விருதுநகர் மாவட்டம், இராசபாளையத்திலிருந்து சேத்தூர் செல்லும் மதுரை மண்டல அரசுப் போக்கு வரத்துக் கழகச் சாத்தூர் கிளையின் பேருந்தில் ஏறிய நான் என் சொந்த ஊரான ‘சேத்தூர்’க்குப் பயணச்சீட்டு கேட்க நடத்துநர் பயணச்சீட்டைத் தந்தார். அந்தச் சீட்டில் ‘சேத்தூர்’ என்ற ஊர்ப் பெயர் இடம்பெற வில்லை என்பதைப் பார்த்துக் கொண்டிருந்த போது நடத்துனர் என்னைக் கவனித்துவிட்டு ஏன் விழிக் கிறீர்கள் என்று கேட்டுவிட்டார். நான் சேத்தூருக்குப் பயணச் சீட்டுக் கேட்டுள்ள போது அந்தப் பெயர் இடம்பெறாமல் ‘செய்த்தூர்’ என்று உள்ளதே என்றேன். சேத்தூர் என்பதற்குத்தான் நம் படித்த அறிவாளிகள் ‘செய்த்தூர்’ என்று குறிப்பிட்டுள்ளனர் என ஏளனமாகச் சொல்லிச் சென்றார். அவர் கூற்று உண்மையில் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது எப்படி இப்படி நிகழ்ந்துவிட்டது என எண்ணலானேன்.

அந்தச் சீட்டில் சேத்தூர் ஊரைக் குறிக்க ஆங்கிலத்தில் ‘Seithur’ எனப் பதிவாகியிருந்தது. பயணச் சீட்டை அச்சிட்டவர்கள் ‘Seithur’ என்று ஆங்கிலத்தில் உள்ளதை அப்படியே ஆங்கிலத்தை எழுத்துக்கூட்டித் தமிழுக்கு மாற்றிச் ‘செய்த்தூர்’ என்று அச்சிட்டுள்ளனர் என எண்ணி துணுக்குற்றேன். தமிழர்கள் 90 விழுக்காடு வாழும் தமிழ்நாட்டில் எங்கும் தமிழ் என அரசினர் சொல்லிக் கொண்டு திரியும் வேளை ஒரு பொருள் பொதிந்த ஊரான ‘சேத்தூர்’-ஐ எப்பொருளுமற்றத் தன்மையில் ‘செய்த்தூர்’ என்று அரசுப் போக்கு வரத்துக் கழகப் பேருந்தின் பயணச்சீட்டில் அச்சிட்டுத் தமிழைச் சிதைத்துள்ளனர். இந்த இழிவை அரசு நிறுவனமே இழைக்க முற்படும் போதுதான் நம் சிறுமையை உணர முடிகிறது.

“தமிழின் தொன்மை துலக்கும் தொல்காப்பியம்” தமிழின் சிறப்பாக எச்சொல்லும் பொருள் குறித்த வையே என இலக்கணம் வகுத்துள்ளது. தமிழ் சொற்கள் யாவும் காரணப் பெயர்கள்தான் என்றும் வரையறுக் கப்பட்டுள்ளது (வடமொழி (சமற்கிருதம்), இடுகுறிப் பெயர்கள் கொண்ட சொற்களைக் கொண்டது). அதாவது பல ஆயிரம் வேர்ச்சொற்கள் நிறைந்த தமிழ் பற்பல ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே பன்நெடுங்காலம் பேசப் பெற்று தமிழ்ச் சொற்கள் காரணப் பெயர்களாக உள்ளன என்பதிலிருந்து உலக மொழிகளிலேயே உயர் செவ்வியல் மொழி என்பதைப் பறைசாற்றிக் கொண்டுள்ளது. இதன் பின்னணியில் பார்த்தால் ‘சேத்தூர்’ எனும் ஊர்ப் பெயர்ச் சொல் சேற்றூர் என்று இருந்து, அதாவது சேற்று மண் வளம் கொழிக்கும் செழுமையான பொருள் குறிக்கும் காரணத்துடனான பொருள் பெயர் இப்போது பொருளற்ற ‘செய்த்தூர்’ என்று ஆக்கப்பட்டுவிட்டது.

மேலும் தமிழ்ச்சொற்கள் அவை ஒலிப்பது போன்றே எழுத்துக்களைக் கொண்டிருக்கும். அதாவது ஒரு சொல்லின் ஒலியை எழுத்துக் கூட்டிச் சொல்லிக் கொண்டு ஒவ்வொரு எழுத்தாக எழுதினால் அச்சொல், தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத தமிழைப் பயிலும் எவராலும் பிழையின்றி எழுதப்பட்டுவிடும். காட்டாகச் சேத்தூர் என்பது எழுத்துக்கூட்டிச் ‘சேத், தூர்’ என ஒலிக்கும் போதே இன்னலேதுமின்றி எளிமையாகச் சேத்தூர் என்று எழுதமுடியும்; பிழையேதும் ஏற்பட வாய்ப்பில்லை. ஒவ்வொரு தமிழ்ச்சொல்லும் ஒலிப்பின் உருவாகவே அமையும் என்பதுதான் தமிழின் பெருஞ் சிறப்பு. விதி விலக்குகள் சில இருக்கத்தான் செய் கின்றன. அதற்கும் உரிய இலக்கணத்தைத் தொல் காப்பியம் தருகின்றது. காட்டாக மழையின் போது ‘கொடை’ எடுத்து வா எனச் சொல்லும் போது ‘குடை’ என்ற பொருள் பெயர்ச்சொல் மருவிவிட்டது. ‘குடை’ எடுத்து வா எனப் பொதுவாகச் சொல்வது இல்லை. அதேபோன்று ‘கொடம்’ கொண்டு வா என்பதில் ‘குடம்’ கொடமாக மருவியுள்ளது.

சேத்தூர் என்ற ஊர்ப் பெயர்ச் சொல்லை ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள Seithur என்பதைச் ‘சேத்தூர்’ ஊர் அறியாதவர் அதை ஒலிக்க முற்படின் ‘SEI’ என்ற அசையைச் சேய், செய் எனவும் ‘THUR’ என்பதைத்துர், தூர் எனப் பலவாறு ஒலிக்க நேரிட்டு அவ்வூரின் பெயரே பொருளற்றதாகிவிடும். காட்டாக, ஆங்கிலச் சொற்கள் Cut, Put போன்றவற்றை ஒலிக்கும் போது ஊரவ எனும் சொல்லின் ‘அசை’ ‘cu’ என்பது ‘க’ என்ற ஒலியுடன் ‘கட்’ என்றாகிறது; put என்பதில் ‘pu’ முன் போன்று ‘ப’ என்றாகாமல் ‘பு’ என ஒலித்து ‘புட்’ ஆகிறது. இன்னும் வியப்பு, உரவ என்பதின் முதல் எழுத்து ‘உ’ என்பதைச் ‘சி’ என்ற ஒலியைத்தான் கொண்டுள்ளது. ஆனால் அது ‘ர’ எழுத்துடன் சேர்கையில் ‘cu’ என்பது ‘க’ என்றாகிவிடுகின்றது. அதே போன்றதுதான் put. ‘P’ எழுத்து ‘பி’ எனத்தான் ஒலிக்கப்படுகிறது. ஆனால் அது ‘u’வுடன் இணையும் போது ‘pu’ என்ற அசைச் சொல் ‘பு’ என்றொலிக்கிறது. இவ்வாறு ஆங்கிலச் சொற்க ளெல்லாம் அவற்றிலுள்ள எழுத்துக்களின் ஒலியைப் பெறாமல் ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறான ஒலிகளுடன் ஒலிக்கின்றன. ஆனால் தமிழ் மொழியில் ஒவ்வொரு எழுத்தின் ஒலியும் அதைக் கொண்டுள்ள எல்லாச் சொற்களிலும் அதற்கடுத்துவரும் எழுத்தின் ஒலியின் ஊடாடல் இன்றி ஒரே ஒலியுடன் தான் ஒலிக்கப்படுகிறது. காட்டாகக் கண், கனவு, கதவு. களவியல், கயமை, கடமை, கட்டில், கடன்,.... என ‘க’ எழுத்தின் ஒலி அது இடம்பெறும் எல்லாச் சொற்களிலும் ‘க’ என்ற ஒலியைத்தான் கொண்டுள்ளது.

எனவே செழிப்பான சொல் வளம் கொண்ட செம்மொழியாம் தமிழை இதுபோன்று ‘சேத்தூர்’ என்ற ஊர்ப் பெயர்ச் சொல்லை ஆங்கிலத்தில் SEITHUR என்று எழுதப்பட்டதிலிருந்து ‘செய்த்தூர்’ என்றெழுதி தமிழ்மொழியைச் சிதைத்துவிட்டது தமிழக அரசின் துறை.

இதே நிலை சென்னையிலும் ஏற்பட்டுவிடும் என்று எண்ணத் தோன்றுகின்றது. தமிழ்நாட்டின் ஊர்களின் பெயர்கள் அவையுள்ள நிலங்களைக் குறிப்பதாக அமைவதாகத்தான் உள்ளன. “ஊர்” என்ற சொல் மக்கள் வாழ் பகுதிகளைக் குறிக்கும் ஒரு பொதுச் சொல். ஆனால் பாக்கம், பட்டு, துறை, ஆறு எனப் பல்வேறு விகுதிகளுடன் முடிவடையும் ஊர்களின் பெயர்ச்சொற்கள் அப்பகுதியின் நிலத்தன்மையைக் குறிப்பதாக உள்ளன. ‘பாக்கம், பட்டு’ என்பவை கடற் பகுதி. கடல்சார் பகுதிகளைக் குறிக்கும். ஆறு, துறை என்பவை ஆற்றுப்படுகைப் பகுதிகளைக் குறிப்பதாக இருக்கும். காட்டாக, சேத்துப்பட்டு, சேப்பாக்கம், நுங்கம் பாக்கம், கோடம்பாக்கம் என்ற பெயர்கள். அவையெல் லாம் கடல்சார் பகுதிகளாக இருந்தன என விளக்கும். ஆனால் ‘சேப்பாக்கம்’ என்பதை ஆங்கிலத்தில் ‘Chepauk’ என்று ஆங்கிலத்தில் எழுதப்படுகிறது. முன்பே சொன்னது போல, ‘சேத்தூர்’ ‘செய்த்தூர்’ என்றானது போல் ‘சேபாக்’ என்றாகிவிடலாம். ‘சேத்துப்பட்டு’ என்பதற்கான ‘Chetpet’ என்ற ஆங்கிலச் சொல் ‘செட்பெட்’ என்றாகி விடும் இழிநிலையும் ஏற்படலாம். இதைத் தவிர்க்க, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் என்பவை தற்போது ஆங்கிலத்திலும் Kodampakkam, Nunkampakkam என்றிருப்பது போல் Chepauk  என்றிருப்பதை Chepakkam என்றும், Chetpetஐ Chettuppattu என்றும் எழுதிடல் வேண்டும். இதேபோன்று ‘பேட்டை’ என்ற சொல் விகுதியாக இடம்பெறும் ஊர்ப்பெயர்ச் சொல் பாதுகாப்பான பகுதியைக் குறிப்பதாக இருக்கும். இங்கு சைதாப் பேட்டை, தேனாம்பேட்டை என்பவற்றை Saidapet,Saidapet,Thenampet என்ற ஒலிப்பில் ஆங்கிலத்தில் குறிப்பிடப் படுவது பின்னாளில் சைதாப்பெட் என்றும் தேனாம்பெட் என்றும் ஒலிக்க நேரிட்டு தமிழிலும் எழுதவிடப்பட லாம். எனவே இவற்றை ஆங்கிலத்திலும் Saidapettai, Saidapettai,Thenampettai என்று எழுதப்பட வேண்டும்.

இவ்வாறெல்லாம் காலப்போக்கில் வரும் நாளில் தமிழிலிருந்து ஊர்ப்பெயர்கள் ஆங்கிலத்தில் எழுதப் பெற்று அவற்றிலிருந்து தமிழுக்கு மாற்றிட நேரிட்டு மேலே சொன்ன பொருளற்ற ஒலிகளுடன் ஊர்ப் பெயர் களாக மாறி தமிழ் ஒலி இன்றி தமிழைச் சிதைக்கவும், அழிக்கவும் நேரிட்டுவிடலாம். இதைக் கவனத்தில் கொண்டு தமிழ்நாட்டிலுள்ள, ஆங்கிலத்தில் உள்ள ஊர்களின் பெயர்களையெல்லாம் Tuticurion என்பதைத் Thoothukudi என ஒலிப்பதாக ஆங்கிலத்தில் எழுதவும், Nilgiri-ஐ Neelamalai (Neelakiri)  என்றெல்லாம் ஆங்கிலத்தில் தமிழொலியுடன் மாற்றிய மைத்தது போல் ஒரு நெடும் பணியாகத் திட்டமிட்டு ஒரு கால வரைக்குள் செயல்படுத்திட வேண்டும். இதனால் ஊர்ப் பெயர்களின் தொன்மைத் தன்மையைப் பாதுகாப்ப துடன் இவ்வகையில் தமிழின் செம்மை சிறக்க நீடித்து, தமிழ் மண், மக்கள், இனம், பண்பாடு காப்பாற்றப்படும்.

இதன் நீட்சியாக, நம் ஊர்ப் பெயர்ச் சொற்கள் பிற மொழிக்கு மாற்றம் பெறும் போது தமிழின் ஒலி நிலைபெறவேண்டும் என விழையும் நாம் பிறமொழிச் சொற்களைத் தமிழுக்கு மாற்றும் போது அதற்கிணை யான தமிழில் எழுத்துக்கள், சொற்கள் இருக்குமெனில் அந்த மொழியின் ஒலியிலேயே ஒலிப்பதாக எழுதுவது தான் நியதி, காட்டாக, ‘China’ என ஆங்கில எழுத்துக் களிலிருந்து தமிழில் ‘சீனா’ என்றொலிப்பதை அம்மொழி யினர் தம் நாட்டை எப்படி ஒலிக்கிறார்களோ அதே போன்று தமிழிலும் ஒலிப்பதாகத் தமிழ்ப் பெயர்ச் சொற்களாக எழுதப் பெற வேண்டும். அதாவது நுபேடயனே என்பதை இங்லாண்ட் என எழுதலாமே? என்ற திறந்த வினாவுடன்........

Pin It