முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் 4.9.2025 அன்று இங்­கி­லாந்து நாட்­டின் ஆக்ஸ்ஃ­போர்டு பல்­க­லைக் கழ­கத்­தில், பகுத்­த­றி­வுப் பக­ல­வன் தந்தை பெரியார் அவர்­க­ளின் திரு­வு­ரு­வப் படத்­தைத் திறந்து வைத்து உரை­யாற்­று­கை­யில் “தந்தை பெரி­யார் தர­ணி­ம­ய­மாகி விட்­டார்” என்று உணர்ச்சி மேலி­டக் குறிப்­பிட்­டார்.mk stalin on periyarமுதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் ஆற்றிய உரை வரு­மாறு:– பல நூறு ஆண்­டு­களாக, உல­கின் சிறந்த அறி­வா­ளி­களை உரு­வாக்கும் இந்த ஆக்ஸ்ஃ­போர்டு பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பேசு­வதை நான் பெருமை­யா­கக் கருதுகிறேன். இப்­போது புள­காங்­கித உணர்­வோடு உங்­கள் முன்­னால் நான் நின்று கொண்­டி­ருக்கிறேன். பெரி­யா­ரின் பேரன் என்ற கம்­பீ­ரத்து­டன் நிற்­கி­றேன்! இங்கே நான் தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­சர், தெற்­கா­சிய அர­சி­யலை புரட்­டிப் போட்ட இயக்­க­மான தி.மு.கழ­கத்­தின் தலை­வர் என்ற தகு­தி­யு­டன் மட்­டு­மல்ல; பெரி­யா­ரின் பேரன் என்­கின்ற கம்­பீ­ரத்­து­டன் உங்­கள் முன்­னால் நான்நின்று கொண்­டி­ருக்­கி­றேன்.

பகுத்­த­றி­வுப் பக­ல­வன் அறி­வா­சான் தந்தை பெரியாரின் படத்தை ஆக்ஸ்ஃ­போர்டு பல்கலைக்கழகத்தில் திறந்து வைத்­ததை, என்னுடைய வாழ்­நாள் பெரு­மை­யா­கக் கரு­து­கி­றேன். பகுத்தறிவுப் பட்­டொளி, உல­கம் முழுக்­கப் பரவி வரு­கி­றது என்­ப­தன் அடை­யா­ளம்­தான் இந்­தப் படத்திறப்பு விழா!

பெரி­யார் இன்று உல­கம் முழு­வ­தும் தேவைப்படுகிறார் என்­ப­தன் அடை­யா­ள­மாக, அவ­ரு­டைய படத்தைத் திறக்­கத் திட்­ட­மிட்­டி­ருக்­கி­றீர்­கள்!

ஆக்ஸ்ஃ­போர்டு பல்­க­லைக்­க­ழ­கம் அறி­வு­டைய அடை­யா­ளம் மட்­டு­மல்ல; உரி­மை­யின் அடையாளம் இது! மனித உரி­மை­யின் அடை­யா­ளம்! உலக அடை­யா­ளம்! அப்­ப­டிப்­பட்ட பெரி­யா­ரின் படம் இங்கு திறக்­கப்­ப­டு­வது என்­பது உள்­ள­ப­டியே பெரு­மைக்­கு­ரிய ஒன்­றா­கும்!

பெரி­யார் உரு­வாக்­கிய சுய­ம­ரி­யாதை இயக்கத்தை உல­க­ம­ய­மாக்­கும் நோக்­கத்­து­டன் இந்­தக் கருத்தரங்கை ஏற்­பாடு செய்­துள்ள பேரா­சி­ரி­யர்­கள் பைசல் தேவ்ஜி, ஜேம்ஸ் மல்­லின்­சன் உள்­ளிட்ட அனைவருக்­கும் என்­னு­டைய நன்றி!

சுய­ம­ரி­யாதை இயக்­கத்­தின் தொடர்ச்­சி­யாக இருக்கும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் தலைவர் பொறுப்­பில் இருக்­கின்ற எனக்கு, இதை­வி­டப் பெருமை எது­வும் இருக்க முடியாது. பெரி­யா­ருக்கு உணவு பரி­மா­றிய பெருமை எனக்­குண்டு!தந்தை பெரி­யா­ரின் கொள்கை வாரிசு என்று நான் தொடர்ந்து சொல்­லிக் கொண்­டி­ருக்­கி­றேன். பல­முறை பெரி­யாரை நான் பார்த்­தி­ருக்­கி­றேன். குறிப்­பாக, எங்­கள் வீட்டில் நடை­பெற்ற திருமண நிகழ்ச்­சிக்கு அவர் வந்திருக்கி­றார். அந்த நேரத்தில் நான் அவ­ருக்கு உணவு பரி­மாறிஇருக்­கி­றேன். இதைச் சொல்­லும் ­போதே எனக்கு பெரு­மையாக இருக்­கி­றது!

ஒரு இனத்­துக்கே சுய­ம­ரி­யாதை உணர்வை ஊட்டி தலை­நி­மிர வைத்த தந்தை பெரி­யாரை இன்­றைக்கு உல­கம் கொண்­டாடி வரு­வ­து­தான் தமிழ்­நாட்­டிற்­கும், திரா­விட இயக்­கத்­திற்­கும் கிடைத்­தி­ருக்­கக் கூ­டிய மிகப்­பெ­ரிய பெருமை!

இங்­கி­லாந்­தில் இருக்­கின்ற செயிண்ட் அந்­தோணி கல்­லூ­ரி­யும், பெல்­லி­யோல் கல்­லூ­ரி­யும் இணைந்து ஆக்ஸ்ஃ­போர்டு பல்­கலைக்­க­ழ­கத்­தில் இரண்டு நாள் மாநாட்டை ஒருங்­கி­ணைக்­கி­றார்கள் என்று என்­னி­டம் சொன்­ன­போது, எனக்கு அள­வில்லா மகிழ்ச்சி ஏற்­பட்­டது.

ஆக்ஸ்ஃபோர்டில் தந்தை பெரி­யா­ரின் பகுத்தறிவு ஒளி! நினைத்­துப் பார்க்­கி­றேன்…1983 செப்டம்பர் 21ஆம் நாள், இதே ஆக்ஸ்ஃ­போர்டு பல்கலைக்கழகத்தில் மான­மிகு ஆசி­ரி­யர் வீரமணி அவர்­கள் கலந்து கொண்ட தந்தை பெரி­யார் நூற்­றாண்டு விழா நடந்­தது. அது நடந்து கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகி­றது. அதற்­குப் பிறகு, இன்­றைக்கு மீண்­டும் ஆக்ஸ்ஃபோர்­டில் தந்தை பெரி­யா­ரின் பகுத்­தறிவு ஒளி பர­வு­கி­றது!

தந்தை பெரி­யா­ருக்கு மிக மிகப் பிடித்த சொல் என்ன என்று கேட்­டீர்­கள் என்­றால், சுய­ம­ரி­யாதை! “உல­கத்­தில் எந்த அக­ரா­தி­யைக் கொண்­டு­வந்து காட்­டி­னா­லும், இதை­விட சிறந்த சொல்­லைக் காட்ட முடி­யாது” என்று சொன்­னார் தந்தை பெரி­யார். “ஒரு மனி­த­னுக்கு சுய­ம­ரி­யாதை எண்­ணத்தை ஊட்­டி­விட்­டால், அவன் வெற்றி பெற்­றி­டு­வான்” என்று சொன்­னார்.

அது­மட்­டு­மல்ல, “உல­கத்­தி­லேயே உயி­ரைக் கொடுத்து பெற வேண்­டிய ஒன்றே ஒன்று சுயமரி­யா­தை தான்” என்று அழுத்­தந்திருத்தமாகச் சொன்­னார்.

மனி­த­னின் சுய­ம­ரி­யா­தை­யைக் காக்­கத்­தான் அனைத்து அர­சி­யல் தத்­து­வங்­க­ளும் தேவை என்று சொல்லி, தான் உரு­வாக்­கிய இயக்­கத்துக்கே சுய­ம­ரி­யாதை இயக்­கம் என்று பெயர் வைத்­தார்.

அப்­ப­டிப்­பட்ட சுய­ம­ரி­யாதை இயக்­கத்­தின் நூற்றாண்டை முன்­னிட்டு, இந்த மாபெ­ரும் கருத்தரங்­கம் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது. உலகப் புகழ்­பெற்ற ஆய்­வா­ளர்­க­ளால் ஆய்வுரைகள் நிகழ்த்­தப்பட்­டி­ருப்­ப­தைப் பார்த்து மகிழ்ச்­சி­யும், மன­நி­றை­வும் நான் பெறு­கிறேன்.

தமிழ்­நாடு அர­சின் திட்­டக்­குழு துணைத் தலைவராக சிறப்­பா­கப் பணி­யாற்­றிக் கொண்டிருக்கும் பேராசிரியர் ஜெய­ரஞ்­சன் அவர்­களும், பேராசிரியரும், வர­லாற்று ஆய்வா­ள­ரு­மான பேராசி­ரி­யர் ஆ.இரா.வெங்­க­டா­ ச­ல­பதி அவர்களும், பெரி­யா­ரின் பெண் விடு­த­லைச் சிந்­த­னை­களை ஆய்வு செய்த பேரா­சி­ரி­யர் எஸ்.ஆனந்தி அவர்களும் இன்­றைக்கு இங்கே வந்திருக்­கி­றார்­கள்.

இந்த விழா­வுக்கு மகு­டம் சேர்க்­கின்­றது போல, தமிழ்­நாட்­டின் மிகச்­சி­றந்த ஆய்­வா­ளர்­க­ளில் ஒருவ­ரான பேரா­சி­ரி­யர் முனை­வர்ஆ.இரா.வெங்கடா­ச­ல­பதி அவர்­க­ளும், முனை­வர்கார்த்­திக் ராம் மனோ­க­ர­னும் இணைந்து உரு­வாக்கியிருக்கக் கூடிய, ‘‘The Cambridge Companion to Periyar’’ என்ற ஆய்­வுக்­கட்­டு­ரைத் தொகுப்பு ஆங்­கில நூல் வெளி­யீட்டு விழா அமைந்­தி­ருக்­கி­றது. இதை வெளி­யி­டு­கின்ற பெரு­மை­யும் எனக்­குக் கிடைத்தி­ருக்­கி­றது! பெரி­யார் உல­க­ம­ய­மா­கி­விட்டார் என்­ப­தன் அடை­யா­ளம்!

இந்த சிறப்­பான நூலை, இந்த ஆண்டு ‘சாகித்ய அகா­டமி’ விருது பெற்­ற­வ­ரான ஆ.இரா.வெங்க­டா­ச­ல­பதி அவர்­க­ளு­டைய முயற்­சி­யால், பெரியார் குறித்த நூலை Cambridge University Press வெளியிட்­டி­ருக்­கி­றது. பெரி­யார் உல­க­ம­ய­மா­கி­ விட்­டார் என்­ப­தன் அடை­யா­ளம்­தான் இது!

தந்தை பெரி­யார் அவர்­கள் தமிழ்­நாட்­டில் பிறந்தார். தமி­ழில் பேசி­னார். ஆனால் அவருடைய சிந்­த­னை­கள் எல்­லை­க­ளுக்கு அப்­பாற்­பட்­டது; மானி­டச் சமு­தா­யத்­திற்­கா­னது! உலக மக்கள் அனை­வருக்­கும் பொது­வானது! அது­தான் பெரியா­ரி­யம்!

பெரி­யா­ரி­யம் என்­றால் என்ன என்று யாரா­வது கேட்­டால், அவர்­க­ளுக்கு நாம் அறி­மு­கப்­ப­டுத்த வேண்­டிய அடிப்­ப­டை­கள் என்­ன­வென்­றால்

சுய­ம­ரி­யாதை

பகுத்­த­றிவு

சம­தர்­மம்

சமத்­து­வம்

மானு­டப்­பற்று

இரத்த பேத­மில்லை

பால் பேத­மில்லை

சுய முன்­னேற்­றம்

பெண்­கள் முன்­னேற்­றம்

சமூ­க­நீதி

மத­சார்­பற்ற அர­சி­யல்

அறி­வி­யல் மனப்­பான்மை

– என்று பெரியாரியத்தை அறி­மு­கப்­ப­டுத்த வேண்­டும். பரந்து விரிந்த அறிவுக் ­க­ட­லான அவ­ரு­டைய சிந்­த­னை­களை உள்­வாங்க, இந்த அறி­மு­கம் நிச்­ச­யம் பயன்­ப­டும்!

இந்­தச்சிந்­த­னை­க­ளின் அடிப்­ப­டை­யிலான சுயமரி­யாதை இயக்­கத்­தின் கொள்­கை­க­ளாக, ஆறு குறிப்­பு­களை, ‘குடி­அ­ரசு’ இத­ழில் பெரி­யார் எழு­தி­னார். பெரி­யார் கொள்கை, உல­க­ளாவிய கொள்கை! அவற்றை நான் சொல்­ல­வேண்டும் என்­றால், முத­லில், சமூக வாழ்­வில் ஒரு­வருக்கொருவர் எவ்வித உயர்வு, தாழ்­வும் இருக்­கக் கூடாது.

இரண்­டா­வது, ஏழை, பணக்­கா­ரன் ஏற்றத்தாழ்வு இல்­லா­மல் எல்­லாப் பொருளும்,பூமி­யும் எல்லோருக்­கும் சரிசமமாக இருக்­க­ வேண்­டும்.

 மூன்­றா­வது, ஆணுக்­கும், பெண்­ணுக்கும் சகல துறை­க­ளி­லும் சமத்­து­வம் இருக்க வேண்­டும்.

நான்­கா­வது, ஜாதி, மதம், தேசம், வருணம், கட­வுள் ஆகி­யவை இல்­லாத மனித சமூக ஒற்­றுமை நிலவ வேண்­டும்.

மக்கள் சுயமரியாதையுடன் வாழ, இறுதிக்காலம் வரை போராடியவர் தந்தை பெரியார்!

ஐந்­தா­வது, அனைத்து மனி­த­ரும் உழைத்து அதன் பயனை அனை­வ­ரும் சம­மா­கப் பயன்­­படுத்த வேண்­டும்.

ஆறா­வது, யாரும் எதற்­கும் அடிமை ஆகாமல், அவ­ர­வர் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகி­ய­வற்­றுக்கு இணங்கி நடத்த முழு சுதந்­தி­ரம் இருக்க வேண்­டும்.

இதை­யெல்­லாம் உல­கம் முழு­வ­தும் அனைத்து நாடுக­ளுக்­கும், அனைத்து மக்க­ளுக்­கும் பொதுவான கருத்­தி­யல்­கள்! அத­னால்­தான் பெரி­யார் கொள்கை, உல­க­ளா­விய கொள்கை என்று சொல்­கி­றோம்.

பழ­மை­வா­தம் நிரம்­பிய மண்­ணில் எழுச்சி பெற வைத்­த­வர்!

இவ்­வ­ளவு முற்­போக்­கான கருத்­தி­யல்­களை, நூறு ஆண்­டு­க­ளுக்­கும் முன்பே, அது­வும் பழமைவாதங்களும், மூட­நம்­பிக்­கை­க­ளும் நிரம்பியிருக்­கின்ற மண்­ணில் பேசி, மக்­களை எழுச்­சி பெற வைத்­த­வர் தந்தை பெரி­யார்!

சுய­ம­ரி­யாதை இயக்­கத்தை அவர் சாதா­ர­ணமாக தோற்­று­விக்­க­வில்லை. உல­கம் முழு­வ­தும் பய­ணம் செய்­தார். உல­கம் எப்­படி இருக்­கி­றது என்­பதை அனு­ப­வப்­பூர்­வ­மாக உணர்ந்து, தமிழ்­நாட்­டிற்கு எடுத்­துச் சொன்­னார்! தமிழ்­­நாடும் தலை­நி­மிர்ந்தது! அத­னால்­தான் அவர் தந்தை பெரி­யார்!

தந்தை பெரி­யா­ரின் உல­கப் பய­ணங்­களை சுருக்கமாக பட்­டி­ய­லிட்­டுச் சொல்­ல­ வேண்­டும் என்­றால், 1929–ல் – மலே­சியா, சிங்­கப்­பூ­ருக்­கும்

1932–ல் எகிப்து, கிரீஸ், துருக்கி, ஜெர்­மனி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்­கி­லாந்து, போர்ச்­சுக்­கல்,சோவியத் ரஷ்யா என்று ஓராண்டு முழு­வ­தும் பய­ணம் செய்­தார். அப்­போது, இந்த இங்­கி­லாந்து நாட்­டில், ஜூன் 16 முதல் ஜூலை 6 வரைக்­கும் பல்­வேறு பகு­தி­க­ளுக்­குப் பய­ணம் செய்­தார். இங்­கே­தான், கம்­யூ­னிஸ்ட் தலை­வர் லெனின் எழு­திய ‘மதம்’ என்ற நூலை வாங்­கி­னார்.

இங்கே இருக்­கின்ற பார்ன்ஸ்­லே­வில் நடந்த கூட்டத்தில் பங்­கேற்று பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தொழி­லா­ளர்­க­ளுக்­கி­டையே துணிச்­ச­லா­கப் பேசினார். அந்­தக் கூட்­டத்­தில் இருந்த நிறையபேர், லேபர் பார்ட்­டி­யைச் சேர்ந்­த­வர்கள். அப்­போதும் இந்தி­யா­வில் நடந்து கொண்­டி­ருந்­தது பிரிட்டிஷ் ஆட்சி.

ஆனால், அதைப் பற்­றி­யெல்லாம் கவலைப்படாமல், “இங்கே தொழி­லா­ளர் நட்பு ஆட்சியை நடத்துவதாகச் சொல்­கி­றீர்­கள். ஆனால், இந்தியாவில் தொழிலாளர்க­ளுக்கு விரோ­த­மாக ஆட்சி நடத்துகிறீர்­கள்” என்று வெளிப்­ப­டையாகக் குற்றம் சாட்­டி­னார். இந்­தத் துணிச்­சல்­தான் தந்தை பெரி­யார். அதனால்­தான், காலங்­கள் கடந்­தும், என்­றென்­றும் பெரி­யார் என்று எல்­லோ­ராலும் நினைக்­கப்­ப­டு­கி­றார். இன்­னும் எத்­தனை நூறு ஆண்­டு­கள் கடந்­தா­லும், தந்தை பெரி­யார் தொடர்ந்து நினைக்­கப்­ப­டு­வார்; போற்­றப்­ப­டு­வார்!

அவர் இந்­தச் சமூ­கத்­தில் விதைத்­தது நாத்­தி­கம் இல்லை; பகுத்­த­றிவு! அத­னால்­தான் “நானே சொன்­னா­லும், உன் புத்­திக்கு சரி என்று பட்­டால் ஏற்­றுக்­கொள், இல்­லை­யென்­றால் விட்­டு­விடு” என்று சொன்­னார் தந்தை பெரி­யார். அறி­வியல் மனப்­பான்­மையை விதைத்­தார் பெரி­யார்!

வெறும் நம்­பிக்­கையை கண்­டு­பி­டிப்­பாக ஏற்றுக் கொள்­ளக் கூடாது என்று சொல்லி, எல்­லா­வற்­றை­யும் கேள்வி கேட்­கச் சொன்­னார். எல்­லாவற்றுக்­கும் விடை­யைக் கண்­டு­பி­டிக்க வேண்­டும். எதை­யும் லாஜிக்­க­லாக அணு­க­வேண்­டும். இந்த அறி­வி­யல் சிந்­த­னை­ யைத்­தான் பரப்­பி­னார்; அறி­வி­யல் மனப்­பான்­மை­யைத்­தான் அவர் விதைத்­தார்.

இன்­றைக்கு ஏற்­பட்­டி­ருக்­கின்ற அத்­தனை அறிவியல் மாற்­றங்­க­ளை­யும், ‘இனி­வ­ரும்உல­கம்’ என்று தொலை­நோக்­குப் பார்­வை­யு­டன்சொன்ன சிந்தனை­யா­ளர் தந்தை பெரி­யார்.

பகுத்­த­றி­வும், அறி­வி­ய­லும் ஒரே நேர்கோட்டில் இருக்­கும். அறிவின் கூர்மைதான் பகுத்­த­றிவு என்று எடுத்துச் சொன்­ன­தால்­தான், ஆக்ஸ்ஃபோர்டு பல்­கலைக்கழ­கம் அவ­ரைப் பற்றி அவர் மறைந்து இத்­தனை ஆண்டுகள் கழித்­தும் விவா­திக்­கி­றது. கேம்பிரிட்ஜ் பல்­க­லைக்­க­ழ­கம் புத்­த­கம் வெளியிடுகி­றது.

சுய­ம­ரி­யாதை இயக்­கத்தை 1925–ஆம் ஆண்டு தொடங்­கி­னா­லும், சுயமரியாதைச் சிந்­த­னை­யா­னது பெரி­யா­ருக்கு இள­மைக் காலத்­தி­லேயே வந்து­விட்­டது. அவர் அப்­போதே அப்­ப­டித்­தான்! அவ­ரு­டைய சுயசரிதையை கொஞ்­சம் பார்த்­தால், அவர் காலத்தை மீறி செய்த புரட்­சி­கள் புரி­யும்!

ஆதிக்க ஜாதி­யி­னர் வீட்­டில் தண்­ணீர் குடித்­த­தால் அவ­மா­னப்­படுத்தப்பட்டதும், தாழ்த்­தப்­பட்­டோர் வீட்­டில் தண்­ணீர் குடித்­த­தால் சொந்த வீட்­டில் அவ­மா­னப்­ப­டுத்­தப்­பட்­ட­தும் சிறிய வய­தி­லேயே அவர் மன­தில் ஒரு தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது.

பெரி­யா­ரின் தங்கை மகள் அம்­மா­யிக்கு 10 வய­தி­லேயே, 13 வயது பையன்கூட திரு­ம­ண­மாகி, மண­மான அறு­ப­தா­வது நாளே மண­மகன் இறந்­து விட்­டார். மறு­ம­ணத்­துக்கு குடும்­பத்­தில் உள்ள எல்­லோ­ரும் எதிர்ப்­புத் தெரி­வித்­தா­லும், அதை­யெல்­லாம் மீறி, அந்­தப் பெண்­ணுக்கு இரண்­டா­வது திரு­ம­ணம் நடத்தி வைத்­தார். மாற்­றுச் சமூ­கத்­தி­ன­ரின் காதல் திரு­ம­ணங்­களை ஊரார் எதிர்ப்பை மீறி நடத்தி வைத்­தார்.

இட­ஒ­துக்­கீடு உரி­மைக்­காக சுய­மரி­யாதை இயக்­கம் கண்­டார்! தெருக்களுக்கு வைக்­கப்­பட்ட ஜாதிப் பெயர்­களை நீக்­கி­னார். நக­ராட்­சிப் பள்ளிகளில் தீண்­டப்­ப­டாத வகுப்­புக் குழந்­தை­கள் சேர­வும், படிக்­க­வும் வழி கண்டார். இந்­திய விடு­த­லைப் போராட்ட இயக்­கத்­தில் சேர்ந்த பெரியார், அப்போதும் சீர்­தி­ருத்­தக் கருத்­து­க­ளைப் பரப்­பு­வ­தில் முனைப்­பாக இருந்தார். சேரன்மாதேவி குரு­கு­லத்­தில் எல்­லோ­ருக்­கும் சம­மான உணவு தரப்­ப­டவேண்­டும், வைக்­கத்­தில் எல்­லோ­ரை­யும் கோயில் தெரு­விற்­குச் செல்ல அனு­ம­திக்க வேண்­டும் என்று போரா­டி­னார்.

இட­ஒ­துக்­கீடு உரி­மைக்­காக காங்­கி­ரஸ் மாநா­டு­க­ளில் தீர்­மா­னம் கொண்டு வந்­தார். அந்­தத் தீர்­மா­னங்­கள் எல்­லாம் தோற்­க­டிக்­கப்­பட்­டது. அங்­கேயும் உயர் ஜாதி­யி­ன­ரின் ஆதிக்­கம் இருப்­பதைப் பார்த்து, அர­சி­யல் விடு­தலை மட்­டும் போதாது, சமூக விடு­த­லை­யும் தேவை என்று அதி­லிருந்து அவர் வெளி­யே­றி­னார். அப்­படி உரு­வா­ன­து­தான், இன்­றைக்கு நாம் விழா எடுத்துக் கொண்­டா­டிக் கொண்­டி­ருக்­கின்ற சுய­ம­ரி­யாதை இயக்­கம்!

சமூ­க­நீதி பெண்­க­ளுக்கு சொத்­து­ரிமை, தீண்­டாமை ஒழிப்பு, பொது இடங்க­ளில் பட்­டி­ய­லி­னத்­த­வ­ருக்கு தடை இருக்­கக் கூடாது. நில உரிமை , கைம்­பெண் மறு­ம­ணம, தமி­ழுக்கு முக்­கி­யத்­துவம் சமஸ்­கி­ருத ஆதிக்க எதிர்ப்பு, இந்­தித் திணிப்­புக்கு எதிர்ப்பு ஆகி­ய­வை­தான் சுய­ம­ரி­யாதை இயக்­கத்­தின் அடிப்படைக் கொள்­கை­கள். மான­மும் அறி­வும் உள்ள மக்களாக்கிட ஓயா­மல் உழைத்­தார்!

இந்­தக் கொள்­கை­க­ளுக்­காக பெரி­யார் அலைந்த அலைச்­சல் நினைத்தே பார்க்க முடி­யா­தது, யாரும் அலை­யா­தது. 14.2.1937 அன்று மட்டும், ஒரே நாளில், 17 சிற்­றூர்­க­ளில், பெரி­யார் பேசி இருக்­கி­றார். 16.2.1962 அன்று மட்­டும் 19 கூட்டங்­க­ளில் பெரி­யார் பேசி இருக்­கி­றார். அது­வும் அப்­போது அவ­ருக்கு என்ன வயது? 82 வயது! 82 வய­தி­லும் பேசி­யி­ருக்­கி­றார்! 95 வய­தி­லும் 98 நாட்­கள் அலைந்­தி­ருக்­கி­றார் தந்தை பெரியார். இவ்­வ­ளவு உழைப்பு எதற்­காக? நம்­மு­டைய மண்­ணில் வாழு­கின்ற மனி­தர்­களைமான­மும், அறி­வும் உள்ள சுய­ம­ரி­யா­தை­ மிக்க மக்­க­ளாக்கத்தான் அவர் ஓயா­மல் உழைத்­தார்.

ஆயு­தம் தாங்­காத, இரத்­தம் சிந்­தாத புரட்­சி­கள் உல­கத்­தில் எந்த சீர்­தி­ருத்த இயக்­கத்­துக்­கும் இல்­லாதப் பெரு­மை­யும், புகழும் பெரி­யார் இயக்­கத்­துக்கு உண்டு. பெரி­யா­ரின் இந்­தச் சாத­னைகள் எல்­லாம், ஆயு­தம் தாங்­காத புரட்­சி­கள்! இரத்­தம் சிந்­தாத புரட்­சி­கள்!

அவ­ரு­டைய சீர்­தி­ருத்­தக் கொள்­கை­கள் எல்­லாம், சட்­டங்­கள் ஆவதை பார்த்த பெருமை பெரி­யா­ருக்கே உண்­டா­னது! இது உல­கத்­தில்எந்­தச் சீர்­தி­ருத்த இயக்­கத்­துக்­கும் கிடைக்­காத புகழ்!

நம்­மு­டைய தமிழ்­நாட்­டில் மட்­டும்­தான், ஒரு சீர்­தி­ருத்த இயக்­கம், அரசியல் இயக்­க­மாக எழுச்சி பெற்று, வெகு­சன மக்­களிடம் பரப்புரை செய்து, அவர்­க­ளு­டைய ஆத­ரவை வாக்­கு­க­ளா­கப் பெற்று, சீர்­தி­ருத்­தக் கருத்துக்­களை நடை­மு­றைப்­ப­டுத்தி, அவற்றை சட்­ட­மா­க­வும் ஆக்கி அந்தச் சமுதா­யத்தை மேன்­மை­ய­டைய வைத்­தி­ருக்­கி­றது.

சமூ­க­நீ­திக் கொள்­கையை தமிழ்­நாடு மட்­டு­மல்ல, இந்­தியா முழு­மைக்­குமான கொள்­கை­யாக இந்­திய அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தில் இடம்பெற வைத்தவர் தந்தை பெரி­யார். ‘தமிழ்­நாடு’ என்று பெயர் சூட்­டப் போராடினார் தந்தை பெரி­யார். ஆட்சி அதி­கா­ரத்தை அடைந்து, அதைச் செய்து காட்டி­னார் பேர­றி­ஞர்அண்ணா. முத்­தமி­ழ­றி­ஞர் கலை­ஞர் “அனைத்­துச் ஜாதி­யினரும் அர்ச்­ச­கர் ஆக­லாம்” என்று சட்­டம் கொண்டு வந்­தார். பெண்­க­ளுக்­குச் சொத்­தில் சம உரிமை வேண்­டும் என்று பெரி­யார் தீர்­மா­னம் கொண்டு வந்­தார். அதைச் சட்­டம் ஆக்­கி­ய­வர் முத­ல­மைச்­சராக இருந்த கலைஞர். அனை­வ­ருக்­கும் கல்வி, அனை­வ­ருக்­கும் வேலை, அனைவ­ருக்­கும் அதிகாரம் வேண்­டும் என்று பெரி­யார் சொன்­னார். அதைச் சட்டம் ஆக்கி நிறைவேற்­றித் தந்­தது திரா­விட இயக்­கத்­தின் ஆட்சி. தந்தை பெரி­யா­ரின் எண்­ணங்­க­ளுக்கு செயல் வடி­வம் கொடுத்த தலை­வர்­கள்!

இது எல்­லா­வற்­றை­யும்­விட, நான் பெரு­மை­யோடு சொல்­கி­றேன், ஜாதியைக் கடப்­ப­தற்­காக இந்­தி­யா­வி­லேயே வேறு எந்த மாநி­ல­மும் செய்யாத முன்னெடுப்­பாக, பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள் “சுய­ம­ரி­யா­தைத் திருமணச் சட்­டத்­தை­யும்”, தலை­வர் கலை­ஞர் அவர்­கள் “சமத்­து­வ­பு­ரம்” திட்­டத்­தை­யும் கொண்­டு­வந்து, தந்தை பெரி­யா­ரின் எண்­ணங்­க­ளுக்­குச் செயல்வ­டி­வம் கொடுத்­தி­ருக்­கி­றோம்!

இந்த ஐரோப்­பி­யப் பய­ணத்­தில் நான் பார்ப்­பது, ஒடுக்­கப்­பட்ட குடும்பங்களில் இருந்து முன்­னேறிவந்து ஏரா­ள­மான பேர் இங்கே நல்ல நிலையில் இருக்கி­றார்­கள். தமிழ்­நாடு எல்­லா­வற்­றி­லும் முன்­னே­றிக் கொண்டு வருகிறது. கல்­வி­யில், பொரு­ளா­தா­ரத்­தில், தொழில் வளர்ச்­சியில், வாழ்க்கைத்­ த­ரத்தில், உள்­கட்­ட­மைப்பு வச­தி­யில் முன்­னேறி இருக்­கிறோம். உழைப்­பின் சாதனை, உற்­பத்­திச் சாத­னை­யாக மாறி இருக்­கி­றது.பட்­டி­னிச் சாவு இல்­லாத மாநி­ல­மாக தமிழ்­நாடு இருக்­கி­றது. வள­மான தமிழ்­நா­டாக வளர்த்து வரு­கி­றோம். மற்ற மாநி­லங்­கள் வியந்து பார்க்­கும் மாநி­ல­மாக உயர்ந்­தி­ருக்­கி­றோம். இது­தான் திரா­விட இயக்­கத்­தின் சாதனை!

பெரி­யார் கண்ட வளர்ச்­சியை நாங்­கள் தமிழ்­நாட்­டில் செயல்­ப­டுத்திக் காட்டி வரு­கி­றோம். “பெரி­யா­ருக்கே இந்த ஆட்சி காணிக்கை” என்று சொன்­னார் பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள். தமி­ழர் தந்தை பெரி­யார் மறைந்­த­போது, அரசு மரி­யா­தைக்கு ஆணை பிறப்­பித்­தார் தமிழினத் தலைவர் கலைஞர். பெரி­யார் பிறந்­த­நாளை சமூ­க­நீதி நாளாக அறிவித்து, செப்டம்பர் 17 அன்று தமிழ்­நாட்­டையே உறு­தி­மொழி எடுக்க வைத்திருக்கிறது நம்முடைய திரா­விட மாடல் அரசு. அதற்­காக, பெரியார் கண்ட கன­வு­கள் எல்­லா­வற்­றை­யும் நாம் நிறை­வேற்­றி­விட்­டோம் என்று சொல்­ல­மாட்­டேன்.

இந்த நூறாண்­டு­க­ளில் ஒரு சமூ­க­மாக நாம் அடைந்­தி­ருக்­கின்ற வளர்ச்சி என்­பது, ஒரு குழந்தை நடை பழ­கு­கின்ற மாதி­ரி­தான்! நம்­மு­டைய பய­ணம் நெடி­யது. நாம் செல்ல வேண்­டிய தூரம் இன்­னும் இருக்­கி­றது. இந்­தப் பய­ணத்­தில் ஏற்­ப­டு­கின்ற தேக்­கங்­களை – தேவை­யற்ற இடைஞ்சல்களை – பழைய குள­று­ப­டி­களை நாம் ஒதுக்­க­வேண்­டும். போலிப் பெரு­மைகளில் சிக்கி மறு­ப­டி­யும் பின்­னோக்­கிப் போய்­வி­டக் கூடாது. நம்மை பின்­னோக்கி இழுக்க அத்­த­னை­வி­த­மான தந்­தி­ரங்­க­ளை­யும் மேற்­கொள்ளுவார்கள். கொஞ்­சம் ஏமாந்­தா­லும், நம்­மு­டைய அத்­தனை உழைப்­பும் கேள்விக்­­ குறியா­கி­டும். ஜாதி வேறு­பா­டு­க­ளை­யும், ஏற்­றத்­தாழ்­வு­க­ளை­யும் முற்றிலுமாக விலக்­கு­கின்ற பய­ணத்­தின் பல்­வேறு படி­நி­லை­களை நாம் படிப்­ப­டியாகத் தாண்டி வர­வேண்­டும். அதற்­கா­கத்­தான் இந்த நிகழ்ச்சி. இதற்­கான முயற்சிக­ளில் திரா­விட முன்­னேற்­றக் கழ­க­மும், நம்­மு­டைய திரா­விட மாடல் அர­சும் தொடர்ந்து பய­ணிக்­கி­றது.

100 ஆண்­டு­க­ளுக்கு முன்பு, சுய­ம­ரி­யாதை இயக்­கம் எந்த நோக்­கத்­துக்­கா­கத் தொடங்­கப்­பட்­டதோ, அந்த நோக்­கம் படிப்­ப­டி­யாக நிறை­வேறி வரு­கி­றது.

பிறந்த நாடு

பேசும் மொழி

வாழும் சூழ்­நிலை

இன்­றைக்கு உல­கம் ஒப்­புக் கொண்ட உண்­மை­கள்! இதற்கெல்லாம் கட்டுப்பட்டு அறி­வுரை சொன்­ன­வர்­கள் மத்தி­யில், இதற்கெல்லாம் வெளியே நின்று அறி­வுரை சொன்னவர் பெரி­யார். திருவள்ளுவர் திருக்­கு­றளை தமி­ழில் எழுதி­னா­லும், அது உல­கப் பொதும­றை­யாக இருப்ப­தைப்­போல, பெரி­யார் சிந்­த­னை­கள் உல­கம் முழுக்­கத் தேவை­யா­னவை. உலகச் சமு­தா­யம் ஏற்­றுக்­கொள்­ளத் தக்­கவை. உல­கமே கூட்­டுறவு ­ம­யம் ஆக­வேண்­டும் என்று சொன்­னார் பெரி­யார். மனி­தப்­பற்று தவிர வேறு எந்­தப் பற்­றும் தேவை­யில்லை என்று சொன்­னார். பெரி­யார். நிற­பே­தம் இல்லை! இரத்­த­பேதம் இல்லை! பால் பேதம் இல்லை! என்று பெரியார் சொன்­ன­தெல்லாம் இன்றைக்கு உல­கம் ஒப்­புக்­கொண்ட உண்­மை­கள்..

அஃபிர்­மேட்­டிவ் ஆக்­சன் என்று சில நாடுக­ளில் இப்­போ­தும் இருக்கிறது. கேம்­பஸ் டைவர்சிட்டி, ஸ்டூடண்ட் டைவர்­சிட்டி என்று பல முன்னணி கல்­லூரி, பல்­க­லைக் கழகங்களிலும் இருக்கிறது. பல்­வேறு உலக மொழிகளில் பெரி­யா­ரின் கருத்­துகளை தமிழ்­நாடு அரசு மொழிபெ­யர்த்து வெளி­யிட்டு வருகிறது. இன்றைக்கு கேம்­பி­ரிட்ஜ் பல்­க­லைக் கழ­கம் வெளி­யிட்டு இருப்­பது போல, மற்ற பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளும் வெளி­யிட வேண்டும் என்று கேட்­டுக் கொள்­கி­றேன்.

“சுய­ம­ரி­யாதை உணர்ச்­சி­தான் உலக மக்­க­ளையே ஒரு குடும்ப சகோதரர்களாக மாற்­றும். அப்­போ­து­தான் இந்த இயக்­கத்­தின் உண்­மைச் சக்­தி­யும், பெருமை­யும் வெளிப்­ப­டும்” என்று பெரி­யார் சொன்­னார். பெரி­யா­ரின் சுய­ம­ரி­யா­தைக் கொள்­கையை வென்­றெ­டுக்க இது­போன்ற கருத்­த­ரங்குகள் வழி­வ­குக்­கும்.

தமிழ்­நாடு முத­ல­மைச்­ச­ராக எத்­த­னையோ வெளி­நா­டு­க­ளுக்கு நான் சென்றிருக்­கி­றேன். அங்கே நடை­பெற்ற பல்­வேறு நிகழ்ச்­சி­க­ளில் கலந்துகொண்டு இருக்­கி­றேன். ஆனால், இந்த நிகழ்ச்சி, என்னை உணர்ச்­சி ­வ­யப்­பட வைத்திருக்­கி­றது. அந்த உணர்ச்சி யாரென்­றால் தந்தை பெரியார். காரணம், இது பெரி­யா­ருக்­கான நிகழ்ச்சி! மானு­டத் தன்­மையை மதிப்ப­தாக உலகம் மாறட்­டும்!’

இலண்­ட­னில் இருக்­கின்­றேனா இல்லை, தமிழ்­நாட்­டில்­தான் இருக்கின்றேனா என்று ஒரு சந்­தே­கம் வந்­து ­விட்­டது. அந்த வகை­யில், இந்த நிகழ்ச்சி அமைந்­தி­ருக்­கி­றது.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.