படித்த நூல்கள் குறித்து எழுதவும் பிறரின் படைப்புகள் குறித்து எழுதவும் ஓர் அலாதியான மனச்சூழல் தேவையாக உள்ளது என்பதை எழுத விரும்பும் ஒவ்வொருவரும் உணர்வர். எழுதியவரின் நோக்கத்தைச் சரியாக தேடிச் சொல்ல முடியுமா? (அல்லது) நம் பார்வையில் நோக்கம் மாறுபடுமா? எது எப்படியாயினும் நம் உணர்வை, பாதிப்பை நேர்மையாகப் பகிர்ந்து கொள்வதே இதன் முக்கிய நோக்கமாக இருக்கக் கூடும்.

படைப்பாயின் பார்வையும் படிப்பாயின் பார்வையும் ஒன்றுபடுவதற்குக் கவிதைகல் மிகக் குறைவான வாய்ப்புகளே உள்ளன. ஒரு மிகச் சிறந்த கவிதை முப்பட்டகக் கண்ணாடியில் பட்டுச் சிதறும் ஒளி போன்றது. நந்திதாவின் கவிதைகளில் ஓயாத ஞாபகங்கன் தெறிப்புகள் அறுத்துவிடப்பட்ட மணிமாலையின் சிதறல்களாக சிதறிக்கிடக்கின்றன. வேண்டாமென்று கவனத்துடன் மறந்து சென்றாலும் துரத்திப்பிடிக்கும் குடை மழையில் நனைவதைப் போன்ற குளுமையான பாசத்தைச் சொல்கின்றன.

தொட்டாச்சிணுங்கிஎன்ற கவிதையில்.

பெருத்த கனமான ஐஸ்துண்டுகளை

பதுக்கியவாறு விம்மிக்கொண்டிருந்தது

மனசுஎன்கிறார்.

இப்படி பதுக்கிவைக்கப்பட்ட ஐஸ்கட்டிகன் உருகல்களாக ஓர் அழகிய சிற்றோடையாகச் சலசலத்து ஓடுகின்றன இவரின் கவிதைகள், ஒரு தலைப்பிடாத கவிதையில்,

எனக்கான கருப்பையுள் நானாக வாழ்ந்ததைகெடுத்தது வெச்சம்

எனக் கூறுவதின் மூலம் ஓசைப்படாமல் வாழ ஆசைப்படும் கவிமனது வெச்சமாகிறது.

என் நினைவுகல் கூடுமானதை நீ விழுங்கியிருக்கிறாய்

எனத் தொடங்கும் கவிதையன்று

உன்னளவில் நான் பொய்யாவது உன்னதம்என முடிகிறது.

பொய்யாகப் போகிறோம் என்ற உண்மையறிந்தும் நினைக்காதிருக்க முடியாத நெஞ்சத்தை இயல்பாக எந்தச் சிரமமுமின்றி சொல்கிறது இந்தக் கவிதை

சடங்கை ஏற்க மறுப்பவள்

படித்த முட்டாள்என்பதில் மற்றவர்கள் பார்வையிலான முட்டாள்தனம்

ஏற்றுக் கொள்ள முடியாத மனதின் மறுப்பாகி

அது அழகாகியும் விடுகிறது.

காணாமல் போய்விடுவது அவ்வளவு சுலபமல்லஎன்கிற இவரின் கவிதை வரிகள், உலகில் எதுவும் சுலபமில்லை,

காணாமல் போவதிலிருந்து சும்மா இருப்பது உட்பட என்ற யதார்த்தத்தைப் பேசுகின்றன.

மாலைக்கும் இரவுக்குமிடையே

உதிர்ந்து சாம்பலாகும் வெட்கம்’.

தனக்கொன்றும் தெரியாதபடி

இடிச்ச புளியாட்டம் சம்மணமிட்டு அசையாதிருக்கும் தூரத்து மலை’.

உலர்ந்துபோகும் கனவுகளை அசைபோடப் பழகியிருந்த நமுத்துப்போன காதல்

போன்ற வரிகள் நந்திதாவின் கவிதைகளில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய முக்கிய அம்சங்களாக உள்ளவை. கவிதை காட்டுப்பூக்களைப்போல மிக இயல்பாகப் பூத்துக்கிடக்க வேண்டும்.

மண், வேர், கொடி, இலை, தண்டென எல்லாவற்றின் தொடர்பும், பூவின் மலர்தல் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருப்பதுபோல் கவிதைகளும் அமைய வேண்டும். கவிதைக்குள்ளேயும் கவிதைகளுக்கிடையேயுமான தொடர்புகள் அறுபட்டும் விடுபட்டும் புரிதலுக்குத் தடையாக இருப்பதை இனிவரும் காலங்களில் நந்திதா கவனமுடன் தவிர்க்கவேண்டும். நந்திதாவிடம் உண்மையும் கனிந்த மனமும் உள்ளதால் காலங்கடந்து வாழும் படைப்புகளை அவர் தமிழுக்கு அளிப்பார் என்றே எதிர்பார்க்கலாம். முடிவாக,

எதற்கும் தயங்காமல் நீந்தப்பழகணும்

முடியாத போனால்

திரும்பத் திரும்ப அம்மியில் துவையல் அரைக்க வேண்டியிருக்கும்

என்ற அவரின் கவிதை ஒவ்வொரு நிலையிலும் போராடி வாழும் பெண்கள் தங்கள் மனதில் எழுதிக்கொள்ள வேண்டிய பொன்னான கவிதைவரிகள்.

நந்திதாவும் அதை எப்போதும் நினைவில் கொள்ளட்டும்.

நான் இல்லாத என் வீடு,

மித்ரா ஆர்ட்ஸ்,

சென்னை - 50

பக்கம் - 88, ரூ.50

- இளம்பிறை

Pin It