டிராபிக் இராமசாமி கொலை மிரட்டல் குற்றப் பிரிவில் கைது செய்யப்பட்டது பற்றி என்ன கூறுகிறீர்கள்?

சென்னை புரசைவாக்கம் அழகப்பா சாலையில் 11.03.2015 பிற்பகல் சட்டவிரோதமாக நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் புகழ்ச்சி விளம்பரப் பதாகைகளை தன்னந்தனியராக அகற்றிக் கொண்டிருந்தபோது அவரைத் தொலைக்காட்சி செய்தியாளர் நேர்காணல் எடுத்துக் கொண்டிருந்தாராம். அதனால் அப்போது அச்சாலையில் தமது மகிழுந்தை ஓட்டிக் கொண்டு வந்த உணவு விடுதி உரிமையாளர் வீரமணி, போக்குவரத்துக்கு இடையூராக நிற்கிறீர்கள் என்று பேசினாராம். அதனால் ஆத்திரமடைந்த 82 அகவை டிராபிக் இராமசாமி வீரமணியின் கார் கண்ணாடியை உடைத்ததுடன் வீரமணியைக் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார் என்றும் மற்றக் குற்றப் பிரிவுகளின் கீழும் அவரை 12.03.2015 விடியற் காலை காவல் துறையினர் தளைப்படுத்தி சிறையில் அடைத்தனர்

தமிழ்நாட்டின் பண்பாட்டைக் கேவலப்படுத்தும் வகையில் தரக்குறைவான வர்ணனைகளில் அம்மா புகழ், அய்யா புகழ் பதாகைகள் தமிழகச் சாலைகளை ஆக்கிரமிப்பது வழக்கம்அவற்றை அகற்றிட நீதி மன்றத்தில் ஆணை பெற்றுத் தனிநபராக அகற்றி வருபவர் டிராபிக் இராமசாமிஆட்சியில் இருக்கும் அம்மா கட்சிக்கு இதனால் மிகப்பெரிய அளவில் சுய மரியாதை”பாதிக்கப்பட்டு வஞ்சினத்தோடு காத்திருந்தனர்

ஒரு வாக்குவாத நிகழ்வைப் பயன்படுத்தி 82 அகவை முதியவர் மீது கார் கண்ணாடியை உடைத்தார், கொலை மிரட்டல் விட்டார் என்று பொய்க்குற்றம் சாட்டி சிறையில் அடைத்துள்ளார்கள்புகார் கொடுத்த அதே வீரமணி, “டிராபிக் இராமசாமி எனது கார் கண்ணாடியை உடைக்கவில்லை, பேனட் மீதுதான் அடித்தார்”என்று இப்போது கூறியுள்ளார்

அம்மா கட்சியினர்க்கு உண்மையான தெய்வபக்தியும், தெய்வ பயமும்  இருந்தால் பழிவாங்கும் வெறியோடு இத்தனை பெரிய பொய் வழக்கைப் போட்டிருக்க மாட்டார்கள்

தமிழக ஆட்சியாளர்கள் தங்கள் தவற்றை உணர்ந்து டிராபிக் இராமசாமி மீது போட்ட வழக்கைக் கைவிட்டு அவரை விடுதலை செய்ய வேண்டும். தமிழகக் காவல்துறை உயர் அதிகாரிகள் எப்போதுமே ஆளுங்கட்சியின் அடியாட்கள் என்பதை இப்போதும் மெய்ப்பித்துள்ளார்கள்.

தலைமை அமைச்சர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணம் ஈழத் தமிழர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் ஏதாவது பயன் தருமா?

இலங்கை நாடாளுமன்றத்தில் 13.3.2015  அன்று நரேந்திர மோடி ஆற்றிய உரையில், அவரது பயணத் திட்டத்தின் கரு உள்ளது.

இந்தியா, இலங்கை, மாலத் தீவு உள்ளிட்ட நாடு களுக்கிடையே கடல் பகுதி பாதுகாப்பு மேம்பட வேண் டும்இந்தியா, இலங்கை நாடுகளின் பாதுகாப்பு மற்றும் வளத்துக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைதி நிலவ வேண்டியது அவசியம்.

இரு நாடுகளும் இணைந்து செயல் பட்டால் நமது இலட்சியங்களை வெற்றிகரமாக அடைய முடியும்இரு நாடுகளும் ஒருவர் நலனில் மற்றொருவர் அக்கறையு டன் செயல்பட வேண்டும்’’.

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் வளராமல் தடுக்க வேண்டும் என்பது அமெரிக்க இந்திய அரசுகளின் உடனடி வேலைத் திட்டம்அதற்கு இசைந்தவராக இராசபட்சே இல்லாததால் அமெரிக்கா வுடன் இந்தியாவும் இணைந்து இராசட்சேயைத் தேர் தலில் தோற்கடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டன

இப்பொழுது, ஓரளவு சீன நெருக்கத்திலிருந்து, இலங்கையை நகர்த்தி இடைவெளியை உண்டாக்கி யுள்ளனஇந்தியப் பெருங்கடல் யார் வசம் இருக்கி றதோ அவர்கள் தாம் எதிர்காலத்தில் உலக ஆதிக் கத்தை நிலை நாட்ட முடியும் என்ற நிலை இப்போது உருவாகியுள்ளதுஇப்போட்டியில் சீனா முக்கியமான நாடு. சீனர்களின் தந்திரம் மிக நாசுக்கானதுமிகவும் ஆபத்தானதுஎனவே அமெரிக்காவும் இந்தியாவும் கலவரமடைந்துள்ளன

இந்நிலையில் இலங்கைக்குக் கூடுதல் சலுகைகளை அமெரிக்காவும் இந்தியாவும் அளிக்க வாய்ப்புள்ளதுஈழத் தமிழர் சிக்கல் இலங்கைக்கு எதிராகப் பன்னாட்டு அரங்கில் பெரும் பின்னிழுப்பாக உள்ளதுநலத்திட் டங்கள், சில்லரை அதிகாரங்கள் தருதல் என்ற அளவில் ஈழத் தமிழ் மக்களைத் தங்கள் வயப்படுத்திக் கொள்ள இலங்கையும் இந்தியாவும் முயலும். ஏற்கெனவே இந்தியாவின் தமிழீழத் தூதுவராக சம்பந்தர் செயல் பட்டு வருகின்றார்

ஈழத் தமிழர் இனப்படுகொலை செய்யப்பட்டது, போர்க்குற்றங்கள் ஆகியவற்றின் மீது பன்னாட்டுப் புல னாய்வு, தமிழீழம் குறித்த கருத்து வாக்கெடுப்பு போன்ற அடிப்படையான கோரிக்கைகளிலிருந்து தமிழீழ மக்களின் கவனத்தை மாற்றி நல்லிணக்கம்- நலத்திட் டங்கள் என்பனவற்றில் திருப்பிவிடும் தந்திரத்தில் இந்தியாவும் இலங்கையும் ஈடுபட்டுள்ளன. எதிரிகள் நடத்தும் இரத்தம் சிந்தாத போர் இது.  “நல்லிணக்கப் போர்’’என்று நாம் அடையாளம் காணலாம்

நரேந்திர மோடி யாழ்ப்பாணத்தில் தமிழர்களுக்கு வீட்டுத் திறவுகோல் அளிப்பது, புதுமனை புகு விழாவில் பால் காய்ச்சுவது என்ற பாணியில் நல்லிணக்கப் போர் முறை தொடரும்

1987இல் இந்தியா - இலங்கை ஒப்பந்தம் போட ராஜீவ்காந்தி என்ன நோக்கத்தோடு இலங்கை சென்றாரோ அதே நோக்கத்தோடுதான் இப்போது நரேந்திர மோடி அங்கு சென்றார்.

இந்தியாவைப் பகைத்துக் கொண்டு எந்த முன்னேற் றத்தையும் எட்ட முடியாது என்ற உளவியல் ஈழத் தமிழர்களிடம் கூடுதலாகப் பரவும் வாய்ப்புள்ளது.

சிங்களர்களை விட நாம் இந்திய அரசுக்குக் கூடுதல் நெருக்கமாகி, சிங்கள அரசுக்கு இந்தியா மூலம் நெருக்க டிகள் கொடுத்து கூடுதல் அரசியல் உரிமைகளைப் பெறலாம் என்ற எண்ணம் ஈழத் தமிழர்களிடம் உருவா கலாம்அதற்காக இந்தியாவின் இந்தியப் பெருங்கடல் ஆதிக்கத்திற்கு ஈழத் தமிழர்களில் கணிசமானோர் இணக்கம் தெரிவிக்கும் சூழலும் வரலாம்.

1983 சூலை படுகொலையைப் பயன்படுத்திக் கொண்டு இலங்கை அரசுக்கு தனது பன்னாட்டு அரசியல் நோக்கில் அன்றையத் தலைமை அமைச்சர் இந்திராகாந்தி நெருக்குதல் கொடுத்தார்ஈழ விடுத லைப் போராளி அமைப்புகளுக்கு இந்தியாவில் போர்ப் பயிற்சி அளித்தார். அது போன்ற உத்தியை ஆயுதக் குழுக்கள் அல்லாத சனநாயகக் குழுக்களிடம் இந்தியா இப்போது கடைபிடிக்கலாம். அன்றைய இந்திரா காந்திக்கு தனி ஈழம் அமைக்கும் திட்டம் எதுவும் கிடையாது. விடுதலை அமைப்புகளைப் பயன்படுத்தி, இலங்கை அரசு அமெரிக்கா பக்கம் சாயாமல்  தடுப்பது மட்டுமே அவரது  உத்தியாக இருந்தது. இன்றைய நரேந்திர மோடிக்கு இலங்கை, சீனா பக்கம் சாயாமல் தடுப்பதே மிகப் பெரும் உத்தியாக இருக்கிறதுவரலாற்று முரண் என்னவெனில், அன்று அமெரிக்கா வுக்கு எதிராக, இன்று அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டு சீனாவுக்கு எதிராக!!

மோடி - -ஒபாமா கூட்டணியின் அழுத்தம் காரண மாகவே ஐ.நா. மனித உரிமை மன்றம் இலங்கையின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை வெளியிடுவதை ஆறுமாதம் தள்ளி வைத்துள்ளது

நம்மைப் பொறுத்தவரை இந்திய அரசு தமிழினப் பகை அரசு! ஈழத்தமிழர்கள் எடுக்கும் உத்திகளுக்கு இசைய நமது அரசியல் உத்தியை நாம் வகுக்கவேண்டிய தேவை இல்லை.

இந்திய அரசுக்கு எதிரான தமிழக மக்களின் பேரெழுச்சியே தமிழ்நாட்டிற்கும் நன்மை தரும்; தமிழ் இனத்திற்கும் பயன்தரும்

தமிழக மீனவர் உரிமையை விட்டுக் கொடுத்து இலங்கையுடன் சமரசம் செய்ய இந்தியா முயல்கிறது. அத்திட்டத்தின்படி கச்சத்தீவை தமிழ்நாடு கேட்கக் கூடாது என்ற கருத்தைத் தமிழக மீனவர்களிடம் வலுவாகப் பரப்பி விட்டது இந்திய அரசு.

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து தி.மு.. போராட்டம் நடத்தப் போவதாக கலைஞர் கருணாநிதி அறிவித்துள்ளரே?

அது நிலம் கையகப்படுத்தும் சட்டம் அன்று நில வன்கவர்தல் சட்டம்!

பாசக தில்லியில் பதவிக்கு வந்தது முதல் அதனுடன் கூட்டணி சேர கலைஞர் பல முயற்சிகள் எடுத்தார். பல பாராட்டுகள். செல்லமாகத் திறனாய்வு செய்யும் உத்திகள் என்று எவ்வளவோ செய்து பார்த்தார்எதுவும் பலனளிக்கவில்லைசீச்சீ இந்தப் பழம் புளிக் கும் கதைக்கு வந்து விட்டார்

இந்தியாவே  நில  வன்கவர்தல் சட்டத்தை எதிர்த்துப் போர்க்குரல் எழுப்பும் போது ஒதுங்கி நின்றால் உள்ளதும் போய்விடும் என்ற மன உளைச்சலில்தான் பாசக அரசுக்கு எதிரான போராட்டம் என்றார் கருணாநிதி

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை செயலலிதா ஆதரிக்கிறாரே?

ஒன்று வழக்கு; இன்னொன்றுபுரிந்துணர்வு ஒப்பந்தம். நிலம் கையகப் படுத்துவதில்தான் முதலமைச் சர்கள்  பெருநிறுவனங்களுக்குப் புரியும்படி நெருக்கடி கொடுத்துப் பெறவேண்டியதைப் பெட்டி பெட்டியாகப் பெறலாம். முதலமைச்சர்கள் சட்டப்படி மிகப்பெரிய மனை வணிகர்கள் அல்லவா?

மம்தாவும் நில வன்கவர்தல் சட்டத்தை ஆதரிக் கிறார். அவருக்கு அங்கே சாரதா நிதியக வழக்குகள்!

1956 நவம்பர் 1-இல் மொழிவழி மாநிலமாகத் தமிழ் நாடு அமைப்பதற்கு முன் தமிழ்நாட்டில் வாழ்ந்தவர்கள் அனைவரும் தமிழ்த் தேசிய மக்களே, அவர்கள் வெளியார் அல்லர் என்று கூறுகிறீர்கள், ஆனால் தஞ்சைப் பெரிய கோயில் அறங்காவலர் பொறுப்பிலிருந்து மராத்தியரான பான்ஸ்லே வெளியேற வேண்டும் என்கிறீர்கள். இது முரண்பாடில்லையா?

பான்ஸ்லேயைத் தமிழ்நாட்டை விட்டு வெளியேறச் சொல்லவில்லை. மற்ற மராத்திய மக்களைப் போல் அவரும் தமிழகக் குடிமகனாக சம உரிமையுடன் வாழட்டும். ஆனால் தமிழ்ப்பேரரசன் இராசராசன் எழுப்பிய தஞ்சைப் பெரிய கோயிலுக்கு அவர் பரம்பரை அறங்காவலராக இருக்கக் கூடாது என்கிறோம். அவர் இராசராசன் பரம்பரையா? மண்ணின் மக்களாகிய தமிழர்கள்கூடத் தஞ்சைப் பெரிய கோயிலுக்கு பரம்பரை அறங்காவலராக இருக்க முடியாது என்பதே நமது நிலைபாடு.

தஞ்சைப் பெரிய கோயில் உள்ளிட்ட அரண்மனைத் தேவஸ்தானக் கோயில்கள் என்று பெயரிடப்பட்டுள்ள 88 கோயில்களையும் இந்து அறநிலையத்துறையில் சேர்க்க வேண்டும் என்கிறோம். இதில் எந்த முரண் பாடும்  இல்லை!

ஊழல் வழக்கிலிருந்து செயலலிதா விடுதலை அடைந்திட வேண்டும் என்பதற்காகக் கோயில்களில் அமைச்சர்கள் பால்குடம் எடுப்பு விழா - காவடி தூக்கும் விழா - சோதிடத்திற்கேற்ற எண்ணிக்கையில் இலவச திருமண விழாக்கள் - வேண்டுதல் நடைப்பயண விழா என்று ஒரே கூத்தும் கும்மாளமுமாக இருக்கிறார்களே தமிழக நிர்வாகம் எப்படி இருக்கிறது?

அதிகாரிகள் முடிந்தவரை அரசாங்க வேலைகளைப் பார்த்துக் கொள்வது, அமைச்சர்கள் செயலலிதா பாத பூசையில் இருப்பது என்ற அடிப்படையில் ஒரு கூட் டாட்சித் தத்துவத்தை செயல்படுத்தி வருகிறது அ.. .தி.மு.. ஆட்சி.

தமிழக ஆட்சியில் ஒரு முதலமைச்சர் கிடையாது. மக்களின் முதல்வர் செயலலிதா மறைமுக முதல்வராக இருக்கிறார். முதல் அமைச்சராக ஆளுநர் முன்னிலை யில் உறுதி மொழி எடுத்துக் கொண்ட ஓ. பன்னீர்ச் செல்வத்தை அ...தி.மு.. அமைச்சர்களும் இரண்டாம் நிலைத் தலைவர்களும் அண்ணன் ஓ.பி.எஸ். என்றுதான் அழைக்கிறார்கள். மற்ற அமைச் சர்களை மாண்புமிகு. கூட்டுறவு அமைச்சர்- சமூக நலத்துறை அமைச்சர் என்று விளிப்பார்கள். அதே மேடையில் ஓ. பன்னீர்ச்செல்வத்தை அண்ணன் ஓ.பி.எஸ். என்றுதான் அ...தி.மு..வினர் விளிக்கி றார்கள். மக்கள் இதை இரசிக்கிறார்கள்.

தமிழக அரசியலில் தொட முடியாத உச்சத்தில் செயலலிதா - அவருக்குக் கீழே - அவருடைய பாதத்திற் குக் கீழே - இரண்டாம் நிலைத் தலைவர்கள். வரம் கொடுத்தவன் தலையில் கால் வைத்ததைப் போல் சனநாயகத்தால் பதவி பெற்று சனநாயகத்தைக் காலால் எட்டி உதைக்கிறது அ.தி.மு.

Pin It