காவிரி உரிமை மீட்புக் குழுவின் கலந்தாய்வுக் கூட்டம் 17.11.2014 அன்று காலை, தஞ்சை செஞ்சிலுவைச் சங்க அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்குக் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கி ணைப்பாளர் தோழர் பெ.மணியரசன் தலைமை யேற்றார்.

இக்கூட்டத்தில் ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. துரை.பாலகிருட்டிணன், தமிழர் தேசிய முன்னணிப் பொதுச் செயலாளர் திரு அய்ய னாபுரம் சி.முருகேசன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் நிறுவனத் தலைவர் திரு. குடந்தை அரசன், மூன்று மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலை வர் திரு. வலிவலம் மு. சேரன், தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த.மணி மொழியன், காவிரிப் பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் திரு. காவிரி தனபாலன், தமிழக விவசாயிகள் சங்க திருச்சி மாவட்டத் தலைவர் திரு.ம.ப.சின்னத்துரை, நாம் தமிழர் கட்சி ஒருங்கி ணைப்பாளர் வழக்கறிஞர் அ. நல்லதுரை, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முனைவர் த.செயராமன், மனித நேய மக்கள் கட்சி வணிகப் பிரிவுத் தலைவர் திரு கலந்தர், புதிய தமிழகம் கட்சி வழக்கறிஞர் திரு சுகுமார், தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவையின் தஞ்சை மாவட்டப் பொருளாளர் திரு வாசு, திருத்துறைப்பூண்டி திரு. நெல் செயராமன், திருவாரூர் திரு ஜி. வரதராசன், தமிழக உழவர் முன்ன ணியின் கடலூர் மாவட்டத் தலைவர் அ.கோ.சிவ ராமன், மாவட்டச் செயலாளர் சி.ஆறுமுகம். குமராட்சி ஒன்றியச் செயலாளர் தங்க கென்னடி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் அ.மதிவாணன், கீரப்பா ளையம் ஒன்றியச் செயலாளர் கோ.ஜெயபால், தமிழ்த் தேசியப் பேரியக்க தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பி னர்கள் தோழர் பழ.இராசேந்திரன், தோழர் நா. வைகறை, தோழர் விடுதலைச்சுடர், திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் கவித்துவன், திருத்துறைப்பூண்டி ஒன்றியச் செயலாளர் தோழர் தனபாலன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கி ணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் தீர்மானங்களை விளக்கினார். அவை வருமாறு :

1. ஆடுதாண்டு காவிரி என்று அழைக்கப்படும் மேகேதாட்டுப் பகுதியில் 48 ஆ.மி.க. கொள்ளளவு கொண்ட இரு அணைகள் காவிரியின் குறுக்கே கட்டி கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் கூட வராமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. உச்ச நீதிமன்றம், காவிரித் தீர்ப்பாயம் ஆகிய நீதித்துறைத் தலைமை அமைப்புகளின் ஆணைகளைத் துச்சமாகத் தூக்கியெறிந்து தமிழர்களுக்கு எதிராக இனப் பகையோடு செயல்படும் கர்நாடக அரசின் இன்னொரு அட்டூழியம் தான் புதிய அணைகள் கட்டும் திட்டம். இரு அணைகளும் கட்டப்பட்டு விட்டால் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட மேட்டூர் அணைக்கு உபரி வெள்ளமாக வராமல் கர்நாடக அரசால் தடுக்க முடியும். அதன் பிறகு தமிழ்நாட்டில் 24,50,000 ஏக்கர் சாகுபடி நிலம் பாலை நிலம் ஆவதுடன், காவிரியால் குடிநீர் பெறும் 20 மாவட்டங்களில் உள்ள பல கோடி மக்கள் குடிநீர் இன்றி பெரும் துயரத்துக்கு ஆளா வார்கள். எனவே தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் பேரை ஒகேனக்கலில் இருந்து பேரணியாக அழைத்துச் சென்று ஆடுதாண்டு காவிரியில் அணைக்கட்டும் இடத்தில் மறியல் போராட்டம் நடத்தி, மக்கள் விரோ தத் திட்டத்தைத் தடுத்து நிறுத்துவது என்று ஒரு மனதாகக் காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு செய்துள்ளது.

2. ஆடுதாண்டு காவிரியில் இரண்டு அணைகள் கட்டும் கர்நாடக அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை எதிர்த்து 22.11.2014 அன்று திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கூட்டமைப்பு திருவாரூர், நாகை, தஞ்சை மாவட்டங்களில் நடத்தவுள்ள முழு அடைப்பு, பொது வேலைநிறுத்தம், தொடர்வண்டி மறியல் போராட்டங்களுக்குக் காவிரி உரிமை மீட்புக் குழு முழு ஆதரவு அளிக்கிறது.

3. தமிழக மக்களைத் தாக்க உள்ள பேராபத்தை உணர்ந்து அவசர நடவடிக்கையாக அனைத்துக் கட்சிக் குழுவினரை அழைத்துக் கொண்டு தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அவர்களைப் பார்த்துப் பேசி புதிய அணைகள் கட்டும் திட்டத்திற்கு நடுவண் அரசின் சுற்றுச்சூழல் - வனத்துறையினரும் - நடுவண் அரசின் நீர்ப்பாசனத் துறையினரும், அனுமதியளிக்காமல் தடுத்திட வேண்டும் என்று கோரிக்கை விண்ணப்பம் கொடுத்து அழுத்தம் தர வேண்டும் என்று தமிழக முதல்வர் திரு ஓ. பன்னீர்ச்செல்வம் அவர்களை காவிரி உரிமை மீட்புக் குழு ஒருமனதாகக் கேட்டுக் கொள்கிறது.

Pin It