அரசு மருத்துவக் கல்லூரி வழியே செவிலியர் பயிற்சிக்கு பயின்ற மாணவர்களையே அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்த வேண்டும், அரசு செவிலிய மாணவர் விடுதிகளில் அடிப்படை வசதிகளை செய்துத் தரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, சென்னையிலும், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலும் உள்ள அரசு மருத்துக் கல்லூரி செவிலியர் பயிற்சி மாணவிகள், கடந்த சனவரி 28ஆம் நாளிலிருந்து பிப்ரவரி வரை கடும் போராட்டங்களை நடத்தினர்.

nursing 60001.02.2014 அன்று, சென்னைக் கீழ்ப்பாகத்தில், அரசு மருத்துவக் கல்லூரி செவிலியர் பயிற்சி மாணவிகள் 300 பேரும், கஸ்தூரிபாய் தாய் சேய் நல மருத்துவமனை பயிற்சிப் பள்ளி செவிலியர் மாணவிகள் 200க்கும் மேற்பட்டோரும் சாலை மறியலில் இறங்கியபோது, அவர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக வாகனங்களில் ஏற்றிக் கைது செய்தனர்.

மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடவே, விடுதிகளுக்கு உடனடியாக விடுமுறை அளிக்கப் பட்டது. விடுதி பூட்டப்பட்டதால் இரவு நேரங்களில் கல்லூரி வளாகத்தில் எவ்விதப் பாதுகாப்பும் இல்லாமல் தங்கும் நிலையிலும், மாணவர்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை.

விடுதி அறைகளை மட்டுமின்றி, கழிப்பறைகளையும் கூட கல்லூரி நிர்வாகம், சிறிதும் மனிதமின்றி பூட்டுப் போட்டது. போராட்டத்தில் இருந்த, சென்னை மருத்துவக் கல்லூரி செவிலியர் மாணவி ஒருவர், ஊடகங்களுக்கு இப்படியாகச் சொன்னார்:

"கழிப்பறைகளுக்குச் செல்லும் மாணவிகளிடம் போராட்டத்தைக் கைவிட்டு விடுவேன் என்று கையெழுத்து போட்டுக் கொடுத்தால் கழிப்பறையை பயன்படுத்த அனுமதிக்க முடியும் என்று நிர்வாகம் எங்களை மிரட்டுகிறது. இரவு நேரங்களில் விடுதி அறை பூட்டி வைக்கப்பட்டுள்ளதால் வளாகத்தில் திறந்த வெளியில் பனியில் படுத்துக் கொள்கிறோம்'' (காண்க: தமிழ் இந்து நாளேடு, 03.02.2014). கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளை விடுதியை விட்டு வெளியேறிவிடாமல் விடுதிக்குள்ளோயே வைத்துப் பூட்டியது கல்லூரி நிர்வாகம்.

சென்னை மட்டுமின்றி, தஞ்சை, திருச்சி, மதுரை, கோவை என தமிழகமெங்கும் உள்ள அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவியர்கள், வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம், சாலை மறியல், மனித சங்கிலி என போராட்டங்களை நடத்தினர்.

போராட்டத்தைத் தொடர்ந்து, தமிழக அரசு சார்பில், சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர், செவிலியர்களிடம் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தார். பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, பிப்ரவரி 3 அன்று போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப் பட்டதாக அறிவிக்கப்பட்டது.

மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை பராமரித்தும், மருத்துவர்களுக்கு உதவி யாகவும் இருக்க வேண்டிய செவிலியர்கள், இப்படியான கடும் போராட்டங்கள் மேற்கொள்ள வேண்டியதன் பின்னணி என்ன?

தமிழகமெங்குமுள்ள அரசு மருத்துவமனைகளில், அரசு செவி லியர் பயிற்சிப் பள்ளிகளில் பயின்ற செவிலியர்களையே தமிழக அரசு செவிலியர்களாக பணி நியமனம் செய்து வந்தது. இச்செவிலியர் பயிற் சிகளில் பெரும்பாலும் ஒடுக்கப் பட்ட, பிற்படுத்தப் பட்ட சமூகத்து மாணவிகளே, இட ஒதுக்கீடு அடிப் படையில் சேர்ந்து பயிற்சி பெறு கின்றனர். இவ்வாறு பயிலும் மாணவர்கள், படிக்கும்போதே அரசு மருத்துவ மனைகளில் பயிற்சியிலும் ஈடுபடு கின்றனர். அவ்வாறு பணி யில் ஈடுபடும் அரசுக் கல்லூரி செவி லியர்கள் இதுவரை பதிவுமூப்பு அடிப்படையில், அரசு மருத்துவ மனைகளிலேயே பணியமர்த்தி வரப்பட்டனர்.

காலப்போக்கில், தமிழக மெங்கும் தனியார் மருத்துவமனை கள் ஆங்காங்கு முளைத்துவிடவே, தனியார் செவிலியர் பயிற்சிப் பள்ளிகளும் ஊருக்கு ஊர் உரு வானது. 2000ஆவது ஆண்டிற்குப் பிறகு, இலண்டன் உள்ளிட்ட அயல் நாடுகளில் உள்ள மருத்துவ மனைகளில் செவிலியர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படவே, இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலகநாடுகளில் செவிலியர் பயிற்சி பெற்றவர்கள் அந் நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்நோக்கில், கேரளா மற்றும் அயல் மாநிலங்களைச் சேர்ந்த கணிசமானவர்கள், தமிழகத்தில் இயங்கி வந்த தனியார் செவிலியர் பயிற்சிப் பள்ளிகளில் சேர்ந்து படிக்கத் தொடங்கினர். உள் நாட்டிலும், வெளிநாட்டிலும் செவிலியர் பணியால் கைநிறைய சம்பாதிக்க முடியும் என்ற கனவில், தமிழகத்தைச் சேர்ந்த பலரும் பல்லாயிரம் ரூபாய் ‘நன்கொடை’ அளித்து, தனி யார் செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளில் இடம்பிடிக்க வேண்டிய அளவிற்கு இப்போக்கு வளர்ந்தது.

தனியார் செவிலியர் பயிற்சிப் பள்ளிகள் பலவும், அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல், வெறும் கட்டணக் கொள்ளை நிகழ்த்தும் மையங்களாகவே திகழ்ந்தன. இட ஒதுக்கீடு கடைபிடிக்க வேண்டும் என்ற வரையறை கூட இங்கு பின் பற்றப்படவில்லை.

இவ்வாறான தனியார் செவிலியர் பயிற்சிப் பள்ளி களில் பயின்ற வர்கள், நேரடியாக நோயாளி களுக்கு சிகிச்சை அளிக்கும் நடை முறைப் பயிற்சியை உரிய அளவு பெறுவதில்லை. பெரும்பாலும், ஏட்டில் உள்ளவற்றையே கற்கின்ற னர்.

 இதற்கிடையே, அரசு மருத்துவ மனைகளில் அரசுக் கல்லூரி செவி லியர்கள் மட்டுமே பணியமர்த்தப் பட்டு வந்த நிலையை மாற்றும் வகையில் கடந்த 2012ஆம் ஆண்டு சனவரியில், தமிழக முதல்வர் செயலலிதா மருத்துவப் பணியாளர் கள் தேர்வு வாரியம் (Medical Services Recruitment Board - MRB) என்ற புதிய அமைப்பின் மூலமே இனி தமிழக சுகாதாரப் பணியாளர்கள் தேர்வு செய் யப்படுவர் என அறி வித்தார்.

இதன் மூலம் அரசு மருத்துவ மனையில் செவிலியராகப் பணியாற்ற, அரசு மற்றும் தனியார் கல்லூரி செவிலியர்கள் தனித் தேர்வு எழுத வேண்டு மென்று சொல்லப்பட்டது. இவ் அர சாணை செயல்படுவதை எதிர்த்து, அரசுக் கல்லூரி செவிலியர்கள் 31.01.2012 அன்று இடைக்காலத் தடை வாங்கினர். அவ்வழக்கில், கடந்த சனவரி 8 அன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் அரசின் முடிவை செல்லும் என அறிவித்தது.

இந்நிலையிலதான், அரசுக் கல்லூரி செவிலியர்கள் பெரும் போராட்டங்களை நடத்தியுள்ள னர். தனியார் கல்லூரி செவிலியர்களோ, தீர்ப்பைத் தொடர்ந்து உடனே தங்களை பணியில் அமர்த்துங்கள் எனக் கோரி போராட்டங்களை நடத்தினர்.

அரசுக் கல்லூரிகளில் பயின்ற செவிலியர்களுக்கே அரசு மருத்துவ மனைகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும். படிக்கும் போதே அரசு மருத்துவமனைகளில் நடைமுறைப் பயிற்சி பெறும் அவர்களுக்கு மேலும் ஒரு தேர்வெழுதுக என நிர் பந்திப்பதும் தவறானது.

அதே நேரத்தில், அரசு மருத்துவ மனைகளில் ஒரு குறிப்பிட்ட விழுக் காட்டு இடங்களை தனியார் செவிலியர் கல்லூரிகளில் பயின்ற தமிழக மாணவர்களுக்கு அளிப்பதிலும் தவறில்லை. பெருமளவிலான தனியார் செவிலியர் கல்லூரிகளில் நடைமுறைப் பயிற்சிகளும், முறையான கல்வியும் சரிவர வழங்கப்பட்டிருக்காத நிலையில், அவர் களை தனித்தேர்வு எழுத வைத்து இடஒதுக்கீடு அடிப் படையில், அக்குறிப்பிட்ட விழுக் காட்டை நிரப்பும் அளவினருக்கு அவர்களை அரசு மருத்துவமனைகளில் பணிய மர்த்தலாம்.

செவிலியர் பணிக்கான தேர் வெழுதும் முறை மூலம், அரசு மருத்துவமனைகளில் தனியார் கல்லூரிகளில் பயின்ற கேரளா உள்ளிட்ட அயல் மாநிலங்களைச் சேர்ந்த வெளியார் தேர்வெழுதி பணியமர்ந்துவிட முடியும் என்பதால், தேர்வில் தேர்வாகும் தமிழ கத்தைச் சேர்ந்தவர்களுக்கே தமிழக அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Pin It