கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தனக்கே உரிமையாகப் பெற்றிருந்த எல்லா வளங்களையும், இந்தியாவின் ஒரு பகுதியாக, ஒரு மாநிலமாக மாறிய பிறகு தமிழகம் இழந்திருக்கிறது. தமிழர்களின் வாழ்வாதரங்களையும், நீர்வளத்தையும், ஆறுகளையும், கனிமங்களையும், உழவையும், வணிகத்தையும், கடற் தொழிலையும், தமிழகத்தின் தற்சார்பையும் இந்திய வல்லரசு சூறையாடியிருக்கிறது. அழித்தொழித்திருக்கிறது. இனி இழப்பதற்கு என்ன இருக்கிறது? பறி கொடுத்தது போக எஞ்சியிருக்கும் தாய்மண் தவிர.

narural- 600சூறையாடப்படும் தமிழகம்:

தமிழகக் கனிமவளக் கொள்ளை உச்சக்கட்டத்தை அடைந்து விட்டது. தூத்துக்குடியில் தோரியம் செறிந்த தேரிமணற்காடுகளை அயல் நாட்டு நிறுவனங்களும், வட இந்திய நிறுவனங்களும் கைப்பற்றிக் கொண்டிருக்கின்றன தென்மாவட்டக் கடற்கரைப் பகுதிகளில், கார்னெட், இல்மனைட், ரூட்டைல், சிர்கன், மோனசைட் போன்ற அரிய கனிமங்கள் உள்ள மணல் கொள்ளையிடப்படுகிறது. தமிழகத்தின் தொன்மையைப் பறைசாற்றும் இயற்கைச் சான்றுகளாக நின்றிருந்த மலைகளெல்லாம் காணாமல் போயிருக்கின்றன. கிரானைட் கொள்ளையர்கள் மலை களையெல்லாம் அறுத்தெறிந்திருக்கிறார்கள். ஆட்சியாளர்கள் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் ஆதரவுடனே இக்கொள்ளைகள் தொடர்கின்றன.

கோவையிலும், நாமக்கல்லிலும் பிளாட்டினப் படிமங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அரியலூரில் சுண்ணாம்புக்கல் ஏராளமாக உள்ளது. கிட்டத்தட்ட 1600 கி.மீ நீளமுள்ள மேற்குத் தொடர்ச்சிமலை பெரு முதலாளிகளின் கண்களை ஈர்த்துள்ளது. இதில் ஏராள மான கனிமங்கள் பொதிந்து கிடக்கின்றன. கனிமக்கொள்ளைக்காகப் பல நிறுவனங்கள் தமிழகத்தில் களம் இறங்கியுள்ளன.

அண்மைக் காலத்தில் குறிவைக்கப் பட்டிருக்கும் கனிமச் செறிவு பகுதிகள் காவிரிப்படுகையும், திருவண் ணாமலையும். காவிரிப்படுகையில் உள்ள நிலக்கரி படிமங்களிலிருந்து மீத்தேன் எடுப்பதற்கான ஒப்பந் தத்தை “கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்ப ரேசன்’’ என்ற பெருமுதலாளிய நிறுவனத்துடன் 29.7.2010 அன்று இந்திய நடுவண் அரசு செய்து கொண்டது. காவிரிப்படுகை முழுவதிலும் விவசாயிகளும், தமிழ் இன அமைப்புகளும், மீத்தேன் திட்ட எதிர்ப்பாளர்களும் கடுமையாகப் போராடி வருகிறார்கள். மோசமான தமிழின அழிப்புத் திட்டமான மீத்தேன் எடுப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்த, அன்றைய தி.மு.க. அரசு 4.1.2011 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. மக் களின் கடும் எதிர்ப்பைக் கண்ட இன்றைய அ.தி.மு.க. அரசு அத் திட்டத்திற்கு தற்காலிகமாக தடை விதித்தது. ஆனாலும், ஓ.என்.ஜி.சி. என்ற இந்திய நடுவண் அரசு நிறு வனத்தின் பெயரில் குழாய் பதிக்கும் வேலைகள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன.

மீத்தேன் திட்டம் செயல் படுத் தப்பட்டால்தான் காவிரிப் படுகைக்கு ஆபத்து என்று கருதுவது தவறு. ஓ.என்.ஜி.சி. நிறுவனம் இன்னும் பத்து ஆண்டுகள் தொடர்ந்து செயல்பட்டாலே காவிரிப் படுகையில் விவசாயம் நின்று போகும். மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு மேற்கொண்ட களவு ஆய்வுகள் இதை மெய்ப்பிக்கின்றன.

இப்போது திருவண்ணா மலைப் பகுதியில் இரும்புத்தாது எடுக்க நடுவண் அரசுடன் ஒப்பந்த மிட்டுக் கொண்டு ஜிண்டால் நிறுவனம் வேலையைத் தொடங்க முயற்சிக்கிறது. திருவண்ணாமல நகருக்கு அருகேயுள்ள கவுத்திமலை மற்றும் வேடியப்பன் மலைகளில் 45 விழுக்காடு இரும்பு இருக்கிறது. அதாவது அவை இரும்பு மலைகள் இப்பகுதியில் மூன்றரைக் கோடிடன் இரும்புத் தாது இருப்பதாகக் கணக்கிட்டுள்ளனர். தி.மு.க.வின் தமிழக அரசு ஜிண்டல் நிறுவனத் துக்கு இணக்கமாக ஒப்பந்த மிட்டது.

ஜிண்டல் நிறுவனம் 99 விழுக் காடும் தமிழக அரசு 1 விழுக்காடும் பங்குகளைப் பெற்றிருக்கும் டிம்கோ (Tamilnadu Iron One Mining corporation - TIMCO) என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டது. இது அரசு நிறுவ னம் அல்ல. ஆனால், தமிழக அரசு நிறுவனத்தின் ஒரு விழுக்காடு பங்கை மட்டும் சேர்த்து தி.மு.க. அரசு ஜிண்டல் நிறுவனம் அரசு நிறுவனம் போலச் செயல்பட வழி வகைகளைச் செய்தது. டிம்கோ என்பது ஜிண்டால் நிறுவனத்தின் நிழல் நிறுவனமாகும்.

 நடுவண் அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் சான்றிதழ் வழங்காத நிலையில் இந்திய சுரங்க நிறுவனம் இத்திட் டத்திற்கு அனுமதி வழங்கியிருக்கிறது.இத்திட்டத்திற்கு 2009 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இப்போது கவுத்தி மலையை வெட்டியெடுக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி ஜிண்டல்நிறுவனம் உச்சநீதி மன்றம் போயிருக்கிறது. மக்கள் கடுமையாகப் போராடினாலும், சூறையாடிவிடத் துடிக்கிறது.

இந்திய நடுவண் அரசும் காசுக்காக கையாளாகச் செயல்படும் மாநில அரசும் தமிழகக் கனிமவளங்களைப் பெருமுதலாளிய நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கின்றன. கிராம மக்களும், உழவர்களும், சுற்றுச்சூழல் மற்றும் தமிழின உணர்வமைப்புகளும் இத்தகைய திட்டங்களை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

கனிம வளமும் நடுவண் அரசும்:

ஒரு மாநிலத்திலுள்ள கனிமவளத்தை சூறையாடிக் கொள்ளும்படி ஒரு நிறுவனத்துடன் இந்திய அரசு ஒப்பந்தமிட முடியுமா? இது உலக ஒப்பந்தங்களின் படியும், சட்டங்களின் படியும் ஏற்கத்தக்கதா? வரைமுறையில்லாமல் கனிம வளக்கொள்ளை நடக்கும் சூழலில் தமிழர்கள் இப்பிரச்சினையை எதிர்கொள்வது எப்படி?

பொதுவாக, நிலம் எந்த விவசாயிக்குச் சொந்தமாயிருந்தாலும், அதன் அடியுள்ள கனிமங்கள் நடுவண் அரசுக்குச் சொந்தம் என்றும் அந்நிலத்தை அரசு எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்றும் ஒரு கருத்து பரப்பட்டிருக்கிறது.

அப்படித்தான், இன்று காவிரிப்படுகைப் பகுதி களில் உழவர்களிடம் ஒருவார்த்தைக் கூடக் கூறாமல், ஓ.என்.ஜி.சி. விளைநிலத்தை ஆக்கிரமித்துக் குழாய்களைப் பதிக்கிறது.சுற்றுச் சுவர்களை எழுப்புகிறது. அதிகம் படிப்பறிவு அற்ற விவசாயிகள் கையைப் பிசைந்து கொண்டு பரிதா பமாக நிற்கிறார்கள்.

ஓ.என்.ஜி.சி. அதிகாரிகளும், மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் சர்வாதிகாரம் பேசுகிறார்கள். காவிரிப் படுகை முழுவதுமே விளைநிலங்களைப் பெருவாரியாகப் பறிமுதல் செய்து வருகிறார்கள். மண்ணையும் மக்களையும் கறை வேட்டிக் கட்டியதரகர்கள் விலை பேசுகிறார்கள்.

நீரும், நிலமும், மலைகளும், காடுகளும், கடலும், கனிமவளங் களும் கைமாற்றித் தரப்படும் கொடுமை நடந்துகொண்டிருக்கிறது. நடுவண் அரசுக்கு உட்பட்டதாகச் சொல்லப்படும் கனிம வளங்கள் நிறைந்திருக்கும் விளை நிலங்களும், காடு கழனிகளும் வலுவில் கைமாற்றித் தரப்படுகின்றன. மொத் தத்தில், தமிழினத்தின் பாரம்பரியத் தாயகம், இன்றைய வாழ்வாதாரம், நாளைய இன இருப்பிற்கான இயற்கைவளம் அனைத்தும் சேதப் படுத்தப்படுகின்றன. இது இன அழிப்பின் ஒரு வடிவம்.

இயற்கை வளங்கள், கனிமங்கள் யாருக்குச் சொந்தம்:

ஒரு நிலப்பகுதியில் வாழும் மக்களுக்கு அப்பகுதி மீது இல்லாத உரிமை, டில்லிக்காரனுக்கு எங் கிருந்து வந்தது? ஒரு மக்களின் நிலப் பகுதியை டில்லி அரசு பறிமுதல் செய்து ஒரு பெருமுதலாளிய பன்னாட்டு நிறுவனத்துக்கு அளிப்பது என்பது சட்டப்பூர்வமானது தானா? ஒரு நிலப்பகுதியில் இருக்கும் இயற்கை வளங்கள் உண்மையில் யாருக்குச் சொந்தம்? இது குறித்து பன்னாட்டுச் சட்டங்கள் என்ன கூறுகின்றன? இந்தியச் சட்டம் என்ன கூறுகிறது?

பொதுநல வழக்குகள் மையம் (Centre for Public Interest Litigation) இந்திய அரசுக்கு எதிராக 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பற்றி தொடர்ந்த வழக்கில் (Writ petitions) (civil) 423 of 2010) உச்ச நீதிமன்றம் சில முக்கியக் கருத்துகளைப் பதிவு செய்தது.

முதலில் இயற்கை வளங்கள் (Natural resources) என்ப வற்றை வரையறுக்க முனைந்தது. பின்னர், “இயற்கை வளங்கள் மக்களுடையவை, ஆனால் மக்களின் சார்பாக அரசு அதன் மீது சட்டப்பூர்வ உரிமைகளைப் பெற்றிருக்கிறது. அந்த கோணத்தில் பார்த்தால், இயற்கை வளங்களை தேசத்தின் சொத்துகள்; ஏனெனில் அவற்றின் மதிப்பின் காரணமாக நாடு பலன டைகிறது.

இயற்கை வளங் களை விநியோகிக்க அரசு உரிமை பெறு கிறது. இருந்த போதிலும், அவ்வளங்கள் பொதுசொத்து தேசிய சொத்து என்பதால், அந்த இயற்கை வளங்களை விநியோகிக்கும் போது, சமத்துவம் மற்றும்பொதுச் சொத்து பராமரிப்பாளர் என்ற கோட்பாட்டுக்கு ஏற்பச் செயல்பட வேண்டும். பொது நன்மைக்குப் பாதிப்பைத் தரும் வகையில் எவ்வித நடவடிக் கையும்மேற்கொள்ளப்படாமையை உறுதி செய்ய வேண்டும்’’ என்று கூறியுள்ளது.

“Natural resources belong to the people but the sate legally wons them on behalf of the people...... 

The state is deemed to have a proprietory interest in natural resources and must act as guardian and trustee in relation to the same”...

என தீர்ப்பில் கூறப்பட்டுள்ள வரிகள் முக்கியமானவை. “இயற்கை வளங்கள்மக்களுடையவை’’ஆனால் மக்களின் சார்பாக அரசு அவற்றின் மீது உரிமை கொள்கிறது. இயற்கை வளங்களின் மீது அரசுக்கு “பெற்றுக் கொள்ளப்பட்ட உரிமை’’ உள்ள தாக கருதப்படுகிறது. அரசு இது தொடர்பாக, ஒரு பாதுகாவல ராகவும், அறங்காவலராகவும் நடந்து கொள்ள வேண்டும்’’ என்று உச்சநீதிமன்றம் குறிப்பிடுகிறது. மேலும் ஓர் உச்சநீதிமன்றத் தீர்ப் பில் (Reliance Natural Resources Limited v. Reliance Industries Limited (2007),7 SCC1) நீதியரசர் பி.சதாசிவம் குறிப்பிட்டுள்ளதை மேற்கோ ளாகக் காட்டியது:

“It is thus the duty of the Government to provide complete protection to the natural resources as a trustee of the people at large”

(பெருவாரியாக உள்ள மக்களுடைய அறங்காவலர் என்ற முறையில், இயற்கை வளங்களுக்கு முழு பாதுகாப்பளிப்பது என்பது அரசின் கடமை)

2ஜி அலைக்கற்றை வழக்கில் உச்சநீதி மன்றம் இயற்கை வளங்களின் மீதான உரிமை பற்றி கூறியுள்ளது சரியானதும் தவறானதும் ஆகும். இயற்கை வளங்கள் மக்களுக்கே சொந்தம் என்று கூறும் போது சரியாகவும், “மக்களின் அறங்காவலர் என்ற முறையில் இயற்கை வளங்களின் சட்ட பூர்வ உரிமையாளர் அரசு ஆகும்’’ (We hold, that the State is the legal owner of the natural resources as a trustee of the people…) என்று கூறும்போது தவறாகவும், உச்ச நீதிமன்றம் கருத்து ரைக்கிறது.

இது குறித்துக் கருத்துக் கட்டுரை வரைந்த எஸ். இராகவன், “மக்கள் தங்களுடைய அறங்காவலராகச் செயல்படும் உரிமையை உண் மையிலேயே அரசுக்கு வழங்கியிருக் கிறார்களா என்று பரிசோதிக்க நீதி மன்றம் எவ்வித முயற்சியும் மேற் கொள்ளவில்லை’’ என்று குறிப்பிடுகிறார். (The Hindu,8 sep, 2012) எப்போதுமே, இந்திய மக்களின் உண்மையான அறங்காவலராக நடுவண் அரசு நடந்து கொண்டதே இல்லை என்று குறிப்பிடு கிறார். காலனிய ஆதிக்கத்தின் போது நிலத்தைக் கட்டாயமாகக் கையகப்படுத்தப் பயன்படுத்தப் பட்ட Eminent Domain( உயர் அரச திகாரம்) என்ற கோட்பாட்டைப் பின்பற்றி, மக்களுக்கு உரிமையான இயற்கை வளங்கள் மீது வரைமுறையற்ற உரிமை கொண்டாடுகிறது இந்திய வல்லாதிக்க அரசு.

இந்திய அரசியல் சட்டம் மக்கள் சமூகங்கள், பழங்குடிகள் மற்றும் தேசிய இனங்களின் அவரவர்களது இயற்கை வளங்களின் மீதான உரிமைகளை ஏற்கவில்லை. அதற்கு மாறாக இயற்கை வளங்களை அள்ளிச் செல்ல எவருக்கு வேண்டுமானாலும் உரிமையளிக்கும் அதிகாரத்தை இந்திய அரசு கொண்டிருக்கிறது.

தாங்கள் வாழும் பகுதியில்,தங்கள் வீடுகளுக்கும் விளை நிலங்களுக்கும் கீழே பொதிந்துக் கிடக்கும், தங்கள் வாழ்வைப் பாதிக்கக் கூடிய கனிமங்கள் பற்றிய உரிமையை அந்தந்த மக்கள் சமூகங்களுக்கு இந்திய அரசியல் சட்டம் அளிக்கவில்லை. மாறாக, பல கூறுகளில், இந்திய அரசியல் சட்டம் ஊமையாக இருக்கிறது. இயற்கைவளங்கள் பற்றிய உரிமையையும், பயன்படுத்துவதற்கான முறையை பற்றி முழுமையான சட்டம் ஏதும் இதுவரை இயற்றப்படவில்லை.

பாதிப்புக்குள்ளாகும். மக்களும், இனங்களும் எழுந்து போராடும் போது அவர்களைக் கலகக்காரர்கள் எனவும் தீவிரவாதிகள் எனவும் பெயரிட்டு அழித்தொழித்து விட்டு, பெருமுதலாளிகளுக்கு இயற்கை வளங்களைப் படையல் போடுவது இந்திய அரசு பின்பற்றி வரும் வழிமுறை. பல்லாயிரம் கோடிகளைத் தங்கள் பங்காக நடுவண் அமைச்சர்களும், புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு சூறையாடலுக்கு ஒத்துழைத்து மாநில அமைச்சர்கள் பங்கு பிரித்துக் கொள்வதும்தான் நடைபெற்று வருகிறது.

இந்தியத் துணைக் கண்டம் முழுவதும், ஆண்டாண்டு காலமாக இயற்கை வளம் மக்களுக்கு மட் டுமே சொந்தமானதாக இருந்து வந்திருக்கிறது. ஆனால், தற்போது தான் “மக்களின் அறங்காவலர்கள்’’ என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், வட இந்தியப் பெரு முதலாளிகளுக்கும் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் உள்ள இயற்கை வளங்களை தாரை வார்த்து விட்டு, கோடிக் கணக்கில் கையூட்டுப் பரிசைப் பெற்றுக் கொள்கிறார்கள்.

ஆங்கிலேய காலனியாதிக்கக் காலத்தில் 1864 ஆம் ஆண்டு இந்திய வனத்துறை உருவாக்கப் பட்டது. 1865 இல் இந்திய வனச்சட்டம் நிறைவேற்றப் பட்டது. அது “ஒதுக்கப்பட்ட’’ (Reserved), ‘பாதுகாக்கப்பட்ட’ (protected) காடுகள் காலனிய அரசைச் சேர்ந்தவை என்று அறிவித்தது. நிலம் கையகப்படுத்தல் சட்டம்-- 1894 (Land AcquisitionAct of 1894) கொண்டுவரப்பட்டு, நிலத்தின் பயன்பாட்டை அரசு தீர்மானிக்கத் தொடங்கியது.

உயர் அரசுரிமை (Eminent domain) என்ற கோட்பாட்டைப் பயன்படுத்திக் மக்களின் நிலத்தைப் பொதுப் பயன்பாட்டுக்கு கையகப்படுத்தியது. இந்திய விடுதலைக்குப் பிறகு, அதே கோட்பாட்டைப் பயன்படுத்தி “வளர்ச்சித் திட்டங்களுக்கு’’ என்று கூறிநிலங்களைக் கையகப்படுத்தி முதலாளிகளிடம் ஒப்படைக்கிறது இந்திய அரசு. ஆங்கிலேயர்கள் காலத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்ட போது அதில் ஒரு வரையறை இருந்தது.

இன்று, நடுவண் அரசும் ஒ.என்.ஜி.சி., கெயில் போன்ற நடுவண் அரசு நிறுவனங்களும் எல்லை மீறிக்கையகப்படுத்தி வருகின்றன. அவை விவசாயம் பாதிப்புக்குள்ளாவது பற்றி எள்ளளவும் கவலை கொள்வதில்லை.

தேசிய இனங்களின் இயற்கை வளங்கள் மீதான நிலையான இறையாண்மைக் கோட்பாடு (Permanent Sovereignty over Natural Resources):

இயற்கை வளங்கள், கனிமங்கள் யாருக்குச் சொந்தம் என்பது குறித்து பன்னாட்டு ஒப்பந்தங்கள், பன்னாட்டுச் சட்டங்கள் என்ன கூறுகின்றன என்பதை தேசிய இன உரிமைப் போராளிகள் அறிந்து கொள்ள வேண்டும்.

இரண்டாம் உலகப் போர் (1939--1945) முடிவுற்ற பின் பல்வேறு தேசங்கள் காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்தன. அந்தந்த தேசங்களின் இயற்கை வளங்கள் மீது அத்தேசிய இனங்களுக்கே உரிமையை உறுதி செய்ய வேண்டிய தேவை எழுந்தது.

ஏனெனில் தங்கள் தாயகத்தில் உள்ள இயற்கை வளங்கள் மீது தேசிய இனங்களுக்கு உரிமை உறுதி இல்லாது போனால் தேசியத் தன்னுரிமையோ, தேசங்களின் இறையாண்மையோ, தேசிய சுதந்திரமோ அர்த்த மற்றுப் போகும்.

1952 -ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையின் பொது அவை (General Assembly) ஐ.நா.வின் மனித உரிமை மன்றத்திடம், “தேசிய இனங்களின் தன்னுரிமை (Right of peoples to self determination) குறித்த பன்னாடுகளின் ஏற்பைப் பெறும் வகையில் பரிந்துரைகளைத் தயாரிக்கும் படி வேண்டிக்கொண்டது.

இது குறித்து, மனித உரிமைகள் ஆணையம் கூறிய கருத்து முக்கிய மானது. தேசிய இனங்களின் தன்னுரிமையின் அடிப்படைக் கூறாக விளங்கும் உரிமை என்பது, “தேசங் கள் மற்றும் தேசிய இனங்களின் இயற்கை வளங்கள் மீது அவர்க ளுக்கு இருக்கும் உரிமையே’’ என்றும் ‘இந்த தேசங்கள் மற்றும் தேசிய இனங்களுடைய இயற்கை வளங்கள் மீது நிலையான இறையாண்மை அதிகாரம்’ பற்றி முழுமையாக தகவல் திரட்ட ஒரு தனி ஆணையம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.

அதன் படி ஓர் ஆணையம் (The United Nations Commission on Permanent Sovereignty Over Natural Resources, on December 1958, Resolution 1314 (xiii)) உருவாக்கப்பட்டது. 1961 ஆம் ஆண்டு இது ஓர் வரைவுத் தீர்மானம் தயார் செய்தது.

அவ்வரைவு தீர்மானம், ஐ.நா. வின் பொது அவையில், 1962 ஆம் ஆண்டு (தீர்மானம் 1803 (xvii) ), நிறைவேற்றப்பட்டது. இத்தீர் மானம், நாடுகளும் சர்வதேச அமைப்புகளும், கவனமாகவும் தளர்ச்சியில்லாமலும், தேசிய இனங்கள் மற்றும் தேசங்களின் (Peoples and nations), அவர்களுடைய இயற்கை வளங்களின் மீதான இறையாண்மையை மதித்து நடக்க வேண்டும் என்று விதித்தது.

ஒரு தேசிய இனத்தின் வாழ்நிலப் பரப்பில் பொதிந்துள்ள இயற்கை வளங்கள் மாற்ற இயலாத வகையில் அவ்வினத்திற்கே சொந்தம். விடுதலைப் பெற்ற தேசங்கள் அல்லது விடுதலைப் பெற்றி ராத மக்கள்கள் (தேசிய இனங்கள்) எவராயினும்,அவர்களுக்குத் தங்கள் இயற்கைவளங்கள் மீது நிலையான, மாறாத இறையாண்மை உரிமை உண்டு என்பதே இதன் பொருளாகும்.

ஐ.நா.வின் இத்தீர்மானத்தின் படி, தமிழர்கள் தாம் தமிழ்நாட்டிலுள்ள இயற்கைவளங்கள் மற்றும் கனிமங்கள் மீது முழு இறையாண்மை கொண்டவர்கள்ஆவர்.

தமிழ்நாட்டில் உள்ள கனிமங்களில் கை வைக்கவோ, ஏலம் விடவோ இந்திய அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. தமிழக அரசுக்கு ஒரு சிறிய தொகையை “ராயல்டி’’ என்ற பெயரில் கொடுத்து விட்டு, சகட்டு மேனிக்கு விளை நிலங்களைப் பாழ்படுத்தும் ஒ.என்.ஜி.சி கெயில் நிறுவனங்களுக்குத் தமிழகத்தில் செயல்பட எந்த உரிமையும் கிடையாது.

1966 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஐ.நா.வின் மனித உரிமை ஒப்பந்தங் களிலும் (The International Covenant on Economic, social and Civil and political Rights) தேசிய இனங்களுடைய இயற்கைவளங்கள் மீதான உரிமை உறுதிப் படுத்தப்பட்டு இருக்கிறது. கூறு:-1. அனைத்து இனங்களும் (Peoples) அவர்களுக்குச் சொந்தமான இயற்கை வளங்களைச் சுதந்திரமாகப் பயன்படுத்தலாம் என்றும், எந்த ஒரு இனத்தி மிருந்தும் அதன் வாழும் வழி வகைகள் பறித்தெடுக்கப்படமாட்டாது என்றும் இவ்வொப்பந்தங்கள் உறுதிகூறின.

ஒவ்வோர் இனத்துக்கும் “தன்னுரிமை’’அடிப்படை உரிமையாகும். அதன் மூலம், தங்களுடைய அரசியல் நிலையை தீர்மானித்துக் கொள் கின்றன. மேலும், சுதந்திரமாகத் தங்கள் பொருளியல், சமூக மற்றும் பண்பாட்டு வளர்ச்சியைத் தீர்மானிக்கின்றன என்பதை ஒப்பந்தத்தில் முதல் கூறிலும் முதற் பிரிவிலும், இயற்கை வளங்களின் மீதான உரிமையை முதல் கூறின் இரண்டாம் பிரிவிலும் ஒவ்வொப்பந்தங்கள் குறிப்பிடுகின்றன.

1. All Peoples have the right to self - determination. By virtue of that right they freely - determin their political status and freely pursue their economic, social and cultural development.

2. All People may, for thus our ends, freely dispose of their natural wealth and resources without prejudice to any obligations arising out of international economic coporation, based upon the principle of mutual benefit and international law. In no case may a people be deprived of its own means of subsistence’’

கூறு- 47 இவ்வாறு கூறுகிறது:

அனைத்து இனங்களின் உள் ளார்ந்த உரிமையாகிய அவரவர் களின் இயற்கைச் செல்வங்க ளை யும், வளங்களையும், இவ்வொப்பந் தத்தில் கூறப்பட்ட எதுவும் பாதிப் பதாக விளக்கமளிக்கலாகாது’’

(Nothing in the present Covenant shall be interpreted as impairing the inherent rights of all Peoples to enjoy and utilize fully and freely their natural wealth and resources)

 இயற்கை வளங்களின் மீது தேசிய இனங்களின் நிலைத்த இறையாண்மை உரிமை பற்றி இது வரை ஐ.நா.அவை 80 தீர்மானங்களை இயற்றி இருக்கிறது; பல ஒப்பந்தங்கள் ஏற்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் தேசங்களும், தேசிய இனங்களும் தங்கள் வாழ்வையும், இறையாண்மையும் காத்துக் கொண்டன.

தடுமாறும் தமிழகம்:

இவை எவற்றையும் கவனத்தில் கொள்ளாத தமிழ்த் தேசிய இனம் இன்னமும் தடுமாறுகிறது. தன்னுடைய இயற்கை வளங்கள் மீது தன் உரிமையை பிரகடனப் படுத்த மறுக்கிறது. தமிழகத் தலைவர்கள் இன்றுவரை தமிழ்த் தேசிய இன நலம் காக்கும் அரசியலை முன் னெடுக்கவில்லை. டில்லி வரை சென்று பிச்சை கேட்டு பெறுவதில் முனைப்புக் காட்டுகிறார்கள்.

அந்நியர்களைத் தமிழகத்தைச் சூறையாட அனுமதித்துத் தங்களை வளப்படுத்திக் கொள்ளும் தமிழ் நாட்டுத் தலைவர்களின் போக்கு நிறுத்தப்பட வேண்டும்.

தமிழக இயற்கை வளங்களையும், கனிமங்களையும் காப்பதற்கான உறுதி மொழியை தமிழக அரசியல் தலைமைகள் மக்களுக்கு வழங்க வேண்டும்.

தமிழகத்தை இதுகாறும் சூறையாடிக் கொண்டிருக்கும் வட இந்திய, பன்னாட்டு நிறுவனங்கள் கனிம வளக்கொள்ளையை நிறுத்திக் கொண்டு வெளியேறும்படி தமிழகத் தலைவர்கள் வற்புறுத்த வேண்டும்.

தமிழகக் கனிமவளங்களை எடுப்பதையும், பயன்படுத்துவதையும் தமிழகஅரசே செய்ய வேண்டும். ஆண்டுக்கு 1000 கோடி இலாபம் தரும் நெய்வேலி நிலக்கிரி நிறுவனத்தை இந்திய நடுவண் அரசு தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். கடந்த 55 ஆண்டுகளாகத் தமிழகத்தில் எடுத்த கனிமங்களின் மதிப்பைக் கணக்கிட்டு அதில் 50 விழுக்காட்டை இந்திய அரசு தமிழகத்துக்குச் செலுத்த வேண்டும். ஆண்டு தோறும் பல்லாயிரம் கோடிகளுக்கு எரிவாயும், பெட்ரோலியமும் தமிழகம் முழுவதும் எடுத்த ஓ.என்.ஜி.சி. தற்போது ஆண்டுக்கு 250 கோடி கொடுப்பதாக கூறுகிறது.

தமிழகத்திலிருந்து எடுக்கப் படும் எரிவாயு மற்றும் பெட்ரோலிய மதிப்பில் இது மிகவும் அற்பத்தொகை. இந்திய அரசு நிறுவியுள்ள எந்திரகட்டு மானங்களுக்கான மதிப்பை தமிழகத்துக்குத்தரபட வேண்டிய 50 விழுக்காடு கனிம மதிப்பீட்டுத் தொகையில் கழித்துக் கொண்டு, இதுவரை அளித்திருக் கும் இராயல்டி தொகையையும் கழித்துக் கொண்டு, மீதியைத் தந்து விட்டு, என்.எல்.சி.ஓ, என்.ஜி.சி., கெயில், போன்றவை உடனடியாக வெளியேற வேண்டும்.

இந்நிறுவங்களை நிர்வாகிக்கத் தமிழக அரசால் முடியும். நிர்வா கத்தை தமிழக அரசு ஏற்றால் தமிழக நிலங்களையும், இயற்கை வளங்களையும் சகட்டு மேனிக்குச் சூறையாட விடாமல் தமிழக அரசு நிர்வாகத்தைத் தமிழ்மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.

காவிரிப்படுகையில் 35 ஆண்டு களுக்கு மீத்தேன் எடுத்து, மக்களை வெளியேற வைத்து, பின்னர் 100 ஆண்டுகளுக்கு நிலக்கரி எடுக்கலாம் என்று நாக்கை சப்புக் கொட்டிக் கொண்டிருக்கும் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி நிறுவனத்துக்கும், திருவண்ணாமலைப் பகுதியில் இரும்புத்தாது எடுத்து அப்பகுதியை சூறையாடக் காத்திருக்கும் ஜிண்டால் நிறுவனத்துக்கும் ஒப்பந்தமிட்டு அனுப்பிவைக்கும் இந்திய அரசிடமிருந்து கனிம ஒப்பந்தமிடும் உரிமையைப் பறிமுதல் செய்வது உடனடித் தேவையாகும். அது ஒட்டுமொத்தத் தமிழினமும் போர்க்கோலம் பூணும் போது சாத்தியமாகும் ஒன்றுதான்.

Pin It