மகப்பேறு விகிதத்தை குறைக்க தீர்வுகாண தமிழ்நாடு வந்துள்ளது உத்தரப்பிரதேச திட்டக்குழு. இங்கு செயல்பாட்டில் உள்ள சுகாதார நலத் திட்டங்கள் பற்றி விரிவாக ஆலோசனை நடத்தினர். தமிழ்நாடு வந்துள்ள அம்மாநில திட்டக் குழுவினர் இங்கு மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் கள ஆய்வுகளில் ஈடுபட்டனர். பிரசவத்தின் போது அல்லது பிரசவம் முடிந்த 42 நாட்களுக்குள் இறக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை மகப்பேறு இறப்பு விகிதம் கணக்கிடப்படுகிறது. அதன்படி ஒரு இலட்சம் பிரசவத்தில் தமிழ்நாட்டில் 35 பேர் மட்டுமே உயிரிழக்கின்றனர். இது உ.பியில் 140-ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
பாஜகவுக்கு ஒரே நெருக்கடி திமுகதான்
ஒன்றிய ஆட்சிக்குக் கடும் நெருக்கடிகளைத் தந்து வரும் ஒரே ஆட்சி திமுக ஆட்சி தான் என்று கோலாகல சீனிவாசன் என்ற பார்ப்பன பத்திரிகையாளர் ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார். தீவிர ஆர்.எஸ்.எஸ்-க்காரான இவரது பேட்டி:
அகில இந்திய அளவில் பாஜகவை எதிர்க்கக் கூடிய எதிர்க்கட்சிகளின் ஆட்சிகள் பல மாநிலங்களில் இருந்தாலும் ஒன்றிய அரசுக்குத் தலைவலியை தரக் கூடிய ஆட்சி திமுக ஆட்சிதான். சமீபத்தில் உச்சநீதிமன்றம் வழங்கியது ஆளுநர்களுக்கு எதிரான மிகவும் கடுமையான தீர்ப்பு. இந்த தீர்ப்பு ஒன்றிய அரசுக்கு விழுந்த அடி.
ஒரே நேரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மூலமாக தலைவலி மேற்கு வங்கத்தில் வர உள்ளது. கேரளாவில் பினராயி விஜயனுக்கு உள்ளது. ஆனால் இவர்கள் மூலம் ஒன்றிய அரசுக்குத் தொந்தரவு இருந்ததே கிடையாது. ஆனால் திமுக மிகப்பெரிய தலைவலியாக உள்ளது. ஒவ்வொரு நாளும் திட்டங்களைத் தீட்டி வருகிறார்கள். மம்தா, பினராயைக் காட்டிலும் மோடி எதிர்ப்பில் வலுவாக உள்ளார் மு.க ஸ்டாலின்.
- விடுதலை இராசேந்திரன்