பாவலரேறு பெருஞ்சித்திரனார் குடும்பம், தனித்தன்மை மிக்கத் தமிழ்த் தேசியக் குடும்பம். தமிழக விடுதலையை முன்வைத்துப் போராடியதால், பாவல ரேறு பெருஞ்சித்திரனார் பலமுறை சிறை சென்றார். இப்பொழுது அவர் இளைய மகன் தோழர் பொழிலன் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்டதால் பத்தாண்டு சிறைத் தண்டனை பெற்று- அத்தண்டனை முதிர்வுற்ற நிலையில் விடுதலை யாகியுள்ளார்.

25.10.2013 அன்று காலை 8 மணிக்கு சென்னைப் புழல் சிறையிலிருந்து வெளிவந்த தோழர் பொழிலனை பல்வேறு இனஉணர்வு அமைப்பினரும், பொழிலன் தலைமையில் இயங்கும் தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழ்த் தேச மக்கள் கட்சி ஆகிய அமைப்பினரும் திரளாகக் கூடி முழக்கங்கள் எழுப்பி வரவேற்றனர்.

தோழர் பெ.ம. வாழ்த்து

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் உதயன், தோழர் க.அருண பாரதி, த.தே.பொ.க. சென்னை செயலாளர் தோழர் தமிழ்ச்சமரன், தாம்பரம் செயலாளர் தோழர் இரா.இளங்குமரன், தமிழக இளைஞர் முன்னணி தாம்பரம் செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், தோழர்கள் ரமேசு, பாபு, பாலன், மகளிர் ஆயம் தோழர் கள் ம.இலட்சுமி, த.சத்யா, புதுமொழி ஆகியோர் தோழர் பொழிலன் அவர்களை அவரது மேடவாக்கம் கூட்டுச்சாலை இல்லத்தில் 27.10.2013 காலை 10 மணிய ளவில் சந்தித்துப் பாராட்டுத் தெரிவித்தனர்.

தோழர் பெ.மணியரசன், நீண்டகாலச் சிறை வாழ் விலிருந்து விடுதலையான தோழர் பொழிலன் அவர் களைப் பாராட்டியும், வாழ்த்தியும் வெண் துண்டணி வித்து, ”சாதியும் தமிழ்த் தேசியமும்’’ என்ற நூலும் வழங் கினார்.

ஏன் சிறைப்பட்டார்?

1987ஆம் ஆண்டு அன்றைய இந்தியப் பிரதமர் இராசீவ் காந்தி, அமைதிப்படை என்ற பெயரில் இந்தியப் படையை தமிழ் ஈழத்திற்குள் அனுப்பினார். அப்படை விடுதலைப் புலிகளை வேட்டையாடியது, ஆறாயிரம் அப்பாவித் தமிழர்களைக் கொன்றது. தமிழ்ப் பெண்களைப் பாலியல் வன்முறைகள் செய்து கொடுமைப்படுத்தியது.

ஆனால், தமிழீழத்தில் இந்தியப்படையை அனுப்பி ஆக்கிரமிப்புப் போர் நடத்தித் தமிழர்களைக் கொன்று குவித்த இந்திய அரசு, ஈழத்தமிழர்களுக்கு அமைதிப் படை பேருதவிகள் புரிந்து வருவதாகப் பொய்ப் பரப் புரை செய்தது. இப்பொய்ப் பரப்புரையால் தமிழகத் தமிழர் நெஞ்சமெல்லாம் கொதித்தது.

அப்படிப்பட்ட சூழலில் 1988-இல் அனைத்திந்தியக் காங்கிரசுக் கட்சி மாநாடு - மறைமலை நகரில் நடந்தது. மாநாட்டிற்கு வரும் தலைவர்களுக்கு உறைக்க வேண்டும் என்ற அடிப்படையில் சென்னை கத்திப் பாரா நேரு சிலையில் வெடிகுண்டு வைக்கப்பட்டது. சிலைக்குப் பெருஞ்சேதம் ஒன்றுமில்லை.

அதன்பிறகு, பொய்ப் பரப்புரை செய்யும் இந்திய அரசுத் தொலைக் காட்சியைக் கண்டிக்கும் வகையில் கொடைக்கானல் அலைக் கோபுரத்தில் குண்டு வைத் தனர். அதில் மாறன் என்ற தோழர் சாவைத் தழுவி னார். தொலைக்காட்சிக் கோபுர நிலையச் சுவருக்குச் சிறுசேதம் ஏற்பட்டது.

இவ்விரு வழக்குகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு திண்டுக்கல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. பதினாறு பேர் மீது இவ்வழக்குப் புனையப்பட்டிருந்தது. முதலாவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர் தோழர் பொழிலன். பதினாறாவதுக் கடைசி நபராகக் குற்றம் சாட்டப்பட்டவர் புலவர் கலியபெருமாள். புலவர் கலிய பெருமாள், புதுவை சுகுமாரன், இளமாறன் உள்ளிட்ட எட்டுப் பேர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டனர்.

தோழர்கள் குழந்தை ஈகவரசன், குணத்தொகையன், தெய்வமணி உள்ளிட்ட நான்கு பேர்க்கு இரண்டாண் டுத் தண்டனை வழங்கப்பட்டது.

தோழர்கள் பொழிலன், தமிழ் முகிலன், (திரு. மா.செ.தமிழ்மணி அவர்களின் மகன்), கரூர் இளங்கோ, பம்மல் அறிவழகன் என்கிற திருவள்ளுவன் (காலஞ் சென்ற திரு. நா.வை.சொக்கலிங்கம் அவர்களின் மகன்) ஆகிய நால்வர்க்கும் வாழ்நாள் தண்டனை வழங்கப் பட்டது.

மேல் முறையீட்டில் சென்னை உயர்நீதிமன்றம் நால் வரின் வாழ்நாள் தண்டனையைப் பத்தாண்டுத் தண்ட னையாகக் குறைத்தது. அதை எதிர்த்து உச்சநீதி மன்றம் சென்றனர். கேரளத்தைச் சேர்ந்த நீதிபதி பாலகிருஷ் ணன் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு, உயர்நீதி மன்றத் தீர்ப்பை உறுதி செய்தது.

பிணையில் வராமல் சிறையில் இருந்த தோழர் தமிழ் முகிலன், பத்தாண்டு சிறைத்தண்டனை முடித்து முன்பே விடுதலையாகி விட்டார். தோழர் அறிவழகன் என்கிற திருவள்ளுவன் இறந்து விட்டார். கரூர் இளங்கோ இன்னும் தண்டனைக் காலம் முடியாமல் திருச்சி நடுவண் சிறையில் உள்ளார்.

பிணையில் வெளியில் இருந்த தால் பத்தாண்டுத் தண்ட னைக் காலம் நிறைவடைவதற்காக சிறை யில் வைக்கப்பட்டிருந்த தோழர் பொழிலன், 24.10.2013 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.இரா சேசுவரன், ஏ.ஆறுமுகசாமி ஆகியோர் வழங்கிய தீர்ப்பின் காரணமாக 25.10.2013 விடுதலை செய்யப்பட்டார்.

எப்படி விடுலையானார்?

அண்ணா பிறந்தநாள், காந்தி பிறந்தநாள், இந்திய விடுதலைநாள் போன்றவற்றிற்கு சிறையாளிகளுக்கு தண்டனைக் கழிப்பு செய்வதுண்டு. அவ்வாறு தண்ட னைக் காலம் குறைக்கப்பட்டோர் தீர்ப்பளிக்கப்பட்ட தண்டனைக் காலத்திற்கும் முன்னதாகவே விடுதலை செய்யப்படுவர். ஆனால், பிணையில் வெளியில் இருந்த வர்க்கு அக்காலத்தில் வழங்கப்படும் தண்டனைக் குறைப்புகள் பொருந்தாது என்பது இதுவரை இருந்து வந்த நடைமுறை. ஆனால், இந்த நடைமுறையை உச்ச நீதிமன்றம் 2011ஆம் ஆண்டு உடைத்தது.

2011ஆம் ஆண்டு எத்திராஜ் என்பவர் உச்சநீதி மன்றத்தில், தான் பிணையில் இருந்த காலத்தில் அரசால் அறிவிக்கப்பட்ட தண்டனைக் குறைப்புகள் தனக்கும் பொருந்தும் என்று வழக்குப் போட்டனர். அதை ஏற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அத்தீர்ப்பைக் காட்டி, வழக்கறிஞர்கள் சங்கரசுப்பு, பாவேந்தன் ஆகியோர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வாதாடி இவ்வெற்றியை ஈட்டித் தந்தனர்.

இவ்வழக்கின் வெற்றி, தோழர் பொழிலனுக்கு மட்டு மின்றித் தமிழகத்தின் இன்னும் பலருக்கு இப் போதும் வருங்காலத்திலும் பயன்படும்.

நீண்ட சிறை வாழ்க்கையில் மேலும் நெஞ்சுரம் பெற்று விடுதலையாகியிருக்கும் தோழர் பொழிலனுக் குப் பாராட்டுகள்!

Pin It