைகளிலும் நடத்தியாயிற்று. ஆகவே மேற்கு பகுதியான கோவை யில் இந்த முறை என்று அப்பாவியாக சிலர் நினைக்கலாம். அது மேலுக்குச் சொல்லப்படும் காரணம்.

ஆனால், உண்மைக் காரணம் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் வாக்கு வங்கி மிகப் பலவீனமாயிருந்த பகுதிகள் மேற்கு மாவட்டங்கள்தானாம். இங்கு அதிமுக மற்றும் கொங்கு நாடு பேரவையின் செல்வாக்கே அதிகம் என்பதால், இங்கு தி.மு.க.வின் செல் வாக்கை வலுப்படுத்தும் நோக்கி லேயே கோவை தெரிவு செய்யப்பட் டதாம்.

உலகத் தமிழ் மாநாடு என்றால், மாநாடு நடக்கும் பகுதிகளைச் சுற்றிலும் சாலை வசதிகள், குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள், பிற ஆக்கப் பணிகள் கட்டிடங்கள் என பலதும் செய்ய வேண்டியிருக்கும் என்பதால் இதை வைத்தே பகுதி மக்களிடம் தி.மு.க. வின் செல்வாக்கை உயர்த்தி விடலாம் என்பதும் ஒரு திட்டம்.

இதுவன்றி, மாநாடு எங்கு நடத்தினாலும் இது போன்ற ஆக்கப் பணிகளுக்கான காண்ட்ராக்ட் கொள்ளை என்பது தனி. அது எப் போதும் போல கொட்டோ கொட்டு என்று கொட்டத்தான் போகிறது.

எனவே, இப்படிப்பட்ட பல நோக்குத் திட்டத்தோடு அறிவிக்கப் பட்டிருப்பதுதான் கோவை உலகத் தமிழ் மாநாடு.

- உணர்வுள்ள தமிழர்கள் இதை எதிர்க்கவேண்டும். தன் மரியாதை மிக்க மானமுள்ள தமிழர்கள் இந்த மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும்.

இதுவரை நடந்துள்ள உலகத் தமிழ் மாநாடுகள்

முதல் மாநாடு 1966 ஏப்ரலில் மலேசிய நாட்டின் கோலாலம்பூரில் நடைபெற்றது. அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர் பக்தவச்சலம். 2வது மாநாடு 1968, சனவரி - சென்னை. தமிழக முதல்வர் அண்ணாதுரை. 3வது மாநாடு 1970 - பாரீஸ், தமிழக முதல்வர் கருணாநிதி. 4வது மாநாடு 1974 சனவரி - யாழ்ப்பாணம், தமிழக முதல்வர் கருணாநிதி. (இதில்தான் 9 தமிழர்கள் சிங்கள வெறிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர்) 5வது மாநாடு 1981 - மதுரை, முதல்வர் எம்.ஜி.ஆர். 6வது மாநாடு 1987 நவம்பர் - கோலாலம்பூர், முதல்வர் கருணாநிதி. 7வது மாநாடு 1989 திசம்பர் - மொரிஷியஸ் நாட்டின் மோகா, தமிழக முதல்வர் கருணாநிதி. 8வது மாநாடு 1995 சனவரி - தஞ்சை. தமிழக முதல்வர் ஜெயலலிதா.

இதில் கருணாநிதி தாம் முதல்வராயிருந்த போது நடைபெற்ற பாரிஸ், கோலாலம்பூர் மாநாடுகளில் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றியுள்ளார் எனினும், அவர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் இம்மாநாடு நடைபெறவில்லை என்பதால் அந்தக் குறையை இந்த மாநாடு தீர்த்து வைக்கும் என்பதாலும், இதை நடத்த அவர் திட்டமிட்டுள்ளதாகப் பேசப்படுகிறது.

அதோடு மாநாடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதற்கும் தற்போது எழுந்துள்ள எதிர்ப்புகளை சரிக்கட்டி இந்தியாவில் உள்ள ஈழ அகதிகளுக்கு குடியுரிமை பெற்றுத் தந்தும், ஈழ முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு ஓரளவுக்கு மறுவாழ்வுக்கு உத்திரவாதம் செய்தும் இதற்கான கதாநாயகனாக தன்னைக் காட்டிக் கொள்ளும் முயற்சியும் இதற்குக் காரணமாக அடங்கியுள்ளதாக கருதப்படுகிறது.

தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் தி.மு.க. அரசு

முல்லைப் பெரியாறு சிக்கலில் வேறு புதிய அணை கட்டும் முயற்சிக்கான அடிப்படை ஆய்வுப் பணிகள் கடந்த இரண்டாண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் அதைத் தடுத்து நிறுத்த மத்திய அரசை வலியுறுத்தி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத தமிழக முதல்வர் கருணாநிதி மத்திய அரசு அனுமதி தராது, தந்ததாகத் தெரியவில்லை, தராது என்று நம்புகிறோம் என இத்தனை காலமும் வழவழா, கொழகொழா அறிக்கைகளை விட்டு, தற்போது மத்திய அரசு அனுமதியளித்தது அம்பலமான பிறகு, மக்களும் பிற எதிர்க் கட்சிகளும் குடாய்ந்த பிறகு, வழக்கமான கண்துடைப்பாக இந்தப் பிரச்சினையில் நீதிமன்றம் போகப் போவதாக அறிக்கை விட்டிருக்கிறார். இதற்கு மற்ற கட்சிகளும் பாராட்டு தெரிவித்திருக்கின்றன.

சரி, அனுமதி அளித்த தில்லி அரசை நேரடியாகக் கண்டிக் காமல், நீதிமன்றம் போய் இவர் என்னத்தைச் சாதிக்கப் போகிறார். சிலகாலம் வழக்கு நடைபெற்றாலும், தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக வரும் என்பது என்ன நிச்சயம். அப்படியே வந்தாலும் அது நிறைவேறும், நிறைவேற்ற இவர் நடவடிக்கை எடுப்பார் என்பது என்ன நிச்சயம்.

முல்லைப் பெரியாறு நீர்த்தேக்க அளவை 136 அடியை, 142 ஆக உயர்த்திக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்த பிறகும் அதை நிறைவேற்றாது பின்வாங்கியவர்தானே கருணாநிதி. இந்த நிலையில் இந்தத் தீர்ப்பு வந்துதான் என்னவாகப் போகிறது?

இந்த நிலையில் இதுவும் ஒரு ஏமாற்று, திசை திருப்பு முயற்சிதான். பந்தை நீதிமன்றத்திற்குத் தள்ளிவிட்டு எனக்கு எதுவும் தெரியாது, சட்டமாச்சு, நீதியாச்சு என்று பிரச்சினையைக் கைகழுவும் வேலைதான். இதை மற்ற கட்சிகளும் வரவேற்பதுதான் பரிதாபமாக உள்ளது. ஒரு வேளை எல்லோருக்குமே இப்போதில்லா விட்டாலும், எப்போதாவது தில்லியோடு கூட்டு வைக்க வேண்டிவரும், எதற்குப் பகை என்ற தயக்கத்தில் தில்லியை எதிர்க்காமல் இருக்கிறார்களா? புரியவில்லை.

 

Pin It