தமிழீழ விடுதலைப் போராட்டம் கடும் நெருக்கடிகளையும் பின்னடைவு களையும் சந்தித்து தாற்காலிகமாக ஒரு தேக்க நிலைக்கு வந்துள்ளது. போராளி அமைப்பின் முக்கிய தலைவர்கள், படைத் தளபதிகள் கொல்லப்பட் டுள்ளனர். புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக் கிறாரா, இல்லையா என்பது உறுதி செய்யப்படாத தகவலாக, அனுமானங்களாக வலம் வந்து கொண்டிருக்கிறது. சிங்கள இனவெறித் தாக்குதலால் உறைவிடத்தையும் உடைமைகளையும் விட்டு சொந்த மண்ணிலேயே அகதிகளாய்த் திரியும் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழ்மக்கள் அன்றாடம் உண்ண உணவின்றி, பட்ட கொடுங் காயங்களுக்கு மருந்தின்றி, அடுத்த வேளை இருப்பே கேள்விக் குறியாய், எதிர் காலம் என்பதே நம்பிக்கை யற்றதாய் அவதிகளுக்கும் அல்லல்களுக்கும் ஆளாகித் திரிந்து கொண்டிருக்கின்றனர்.

இவ்வளவு கொடு மைகளும் பக்கத்தில் கூப் பிடு தூரத்தில் உள்ள தாய்த் தமிழகத்தின் ஆறரைக் கோடி மக்களின், அவர்களின் கண்பார்வையின் முன்னே அவர்களை வெறும் பார்வையாளர்களாக, சாட்சியாக வைத்து நடந்து கொண்டிருக் கிறதே என்பதுதான் மிகப்பெரும் சோகம். உலகில் எத்தனையோ இனங்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றன. ஒரு கோடிக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட தேசிய இனங்கள் எல்லாம் கூட தங் களுக்கென்று இறையாண்மை மிக்க சுதந்திர நாடுகளைப் பெற்று ஐ.நா. அவையில் இடம் பெற்று உலக அரங்கில் கண்ணியமிக்க வாழ்க்கை வாழ்ந்து வருகின்றன. ஆனால் உலகெங்கும் விரவி வாழும் 10 கோடி மக்கள் தொகையைக் கொண்ட தமிழர்களுக்கு என்று தனியாக ஒரு நாடு இல்லை. இறையாண்மை மிக்க ஒரு தேசமில்லை. இருந்திருந்தால் ஈழத் தமிழர்கள் இப்படி ஒரு அவலத்தைச் சந்தித்திருக்க நேர்ந்திருக்காது. தங்களுக் கென்று சுதந்திரமாக ஒரு நாடு அமை யும் வாய்ப்பையும் இப்படி அநியாய மாக இழக்க வேண்டி இருந்திருக்காது.

உலகெங்கும் உரிமைகளுக்காகப் போராடிய தேசிய இனங்களுக்கெல் லாம் அவர்களது போராட்டங்களுக்கு ஒரு பின்புலம் இருந்தது. உதவுவதற்கு என்று சில நாடுகள் இருந்தன. போரில் காயம் பட்டால் மருத்துவம் பார்த்துக் கொள்ள, இளைப்பாற, புகல் அடைய அவை துணை புரிந்தன. ஆனால் இப் படி எந்தப் பின்புலனும் இன்றி, உதவுவதற்கும் யாரும் இன்றி, சுற்றிலும் எதிரிகள் சூழ, எதிரிகளுக்கு மத்தியில் நின்று போராடி வந்தனர் விடுதலைப் புலிகள். தாய்த் தமிழ்நாடு அண்டையில் இருந்தாலும், அது இந்திய தேசியச் சிறைக்குள் சிக்கி, போராடும் தங்கள் சொந்தங்களுக்கு, அல்லல் படும் மக் களுக்கு நேரடியாக ஏதும் செய்ய முடி யாத வகையில் அதன் கரங்கள் கட்டப் பட்டிருந்தன. தமிழ் மக்களின் ஆன்மா ஒடுக்கப்பட்டிருந்தது.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஈழப் போராளிகளின், ஈழ மக் களின் இவ்வளவு இன்னல்களுக்கும், இழப்புகளுக்கும் அவர்கள் அனுப வித்த கொடுமைகளுக்கும் தாய்த் தமிழகமும் ஒரு காரணமில்லையா.... சிங்கள இனவெறி அரசு எதிரி தாக்கு கிறான். அந்த தாக்குதலுக்கு தமிழின விரோத தில்லி அரசு உதவுகிறது. அதற்கு தமிழினத் துரோக தமிழக ஆட்சியாளர்கள் துணை போகிறார்கள். இதை யார் தட்டிக் கேட்பது?

தமிழகம் இறையாண்மை மிக்க தனித் தேசமாயிருந்தால், தமிழகத்திற் கென்று ஒரு தனி ராணுவம் இருந்திருந் தால், போராடும் புலிகளுக்கு தமிழீழ மக்களுக்கு ஆதரவாக நாம் சிங்கள அரசோடு போருக்குப் போயிருக் கலாம். அந்தப் புறநிலை இருப்பு, இறையாண்மை நமக்கு இல்லை. நாம் நேரடியாக சிங்கள அரசோடு போருக்கு போக முடியாது சரி. நம்மை ஆளும், நம்மை கட்டிப் போட்டிருக்கும், முடக்கி வைத்தி ருக்கும் தில்லி அரசை யாவது தட்டிக் கேட்டு, சிங்கள அரசுக் கான அதன் உதவியைத் தடுத்தி நிறுத்தி யிருக்கலாம் இல்லையா. அதை நாம் உரியவாறு, உரிய முனைப்போடு, முழு தீவிரத்தோடு முடியுமா, முடியாதா.... இரண் டிலொன்றைப் பார்த்து விடுவது என்கிற உக்கிரத் தோடு செய்தோமா? அப்படிச் செய் திருந்தால் ஈழத் தமிழ் மக் களுக்கு இப்படிப்பட்ட பேரழிவு நேர்ந்திருக்குமா, நியாயமாய்த் தமி ழகமே இதில் ஒன்றுபட்டுக் கொந்தளித் திருக்க வேண்டும். ஆனால் அப்படி முழுமையாய்க் கொந்தளிக்க விடாமல், தமிழக ஆளும் கட்சியும், ஆட்சியாளர் களும், பல்வேறு வகைகளில் இதை அடக்கியும், ஒடுக்கியும், திசை திருப்பியும் தணித்தும் தன் தன்னலவாத அரசி யலைப் பாதுகாத்துக் கொள்ள தமிழினத் துக்கு துரோகம் புரிந்தார்கள். சரி, அது போகட்டும் என்று இருக்கிற இதர கட்சிகள், அமைப்புகளாவது நாம் நமக்குள் ஒன்றுபட்டு தீவிரமாகக் களம் இறங்கினோமா? இல்லையே.

1983 தொடங்கி, இந்த 2009 வரை கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நாம் நடத்திய போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், மாநாடுகள் முதலான வற்றைப் பட்டியலிட்டுப் பாருங்கள். அவற்றால் நாம் கண்ட பலன் என்ன? இழப்பைத் தள்ளிப் போட அவை பயன்பட்டனவே தவிர, இழப்பைத் தடுத்து நிறுத்த அவை பயன்பட வில்லை என்பதுதானே ...இதிலிருந்து நாம் பாடம் கற்றோமா?

அது போகட்டும், கடந்த செப் டம்பர் மாதம் முதல் இதோ இந்த மே வரை கிட்டதட்ட ஒன்பது மாதங்கள், தமிழகமே பொங்கி எழுந்து போராடி யதே, தமிழகத்தில் ஈழ மக்களுக்கு ஆதரவாகப் போராடாத மக்கள் பிரிவே இல்லை என்னும் அளவுக்கு, அப்படி யாரும் போராடாது இருந்திருந்தால் அது ஒரு சமூகக் குற்றம், களங்கம் ஆகிவிடும் என்பதுபோல அனைத்துப் பிரிவு மக்களும் போராடினார்கள். இப்படிப் போராடும் மக்களை ஒருங் கிணைக்க, வழி நடத்த,போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல நம்மிடம் நம்பிக்கையூட்டும் ஒரு அமைப்பு உண்டா, தலைமை உண்டா.... எல்லாரும் என்ன செய்தோம். வழக்கமான ஊர்வலம், ஆர்ப்பாட்டம், போராட்டம், பொதுக்கூட்டம், மனித சங்கிலி, சம்பிரதாய மறியல், காலை கைது, மாலை விடுவிப்பு என ஏதோ கொந்தளிக்கும் மக்களுக்கு பராக்கு காட்டுவது போல் இதுபோன்ற போராட்டங்களையே நடத்திக் கொண்டிருந்தோம்.

நாம் பாட்டுக்கு நாம் போராட, தில்லிக்காரன் பாட்டுக்கு அவன் எப்போதும் போல சிங்கள அரசுக்கு உதவிக் கொண்டிருந்தான். பல படைக் கலன்கள் தமிழ்நாட்டு வழியாகவே போயின. சரி, போராட்டம் நடத்துவதன் நோக்கம் என்ன, முன்வைக்கும் கோரிக் கையில் ஒரு சிறு துளியாவது முன் நகர வெற்றி பெறத்தானே.. அப்படி எதுவும் இல்லாமல் நம்முடைய போராட் டத்தைத் துளியும் மதிக்காமல், துச்ச மாகக் கருதி தில்லிக் காரன் பாட்டுக்கு சிங்கள அரசுக்கு உதவினான். உதவு கிறான் என்றால் என்ன பொருள்? தில்லிக்காரன் நம்மை மதிக்கவில்லை என்பது மட்டுமல்ல, நம்முடைய போராட்டத்துக்குப் பலனுமில்லை என்பதுதானே....

நம்முடைய போராட்டங்கள் இப்படிப் பலனற்றுப் போகிறதே என்று நாம் போராட்ட முறைகளை மாற்றி னோமா? எந்த வகையிலாவது தில் லிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று யோசித்தோமா. அதில் முனைப்பு காட்டினோமா. இல் லையே. ஈழ ஆதரவுப் போராட்டம் ஏதோ பத்தோடு பதினொன்றாக அதுவும் ஒன்று என்பது போல யார் வீட்டு எழவோ, பாயப் போட்டு அழுவுஎன்பது போல ஒப்புக்கு மாரடித்தோம். இதுதானே நடந்தது.

தமிழக மக்கள் திரும்பத் திரும்பக் கேட்கிறார்கள். மற்ற கட்சிகளை விடுங்கள். ஈழ ஆதரவுக் கட்சிகள். இந்தக் கட்சிகள் இதுவரை நடத்தி வந்த போராட்டங்களைத் தாண்டி வேறு எந்த வகைப் போராட்டத்தையுமே நடத்தி யிருக்க முடியாதா. நாம் முனைந்திருந் தால் ஒரு வாரம் தமிழகத்தை நிலை குலையச் செய்து அசைவற்று நிற்கச் செய்திருக்க முடியாதா... அப்படிச் செய்திருந்தால் தில்லி நிலைமையில் அதன் அணுகு முறையில் ஒரு மாற் றத்தை ஏற்படுத்தியிருக்க முடியாதா. அப்படித் தமிழகத்தைப் பொங்கி எழ வைத்திருந்தால் மன்மோகன் சிங்கோ, சோனியாவோ இப்படிச் சாதாரணமாக தமிழகம் வந்து போவதைப் பற்றி நினைத்துப் பார்த்திருப்பார்களா... இப்போது வந்தது போல வந்துதான் போயிருக்க முடியுமா.... ஆனால் நாம் எதுவுமே செய்யவில்லையே.

இந்தச் செயலற்ற நிலையைப் பார்த்து வயிறு எரிந்து எரிந்துதான் உள்ளம் குமுறிக் குமுறித்தான் தமிழ் நாட்டிலும் வெளியிலுமாக 17 இளை ஞர்கள் தீக்குளித்தனர். அப்போது கூட நாம் இரங்கவில்லையே. பதை பதைக்கவில்லையே. உயிரை உர மாக்கித் தந்த இளைஞர்களுக்கு - ஈழப் போராளிகளுக்கும் ஈழப் போரில் உயிர் நீத்த அப்பாவி மக்களுக்கும் இரங்கல் தெரிவித்தது போலவே இவர்களுக்கும் - இரங்கல் உரை நிகழ்த்திவிட்டு வந் தோம். இதைத் தாண்டி வேறு என்ன செய்தோம். அந்த இளைஞர்கள் நம் மிடம் இதைத்தான் எதிர்பார்த்தார் களா. இதற்குத்தான் அவர்கள் தீக் குளித்தார்களா. அவர்களுக்கெல்லாம் இறப்புக்குப் பின்னும் ஆன்மா என்று ஒன்று நிலவி, அது ஈழத்தில் நடை பெற்ற கொடுமைகளையெல்லாம் கேள்விப்பட்டால் என்ன பாடுபடும்? இதற்காகவா நாம் தீக்குளித்தோம். இவ்வளவுதானா நம் தலைவர்கள் என்று துடிக்காது....

தலைமைப் பொறுப்பில் உள்ள வர்கள் தம் இனத்துக்கு தம் மக்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் துடிக்க வேண்டும். அவர்களைக் காக்க, அவர்களை இத்துயரத்திலிருந்து மீட்க முயலவேண்டும். முன் கூட்டியே உரிய நடவடிக்கைகளை மேற் கொண்டு அவர்களுக்கு நேரவிருக்கும் துயரைத் தடுக்க வேண்டும். அதை விட்டு தம் மக்களுக்கு எல்லாக் கொடுமையும் நேரவிட்டு,நேர்ந்த கொடுமைகளை அலங்கார வார்த்தைகளால் வருணித்து வீர வசனம் பேசிக் கொண்டிருக்கவா தலைவர்கள்? இதனால் என்ன பலன்? அது எந்தப் பல னையும் தராது. தரவில்லை. ஆனால் ஈழச் சிக்கலில் நம்மில் பெரும்பாலா னவர்கள் இதைத்தான் செய்தோம்.

ஆட்சியாளர்கள் ஈழக் கொடு மையைப் பார்த்து கவலையளிக்கிறது, வருத்தம் தருகிறது, ஏற்க முடியாது என்று தமிழக மக்களுக்கு கண் துடைப்பு அறிக்கைகள் விட்டு அவர்களது உணர்வுகளுக்கு ஒத்தடம் கொடுக்க முயன்றது போன்று, நாமும், ‘கண்டிக்கிறோம்’ ‘தடுத்து நிறுத்து’ ‘உதவி செய்யாதே’ ‘திரும்பப் பெறுஎன்று அறிக்கைகள் விட்டுக் கொண் டிருந்தோம். தமிழகத் தலை வர்கள் நினைத்திருந்தால் இதை எப்போதோ தடுத்து நிறுத்தியிருக்க முடியும். அநியாயமாகச் செத்து மடிந்த ஆயிர மாயிரம் அப்பாவித் தமிழர் களைக் காப்பாற்றியிருக்க முடியும். போராளி கள் பலர் பலியாகாமல் காத்திருக்க முடியும். ஆனால் எதுவுமே இல்லாமல் நாமெல் லாம் இருந்து கொண்டே இவ்வளவு பேரைச் சாகவிட்டோமே, போராளிகள் பலரை பலியாக விட் டோமே என்கிற ஆத்திரம்தான் எப்படி நினைத்தாலும் சமாதானம் செய்து கொள்ள முடியாத, ஆற்றமாட்டாத அடங்கமாட்டாத பொருமலாக மனதை அவதிக்குள்ளாக்கிக் கொண்டிருக்கிறது.

சரி, நடந்தது நடந்தது. இனிமேல் நினைத்துப் பார்த்து மீளவா வந்து விடப் போகிறது என்று மனதைத் தேற்றிக் கொள்வதானாலும், குறைந்தபட்சம் இந்த அனுபவத்தை ஒரு பாடமாக வேனும் எடுத்துக் கொள்ள வேண்டும். இதிலிருந்து பாடம் கற்று அடுத்தடுத்த இலக்குகளை நோக்கி நாம் நம் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். இதற்கு கீழ்கண்டுள்ள கருத்துகளை நம் தலைவர்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

1. தற்போது தமிழக உரிமை களுக்கு குரல் கொடுக்கிற தமிழக மக்களின் நலன்களைப் பாதுகாக்கிற வலுமிக்க ஒரு கட்சி, அமைப்பு என்பது தமிழ்நாட்டில் இல்லை. ஆகவே அப் படிப்பட்ட ஒரு வலுமிக்க அமைப்பை நாம் உருவாக்கியாக வேண்டும். இது உடனடியாக ஒரு அமைப்பாக சாத்தியப் படாது என்பதால் தற்போது அதிமுக அணியில் உள்ள கட்சிகளே இப்படிப் பட்ட ஒரு கூட்டமைப்பை உருவாக்க லாம்.

2. இப்படி உருவாக்கப்படும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு தமிழக உரிமைகளும், தமிழக மக்கள் நலனும் முதன்மைப் பொருளாக இருக்கவேண்டும். தற் போது எந்தக் கட்சிக்கும் இது முதன் மைப் பொருளாக இல்லை. தங்களு டைய நாற்காலி அரசியலுக்கு, பதவி வேட்டைக்கு தமிழக உரிமை, தமிழர் நலன் என்பது ஊறுகாய் போல் தொட்டுக் கொள்ளும் பொருளாக இருக்கிறதேயன்றி உரிமைப் பொரு ளாக இல்லை. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

3. இதற்கு இந்தக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் தாங்கள் எதற்காக கட்சி நடத்துகிறோம் என் பதைத் தங்களுக்குத் தாங்களே கேட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒவ் வொரு கட்சியும் தொடங்கும்போது கொள்கை, கோட்பாடு எனத் தொடங் கினாலும், போகப்போக பதவி வேட்டை, நாற்காலி மோகம் எனத் திரிந்து விடுவதால் பின் அதுவே முதன் மைப் பொருளாகி கட்சி நடவடிக்கை கள் அதை நோக்கியதாக இருந்து விடுகின்றன. இதைத் தலைவர்கள் உணர்ந்து இப்போக்கினை மாற்றுவது குறித்து கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

4. அரசியல் கட்சிகள் இயக்கங் களின் வரலாறு அதன் பதவிகளால் தீர்மானிக்கப் படுவதில்லை. மாறாக அதன் கொள்கை, கோட்பாடுகள், அது சார்ந்த அதன்போராட்டங்கள் செயல் பாடுகள், அர்ப்பணிப்பு தியாகம் ஆகிய வற்றாலே தீர்மானிக்கப்படுகிறது என்பதை வாய்ப்பு நேரும் போதெல் லாம் நினைவூட்டி வலியுறுத்தி வரு கிறோம். இதில் இத்தலைவர்கள் தாங்கள் கொள்கை வழி நடக்கிறோம் என்றால் இதன்படி நடக்கட்டும். இல்லை நாங்கள் நாற்காலி அரசியல் தான் நடத்துகிறோம் என்றால் தாராள மாக நடத்திக் கொள்ளட்டும். நாம் யாரும் அதில் குறுக்கிட்டு ஆலோசனை வழங்கிக் கொண்டிருக்கப் போவ தில்லை. கொள்கை வழி நிற்பதாகச் சொல்பவர்களுக்கே இந்தப் பரிந்துரை.

5. இப்படியெல்லாம் பரிந்துரைப் பதை வைத்து சிலபேர், இந்தத் தேர்தல் கட்சிகளின் மூலமே தமிழ்த் தேசப் புரட்சி வந்து விடும். தமிழக நலன்கள் பாதுகாக்கப்பட்டு விடும் என்று நம்பு கிறீர்களா என்று கேட்கிறார்கள். நாம் அப்படி நம்பவுமில்லை. சொல்லவு மில்லை. இந்தத் தேர்தல் அரசியலில் நின்றே இதற்குக் குரல் கொடுக்கலாமே. இது அவர்களது தேர்தல் அரசியலுக்கும் கூட கை கொடுப்பதாக இருக்குமே என்கிற பொருளில்தான் சொல்கிறோம்.

காட்டாக, தமிழகத்தைப் பாதிக் கும் பிரச்சினைகளுக்கு இப்படி ஒரு கூட்டமைப்பு உருவாகி அது தொடர்ந்து குரல் கொடுத்து, தொடர்ந்து போராடி வந்தால் தமிழக மக்களின் கவனம் இக்கூட்டமைப்பு பால் திரும்பும், தமிழக மக்கள் இதற்கு ஆதரவு தரு வார்கள். தங்களை இதில் அணி சேர்த்துக் கொள்வார்கள். இப்படி ஆகும்போது ஆளும் கட்சிகள் இதைக் கண்டு அஞ்சும். தங்கள் வாக்கு வங்கி எங்கே பறிபோய் விடுமோ என்கிற அச்சத்திலாவது தமிழக உரிமைகளை மீட்க எதையாவது செய்யும்.

அதாவது தேர்தல் களத்தில் வெறும் நாற்காலிப் போட்டிகளி லேயே இக்கட்சிகள் செயல்படும் நிலை மாறி, தமிழக உரிமைகள் பற்றி, தமிழக மக்கள் நலன் பற்றிப் பேசாமல் கட்சி நடத்த முடியாது என்கிற நிலை ஏற் படும். தமிழக உரிமைகள் காப்பதில் நான்தான் வீரன், நான்தான் சாதனை யாளன் என்கிற போட்டி ஏற்படும். இப்படிப்பட்ட போட்டி சார்ந்த நட வடிக்கைகள், பிரச்சாரங்களில் தமிழக மக்கள்பால் இதுசார்ந்த விழிப்புணர்ச்சி ஏற்படும். இந்த விழிப்புணர்ச்சியின் வழி அடுத்து வரும் தலைமுறை இது பற்றிய ஞானம் பெறும். இத்தேர்தல் அரசியலின் அனுபவத்தை வைத்து, அது தமிழக உரிமைகள் மீட்க, தமிழக நலன் காக்க புதிய போராட்ட உத்தி களை வகுக்கும்.புதிய எழுச்சியை உரு வாக்கி புதிய இலக்குகளை அடையும் என்கிற அந்தப் பொருளிலேயே நாம் இதை வலியுறுத்துகிறோம்.

ஆகவே, தமிழக நலன்காக்கும் குறைந்தபட்ச திட்டத்தின் அடிப்படையில் இப்படிப்பட்ட ஒரு நிலைத்த கட் டமைப்பை உருவாக்குவது பற்றித் தலைவர்கள் சிந்திக்க வேண்டும். இப் படிப்பட்ட ஒரு கூட்டமைப்பு ஏற் கெனவே இருந்திருந்தால் ஈழம் பற்றி எரிந்து கொண்டிருந்த தருணத்தில் அது ஈழத்துக்காக தீவிரமாக குரல் கொடுத் திருக்கும். முழு மூச்சோடு களம் இறங் கிப் போராடியிருக்கும். இப்படிப் போராடியிருந்தால் பல்லாயிரக் கணக் கில் அப்பாவி மக்கள் அநியாயமாக இப்படி கொல்லப்பட நேர்ந் திருக்காது. ஈழ விடுதலைப் போராட்டமும் இப் படிப்பட்ட பின்னடைவைச் சந்தித் திருக்க நேர்ந்திருக்காது.இத்துடன் தமிழகத்தில உள்ள போலிப் போராளி களும் மக்கள் மத்தியில் அம்பலப் பட்டுப் போய் உண்மைப் போராளி களை மக்கள் அடையாளம் கண்டிருப் பார்கள். அவர்கள் பின்னால் அணி திரண்டிருப்பார்கள். அது தேர்தல் அரசி யலுக்கும், வாக்கு வங்கிகளைப் பெறு வதற்கும்கூட பெரிதும் பயனுள்ளதாய் இருந் திருக்கும்.

ஆனால் அப்படிப்பட்ட ஓர் அரிய வாய்ப்பை நழுவவிட்டனர் நம் தலை வர்கள். இது அவர்களது சொந்த கட்சிக் கும் இழப்பு. தமிழகத்துக்கும் இழப்பு. தமிழீழத்துக்கும் இழப்பு என்பதைத் தமிழர்களும் தமிழகத் தலைவர்களும் உணரவேண்டும். இந்த அனுபவத்தி லிருந்து பாடம் கற்று தமிழக உரிமை மீட்பு, தமிழக நலக் காப்பு சிக்கல் களுக்கு முன்னுரிமை கொடுத்து அதற்கு முதன்மை தந்து, அதற்கான போராட்டங்களை நடத்த வேண்டும். அதன்வழி தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் வரலாறு படைக்க வேண்டும். 

இளப்பத்தில் தமிழினம் - எக்காளத்தில் தில்லி 

உலகில் தமிழ் இனத்தைப் போல அனாதையான வேறொரு இனம் இருந்திருக்குமா என்பது தெரியவில்லை. உலகின் எத்தனையோ தேசிய இனங்கள் தங்கள் உரிமைக்காகப் போராடி வெற்றி பெற்றிருக்கின்றன. ஆனால் வேறு எந்த இனமும் சந்தித்திராத இழப்புகளையும், கொடுமை களையும் ஈழமக்கள் எதிர் கொண்டு வருகின்றனர். இதற்கு வெளிக் காரணங்கள் பல இருந்தாலும், உள் காரணம் தமிழர்களுக்கு தமிழ் இனத் துக்கு என்று அதற்காகக் குரல் கொடுக்க, அதன் உரிமைகளுக்காகப் போராட என்று ஒரு உரிய தலைமை இல்லை. அமைப்பு இல்லை.

இதற்கு முக்கிய காரணம் தமிழகத்தில் தோன்றிய திராவிட இயக்க வழிவந்த தன்னலவாத கட்சிகள். பார்ப்பன எதிர்ப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு, பகுத்தறிவு, இட ஒதுக்கீடு என்று முழங்கி வளச்சியுற்ற இந்த இயக்கத்தின் வழிவந்த தன்னலவாதக் கட்சிகள். மக்களைத் தன் விசுவாசத்திற்குரிய வாக்கு வங்கிகளாக வைத்திருக்க எந்த அளவுக்கு அறிவு தேவையோ, உணர்வு மட்டம் தேவையோ அந்த அளவுக்கு மட்டுமே வைத்து, தலைவர் மீதான பய பக்தியோடு மக்களைப் பதப்படுத்தி வைத்திருக்கின்றனர். இதனால் தமிழன் இன உணர்விழந்து கட்சி உணர்வுக்கும் சாதி உணர்வுக்கும் ஆட்பட்டுக் கிடக்கிறான். கட்சிக்கு ஒன்று என்றால், சாதிக்கு ஒன்று என்றால் கிளர்ந்தெழுகிற தமிழன், இனத்திற்கு ஒரு பாதிப்பு என்றால், கிளர்ந்தெழ மறுக்கிறான். கருணாநிதி நள்ளிரவில் கைது என்றால் தமிழகத்தில் போக்குவரத்து பாதிக்கிறது. ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு என்றால் பேருந்து பயணிகளோடு எரிகிறது.

ஆனால் பல்லாயிரக் கணக்கில் தமிழினம் மடிகிறது என்றால், இங்கு கருப்புக் கொடி ஊர்வலம், கண்ணீர் அஞ்சலி, மனித சங்கிலி மட்டுமே நடக்கிறது. அதைத் தாண்டி தமிழனுக்கு உணர்வு கிளர்ந்தெழ வில்லை என்பதல்ல. கிளர்ந்தால் தலைமை என்ன சொல்லுமோ, செய்யுமோ என்று தயக்கம். தலைவர்களும் மக்களிடம் அதற்குமேல் எதுவும் கோரவில்லை. இப்படியிருந்தால் தமிழன், தமிழினம் எப்படி உருப்படும்? பீகாரி ஒருவன் மராட்டியத்தில் கொலையுண்டால் பீகாரில் அனைத்து தலைவர்களும் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்கிறார்கள். சீக்கிய மதகுரு ஒருவர் வியன்னாவில் படுகொலை என்றால், பஞ்சாப் பற்றி எரிகிறது. ஊரடங்கு உத்தரவு, துணை ராணுவம் என்று படைகள் குவிகின்றன. தமிழனைத் தவிர வேறு எவன் தொடப்பட்டாலும், அந்த இனம் துள்ளி எழுகிறது என்றால் அங்கெல்லாம் திராவிட இயக்க வழி வந்த தன்னலவாதக் கட்சிகள் இல்லை. ஆனால் திராவிட இயக்கம் தோன்றிய தமிழகத்திலோ தமிழன் எங்கு செத்தால் என்ன, எப்படி செத்தால் என்ன, எவ்வளவு பேர் செத்தால் என்ன, என்று எதையும் கண்டுகொள்ளாது அமைதி காக்கும், மௌன ஊர்வலம் நடத்தும். இதனால்தான் தமிழனை எவனும் இளப்பமாகப் பார்க்கின்றனர். ஆளாளுக்கு கை வைக்கிறான். அவன் ஆதிக்கத் தமிழனா, அதிகாரத் தமிழனா, சாமானியத் தமிழனா என்கிற பாகுபாடில்லை. எந்த தகுதியில் இருந்தால் என்ன, தமிழன் என்றால் கேட்பாரில்லை, போட்டு சாத்தலாம் என்பதுதான் நிலை.

ப. சிதம்பரத்துக்கு நேர்ந்த செருப்பு வீச்சைப் பாருங்கள். முல்லைப் பெரியாறு அணையைப் பார்வையிட்ட தமிழகப் பொறியாளருக்கு கேரள வனத்துறையினர் அடி, உதை என்கிற செய்தியைப் பாருங்கள் எங்கிருந்து வருகிறது கேரளக்காரனுக்கு இந்த துணிச்சல். தமிழன் அனாதை, தமிழனைத் தாக்கினால் எவரும் வரமாட்டான், கேட்க மாட்டான் என்கிற துணிவுதானே...? இதே துணிவுதான் இலங்கை அரசுக்கும் அப்பாவித் தமிழர்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்த அந்நாடு தமிழக மீனவர்களையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. கடந்த வாரம் கூட சிங்கள கப்பற்படைதன்னுடைய போர்க்கப்பலைதமிழக மீனவர்களது படகுகள் மீது மோதி மீனவக்ளின் படகுகளை உடைத்தும் அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களைப் பறிமுதல் செய்தும் அராஜக நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது

தமிழக மீனவர்களுக்கு யார் பாது காப்புஅவர்கள் இந்தியக் குடிமக்களா இல்லையா அவர்களைக் காப்பாற்ற வேண்டியது தமிழக தில்லி அரசுகளின் கடமைதானே இந்த அரசுகளுக்கு கட்டையில் கொஞ்சமாவது சூடு கொரணைஇருக்கிறதா இல்லையா? ஒரு சுண்டைக் காய் நாடு இவ்வளவு ஆட்டம் ஆடுகிறான் இதைத் தடுத்து நிறுத்த இந்திய அரசுக்கு வக்கில்லை ஏன்கடலோரப் பகுதியில் இந்தியக் கப்பற்படையை நிறுத்தி தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு தரக் கூடாதா. அத்து மீறும் சிங்களக் கடற்படையினரைத் தாக்கி கைது செய்து சிறைப்பிடித்து இந்தியாவுக்குக் கொண்டு வரக்கூடாதாஇந்தியக் கப்பற்படைக் கருவிகளில் அப்படையினர் வாங்கும் ஊதியத்தில்தமிழனின் வரிப்பணமும் தானே இருக்கிறது ஆனால் அந்தக் கப்பற்படை தமிழனைக் காப்பாற்றாதா? தமிழகக் கட்சிகள் காப்பாற்றக் கோரக்கூடாதா?

தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் மீனவர்களின் கைகள் மீன் மட்டும் பிடித்துக் கொண்டடிருக்காது என்று சவடால் அடித்த வெத்து வேட்டு வசன வியாபாரி என்ன செய்கிறார் வழக்கம்போல பிரதமருக்கு கடிதம் எழுதி அதைப் பத்திரிகைகளுக்குத் தந்து தன் கடமை முடிந்து விட்டதாக பிரச்சனையிலிருந்து கழட்டிக் கொள்கிறார். இது என்ன நாடா இல்லை காடா? காட்டில்கூட சில இயற்கை நியதிகள் மரபுகள் உண்டு. ஆனால் இங்கு எதுவுமேயில்லை. இப்படி ஏதுமற்ற அனாதையாக அல்லவாகிடக்கிறான் தமிழன். இவனை யார் காப்பாற்றுவது. இதுதான் இன்றைய தமிழனின் நிலை. இந்த இழி நிலையை ஒவ்வொரு தமிழனும் உணர வேண்டும். இதை மாற்றுவது குறித்து சிந்திக்க வேண்டும். 

பாடம் கற்போம் பழி தீர்ப்போம் 

தில்லி அரசின் உதவி இல்லையென்றால், தமிழீழப் போராளிகளுக்கு இந்த அளவுக்கு இழப்பும் பின்னடைவும் ஏற்பட்டிருக்காது. சிங்கள இனவெறி அரசுக்கு ராடார் தந்து உதவியது, படைப் பயிற்சிகள் தந்தது, நவீன அதிநுட்பக் கருவிகளை சிங்கள ராணுவத்துடன் நேரடியாகவே களத்தில் நின்று இயக்கிக் காட்டியது, செயற்கைக் கோள் மூலம்போராளிகளின் இருப்பிடங்கள், பதுங்கு குழிகள், பயிற்சி முகாம்கள் முதலானவற்றை அடையாளம் காட்டியது, வெளிநாடுகளிலிருந்து போராளிகள் வாங்கிய போராயுதங்கள் கொண்ட கப்பலை வழி மறித்து மூழ்கடித்தது இப்படி எண்ணற்ற உதவிகளைச் செய்து சிங்கள இனவெறி அரசுக்குத் துணை போனது தில்லி அரசு.  

ஆனால் இந்த தில்லி அரசுக்குத் தான் துணை போயின திமுக வும் விசிகவும். இப்படித்துணை போகாது எதிர்த்து நின்றகட்சிகளும் தம் எதிர்ப்பில் உறுதியாக தீவிரமாக இல்லை. இந்த இளப்பமெல்லாம் நன்கு தெரிந்துதான் தமிழக மக்களது குரலுக்கு கிஞ்சித்தும் செவி சாய்க்காமல் தன் போக்குக்கு தன் நிலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அது பாட்டுக்கு சிங்கள அரசுக்கு உதவிக் கொண்டிருந்தது தில்லி. 

நாம் மட்டும் உக்கிரத்தோடு போராடி யிருந்தோமானால், எப்போதோ போர் நிறுத்தம் கொண்டு வந்து, இறந்துபோன, அப்பாவி மக்கள் பலரைக்காப்பாற்றியிருக்கலாம். போராளி களுக்கும் இந்த அளவுக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்காது. போராளித் தலைவர்கள், தளபதிகள் களத்தில் உயிர்ப் பலியாகி இருக்க மாட்டார்கள். 

அதோடு மட்டுமல்ல, ஈழ ஆதரவுக் கட்சிகள் இந்தப் பிரச்சினையை முழு மூச்சோடு எடுத்துப் போராடியிருந்தால், தமிழக மக்களின் கவனம், அனுதாபம், அக்கறை எல்லாம் அவர்களை நோக்கித் திரும்பியிருக்கும். காங். - திமுக, விசிக கூட்டணி தனிமைப்பட தமிழக மக்களின் பெரும்பான்மை ஆதரவும் இவர்களுக்கே கிட்டியிருக்கும். தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி 5 இடங்களைக் கூட வென்றிருக்க முடியாது. அதிமுக கூட்டணி ஈழ ஆதரவுக் கூட்டணி அமோக வெற்றி பெற்றிருக்கும். 

ஆனால் அந்த வாய்ப்பை அநியாயமாகக் கோட்டை விட்டார்கள் என்பதுடன், இதனால் ஈழ மக்களும் பல்லாயிரக் கணக்கில் மாண்டார்கள். போராளிகளுக்கும் இழப்பு. இவர்களுக்கும் இழப்பு. இந்த இழப்பிலிருந்து இனியாவது இவர்கள் பாடம் கற்கவேண்டும். இதிலிருந்து மீண்டு புத்துயிர் பெற்று போராட வேண்டும். இதன்வழி தமிழக மக்களுக்குத் தீங்கிழைத்த தமிழக மக்களைக் கொன்று குவித்த தில்லி அரசுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும். காலம் வரும்வரை காத்திருந்து அதைப் பழி தீர்க்க வேண்டும். 

Pin It