தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள், 20.11.2014 அன்று சென்னையில் நடந்த ஒரு திருமண விழாவில் “தமிழன் தமிழனாக வாழ” ஐயாயிரம் பரப்புரைக் கூட்டங்கள் நடத்தப் போவதாக அறிவித் துள்ளார். “திராவிட” உச்சாடனத்தை ஓரமாக ஒதுக்கித் தள்ளி, ஒரே ஒரு இடத்தில் மட்டும் உச்சரித்து விட்டு, “தமிழன், தமிழர்” என்ற சொற்களைத் திரும்பத் திரும் பச் சொல்லி ஏதோ புதிதாகத் தமிழர் புரட்சியை நடத் தப் போவதைப் போல நீட்டி முழக்கியுள்ளார்.

“தமிழன் தமிழனாக வாழ தமிழனை எவனும் அடிமைப்படுத்த முடியாது என்ற உறுதி ஏற்பட நாம் நம்மைத் தயார்படுத்திக் கொள்ள முடியும் என்ற அந்த உணர்வோடு முதலில் நாம் தமிழர்களாக வாழ்வோம்; தமிழர்களாக விளங்குவோம்; தமிழர்களாகப் புகழ் பெறுவோம். தமிழர்களாக நடந்து கொள்வோம் என்ற அந்த உறுதியை எடுத்துக் கொள்ளக் கூடிய ஒரே வழியாக சமுதாயப் புரட்சிதான் மிக முக்கியமான பணி என்பதை எடுத்துக் காட்டுகின்ற வகையில், இந்தச் செய்தியை அரசியல் கலப்போடோ அல்லது வேறு விதமான நிலைகளிலோ மக்களிடம் எடுத்து வைக்கா மல், முதலில் நீ யார்? தமிழன் என்பதை உணர்! சேரன் செங்குட்டுவன் காலத்திலிருந்து ராஜராஜச் சோழன் காலத்திலிருந்து இன்று வரையிலே நம்முடைய தமிழ்ச் சமுதாயத்தை அடையாளம் காட்டுகின்ற, கோடிட்டுக் காட்டுகின்ற அந்தக் கொள்கை முழக்கம்தான் நாம் தமிழன், நாமெல்லாம் தமிழர்கள் என்பதை உணர்ந் தால் மற்றவர்களையும் தமிழர்களாக மாற்ற முடியும் என்ற அந்த அற்புதமான தத்துவத்தை நாம் தொடர்ந்து பிரச்சாரம் செய்ய வேண்டும்.” - (முரசொலி 21.11.2014)

தமிழனின் சொந்த இனமுகத்தை மறைத்திட அவன் முகத்தில் “திராவிடன்” என்ற முகமூடியை மாட்டி விட்டு, அவனது இயற்கையான தமிழின உணர்ச்சியை எழுபதாண்டுகளாகக் காயடித்து இரண்டுங்கெட்டான் ஆக்கிய இயக்கத்தின் இக்காலத் தலைவர் தமது முதுமையில் “நீ யார்? தமிழன் என்பதை உணர்” என்கிறார்.

அதுவும் பொங்கல் விழா என்பது தமிழர் திருநாள் விழாவாக எண்பதாண்டுகளுக்கும் மேலாகக் கடை பிடிக்கப்படும் தமிழ்நாட்டில் அவ்விழாவை அண்மை ஆண்டுகளாக “திராவிடர் திருநாள்” என்று மாற்றி, கொண்டாடித் தமிழினத் துரோகம் செய்து வரும் வீரமணியுடன் கலந்து பேசி இந்த “தமிழன் மானம் காக்கும்” முடிவுக்கு வந்தாராம் கருணாநிதி!

ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் நீதிக் கட்சியில் தமிழர்கள் மட்டுமின்றி ஆந்திர, கேரள மாநி லங்களைச் சேர்ந்தவர்களும் இருந்தார்கள். அவர்கள் எல்லாம் தங்களைத் தெலுங்கர் என்றும் மலையாளி என்றும் மிகச் சரியான இனப்பெயரில் அழைத்துக் கொண்ட போது ஏமாளித் தமிழினத்திற்கு மட்டும் “திராவிடன்” என்று பெயர்ச் சூட்டி அவனை இரண்டுங் கெட்டான் ஆக்கியது திராவிட இயக்கம்.

தமிழகம், ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம், கேரளம் ஆகிய நான்கும் சேர்ந்தது திராவிடநாடு என்றும் அந்நான்கு மாநிலங்களில் வாழ்வோர் திராவிடர் என்றும் தமிழ்நாட்டில் கயிறு திரித்த திராவிட இயக் கம் மற்ற மூன்று மாநிலங்களில் ஏன் திராவிடத்தைப் பரப்பவில்லை? மற்ற மூன்று மாநிலத்தவர்களும் ஏன் திராவிடத்தை ஏற்கவில்லை?

உலகில் தோன்றிய முதல் மொழிக்குரிய இனமான தமிழ் இனத்தின் அடையாளத்தைச் சிதைத்து சீரழித்த திராவிடத் தலைவர்களே, நீங்கள் உறவு கொண்டாடும் கன்னடர்கள் காவிரியைத் தடுத்ததுடன் 1991இல் கர் நாடகத் தமிழர்களை இனப்படுகொலை செய்தார்கள். கர்நாடகத் தமிழர்களின் வீடுகளை, கடைகளை சூறை யாடினார்கள், தீக்கிரையாக்கினார்கள். இரண்டு இலட் சம் கர்நாடகத் தமிழர்கள் அகதிகளாகத் தமிழ்நாட் டிற்கு ஓடி வந்தார்கள்.

திராவிடத் தலைவர்களே, நீங்கள் உறவு கொண் டாடும் மலையாளிகள், முல்லைப் பெரியாறு அணையை உடைக்கத் துடிக்கிறார்கள். உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி 142 அடி உயரம் அவ்வணையில் நீர்த்தேக்க விடாமல் இடையூறு செய்கிறார்கள். 2011ஆம் ஆண்டு கேரளா சென்ற தமிழர்களை மலையாளிகள் தாக்கி னார்கள். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளிகளான 400 தமிழ்ப் பெண்களைக் கடத்தி காவல் வைத்து அவமானப்படுத்தினர். தமிழகத்திலி ருந்து சென்ற ஐய்யப்பப் பக்தர்களைத் தாக்கினார்கள்.

ஆந்திரத் தெலுங்கர்கள் பாலாற்றில் அடுக்கடுக்காய் அணைகள் கட்டித் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் வராமல் தடுத்து விட்டார்கள். இப்போது கசிவு நீரும் வராமல் தடுக்கக் கணேசபுரத்தில் அணை கட்டுகி றார்கள்.

இவைதாம் திராவிடம் தமிழர்களுக்குத் தந்த “பரிசுகள்”!

தெலுங்கர், கன்னடர், மலையாளி ஆகியோர் தம் தம் இனப்பற்றோடு இருக்கிறார்கள்; - தமிழர்கள் மீது பகையோடு பாய்கிறார்கள். தமிழர் உரிமைகளை -- உடைமைகளை -- உயிர்களைப் பறிக்கிறார்கள். அவர் களும் தமிழர்களும் ஒரே இனம் என்று பசப்பும் திராவிடத் தலைவர்களே, உங்களையும் தங்கள் தலைவர்களாக ஏற்று எத்தனையோ -உரிமைகளை ---உயிர்களை இழந்து விட்டதே ஏமாளித் தமிழினம்!

“வெளுத்ததெல்லம் பால்” என்று நம்பி வேதனை களுக்காளாகி விட்டதே தமிழகம்!

இந்திய அரசின் எல்லா வகைப் பங்களிப்போடும் இலங்கை அரசால் ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டபோது, அந்த இந்திய அரசைத் தாங்கிப் பிடித்து காங்கிரசு அமைச்சரவையில் பதவி வகித்து இனத் துரோகம் செய்ததற்குக் கருணாநிதிக்குத் தமிழ் மக்கள் அளித்த பரிசுதான் -எதிர்க்கட்சித் தகுதி கூட இல்லாமல் போன அவலம்!

இப்பொழுது இழந்த செல்வாக்கை மீட்க, எதிர் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க - கருணாநிதி கையாளும் தந்திரம்தான் தமிழினக் கவர்ச்சி வாதம்!

பார்ப்பன எதிர்ப்புப் பாசறைத் தலைவர் போல் கருணாநிதி பம்மாத்து செய்கிறார். ஆறாண்டுகள் பார்ப்பன பா.ச.க.வின் பாதந்தாங்கியாகச் செயல்பட்டு அமைச்சர் பதவிகளைப் பெற்ற கட்சி கருணாநிதி கட்சி!

ஆராய்ந்து பார்த்தால் - திராவிடம் என்பது ஆரியம் உருவாக்கிய அயற்சொல். வரலாற்றில் திராவிடம் என்ற பெயரில் இனமும் இல்லை; மொழியுமில்லை. தமிழர்கள் தங்களைத் திராவிடர்கள் என்று சங்க காலத்திலும் கூறிக் கொள்ளவில்லை, பிற்காலத்திலும் கூறிக் கொள்ளவில்லை. ஆரியர்களும் ஆங்கிலேயர் உள்ளிட்ட ஐரோப்பியர்களுமாகிய அயலார் கைச் சரக்கே திராவிடம்!

ஆந்திரத் தெலுங்கர்கள், கேரள மலையாளிகள் ஆகியோர்க்குக் கீழே தமிழர்களை இரண்டாம் தரக் குடிகளாக மாற்றுவதற்கு இருபதாம் நூற்றாண்டில் திராவிட இயக்கத்தார் கையாண்ட சொல்லே திராவிடம்!

கலைஞர் கருணாநிதி அவர்களே, ஓர் இனத்திற்கு இரண்டு பெயர்ச் சூட்டும் இரட்டை வேடத்தை இந்த வயதிலாவது கைவிடுங்கள்! திராவிடர் என்றும் தமிழர் என்றும் ஒரே இனத்தை அழைத்துத் தமிழர்களை ஏமாற்றாதீர்கள். ஆந்திர, கர்நாடக, கேரள மாநிலங் களில் உங்களைப் போல இரட்டை இனப் பெயர் சூட் டிக் கொள்கிறார்களா? இல்லையே! தமிழன் இளிச்ச வாயன் என்று கருதி அவனுக்கு மட்டும் இரண்டு இனப்பெயர் சூட்டுகிறீர்களா?

தமிழின உரிமைக் கோருவோரை - தமிழின உணர்வாளர்களைக் கண்காணிக்க, தளைப்படுத்த - “தமிழ் வெறியர்கள்” (Tamil Chauvinists) என்ற தலைப்பில் புதிய உளவுப் பிரிவைத் தமது ஆட்சியில் தொடங்கி வைத்த கலைஞர் கருணாநிதி அவர்களே,

தமிழ்த் தேசத் தன்னுரிமை மாநாடு நடத்தித் தன்னு ரிமைத் தீர்மானம் நிறைவேற்றியதற்காகப் பார்ப்பனத் துக்ளக் ஏட்டின் கட்டுரைக்கேற்ப பிரிவினைத் தடைச் சட்டத்தில் 1991இல் என்னை சிறைப்படுத்திய கலைஞர் கருணாநிதி அவர்களே,

தமிழீழ விடுதலையை ஆதரித்து மேடையில் பேசியதற்காக எத்தனையோ தலைவர்களை, இன உணர்வாளர்களைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத் திலும் தேச விரோதத் தடைச்சட்டத்தின் கீழும் சிறை யில் தள்ளிய கலைஞர் கருணாநிதி அவர்களே,

இப்போது அரவணைத்துத் தமிழினத்தைக் கெடுப்பதற்காகத் “தமிழன்” பாட்டுப் பாடுகிறீர்களா? எழுந்துவரும் தமிழ்த் தேசிய உணர்ச்சியை பயன் படுத்திக் கொண்டு பதவியை மீண்டும் பிடிக்கலாம் என்ற தந்திரத்தில் தமிழன் பெருமை பேசுகிறீர்களா?

விழித்துக் கொண்ட தமிழினமும் வீச்சுப் பெற் றுள்ள தமிழ்த் தேசியமும் தமிழினத்தின் தனித் தன்மையை சீர்குலைத்த தி.மு.க.வையும் ஏற்கமாட்டா; அ.இ.அ.தி.மு.க.வையும் ஏற்கமாட்டா!

Pin It