(1906-1972)

2006

pulavar_kuzhanthai_200‘இராவண காவியம்’ என்ற காவியத்தைப் படைத்தவர். இருபத்தைந்து நூல்களுக்கு மேல் எழுதியவர். தொல்காப்பியம், திருக்குறள், நீதிக் களஞ்சியம் ஆகிய நூல்களுக்கு உரை எழுதியவர். சிறந்த உரையாசிரியராக விளங்கியதோடு, தமிழ் உரைநடைக்கும் குறிப்பிடத்தக்க பங்கை நல்கியவர். சிறந்த ஆராய்ச்சியாளராகவும் விளங்கியவர். அரசியலரங்கம், காமஞ்சரி முதலிய புதுமையான நூல்களைப் படைத்தவர். தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ்ப் பண்பாடு முதலியவற்றை உயிர்மூச்சாய்க் கொண்டு செயல்பட்டவர். 

புலவர் குழந்தையின் நூல்கள்

செய்யுள் நூல்கள்

1. இராவண காவியம்

2. அரசியலரங்கம்

3. நெருஞ்சிப் பழம்

4. காமஞ்சரி

5. உலகப் பெரியோன் கென்னடி

6. திருநாணச் சிலேடை வெண்பா

7. புலவர் குழந்தை பாடல்

உரை நூல்கள்

1. திருக்குறள் -

2. தொல்காப்பியப் பொருளதிகாரம்-

3. நீதிக்களஞ்சியம் -

இலக்கண நூல்கள்

1. யாப்பதிகாரம்

2. தொடையதிகாரம்

3. இன்னூல் (சூத்திரம்)

உரைநடை நூல்கள்

1. தொல்காப்பியர் காலத் தமிழர் (ஆராய்ச்சி நூல்)

2. திருக்குறளும் பரிமேலழகரும் (ஆராய்ச்சி நூல்)

3. பூவா முல்லை

4. கொங்கு நாடு

5. தமிழக வரலாறு

6. தமிழ் வாழ்க! (நாடக நூல்)

7. தீரன் சின்னமலை (விடுதலை வீரன் வரலாறு)

8. கொங்கு நாடும் தமிழும்

9. கொங்குக் குலமணிகள்

10. அருந்தமிழ் விருந்து

11. அருந்தமிழ் அமிழ்து

12. சங்கத் தமிழ்ச் செல்வம்

13. ஒன்றே குலம்

14. அண்ணல் காந்தி

15. தமிழெழுத்துச் சீர்திருத்தம்

16. தீரன் சின்னமலை நாடகம் -2007

Pin It