­­­­­­இன அடிப்படையில் உரிமை இழப்புகள், ஒடுக்குமுறைகள், உயிரிழப்புகள் ஏற்படும் போ தெல்லாம் அவற்றிற்கு எதிர்வினையாகத் தமிழர் கள் எழுச்சி கொள்வார்கள்; கொந்தளிப்பார்கள். அவ்வாறு இனஎழுச்சி ஏற்படும் போதெல்லாம், தமிழகத்திலுள்ள இடதுசாரி இந்தியத் தேசிய வாதிகளும் வலதுசாரி இந்தியத் தேசியவாதிகளும் பீதி அடைகின்றனர். இந்தியத் தேசியத்திற்கும், இந்திய ஒற்றுமைக்கும் இடையூறு ஏற்பட்டு விடுமோ என்று கலவர மடைகின்றனர்; கலங்கித் தவிக்கின்றனர்.

இன முரண்பாட்டையும் இனச் சிக்கலையும் வெறும் வர்க்கச் சிக்கலாகவும், அரசியல் கட்சி களின் குறைபாடுகளாகவும் திரித்துக்காட்டி இரசவாதம் செய்வார்கள் இந்தியத் தேசிய இடது சாரிகள்.

தமிழகத்திலுள்ள இடதுசாரி இந்தியத் தேசியத் வியாதிகளில் ம.க.இ.க.வினர் சற்று வேறு பட்டவர்கள். அவர்களின் திரிபு வேலைகளை அடையாளம் காண்பது கொஞ்சம் கடினம். எழுச்சிகொண்டு வீதிக்கு வரும் தமிழர்களுடன், கூட்டத்தோடு கூட்டமாகப் புகுந்து கொள் வார்கள். தமிழின உணர்வாளர்கள் எழுப்பும் முழக்கங்கள் சிலவற்றைத் தாங்களும் உரத்து எழுப்புவார்கள். இன உணர்வாளர்களைப் போல் பேசுவார்கள்.

அந்த வேடதாரிகளை அடையாளம் காணத் தெரியாத அப்பாவித் தமிழர்கள் ஏமாந்து அவர்கள் மீது அன்பு காட்டுவார்கள். அவ்வாறு அணுகும் இன உணர்வாளர்களை அப்படியே அரவணைத்து, இந்தியத் தேசிய வாதத்திற்குள் இழுத்துச் செல்வார்கள் ம.க.இ.க.வினர். நண்பர் களைப் போல் நடிக்கும் கலையில் கைதேர்ந்தவர் கள் ம.க.இ.க.வினர்.

கேரளத்தில் அப்பாவித் தமிழர்களைத் தாக்கிய மலை யாள இனவெறியர்களுக்குப் பதிலடி கொடுக்கவும், முல்லைப் பெரியாறு அணை உரிமையை மீட்கவும், இடுக்கி மாவட்டத் தைத் தமிழ்நாட்டுடன் இணைக் கவும் முழக்கங்கள் வைத்துக் கடந்த டிசம்பர் மாதம் (2011) தமிழர்கள் போர்க்கோலம் பூண்டனர். மாபெரும் தமிழர் எழுச்சி அது!

mullai_370அந்தத் தமிழின எழுச்சியை மடை மாற்றிட ம.க.இ.க. “தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்” நடத்துகிறது. அதற்காக 16 பக்கங்களில் சிறு வெளியீடு ஒன்றை வெளியிட்டுள்ளது. ”முல்லைப் பெரியாறு அணையை மீட்க எல்லையை மூடு! பொருளாதாரத் தடை போடு!” என்பது தான் அதன் தலைப்பு. முல்லைப் பெரியாறு உரிமையை மீட்க, கேரளாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என் றும், கேரளாவுக்குச் செல்லும் 13 பாதை களை மூட வேண்டும் என்றும் அது கூறுவது சரி. ஆனால் இதே ம.க.இ.க. கேர ளாவுக்குப் பொருளாதாரத் தடை விதிக்கும் நமது கோரிக் கையை 11.02.2010இல் எதிர்த்து தனது வினவு இணையத் தளத்தில் எழுதியது.

"கேரளத்திற்கு பொருட்கள் அனுப்புவதை நிறுத்தவேண்டு மென சில தமிழினவாதிகள் மிரட்டுகிறார்கள். அப்படி நிறுத் தினால் முதலில் பாதிக்கப் படுவது இங்குள்ள விவசாயிகள் தான். சொல்லப்போனால் அவர்களே அதை முதலில் எதிர்ப்பார்கள். கேரள மக்க ளிடம் தமிழகத்தின் நியாயத் தைச் சொல்லி புரிய வைக்கும் சாதகமான நிலை வாழ்க்கையில் உள்ளது."

மேற்கண்ட நிலைபாட்டி லும் உறுதியின்றி உடனே குட்டிக்கரணம் போட்டு, தன்னைத் தானே மறுத்தக் கொண்டது ம.க.இ.க. அக் கட்டுரையின் அடுத்தப் பத்தியில்

"நமது தரப்பு நியாயத்தை புரியவைப்பதற்காக கேரளத்தின் மீதான பொருளாதார முற்றுகை போராட்டம் கூட கடைசி பட்சமாக நடத்தலாம் என்றா லும் இருமாநில மக்களின் நலனை வைத்தே அதை முடிவு செய்யவேண்டும். அதை வைத்து தமிழினவாதிகளும் வெறியர் களும் ஆதாயம் அடைவதை பெருங்கேடாக நினைத்து முறிய டிக்க வேண்டும்."

“பெருங்கேடு” கேரளம் தமிழ கத்தை வஞ்சிப்பதால் வருவ தல்ல; "தமிழினவாதிகளின்" நிலைபாட்டை அதாவது பொ ருளாதாரத் தடையை, மக்கள் ஏற்பதால் வருவது தான் என்பது ம.க.இ.க.வின் நிலை பாடு. தமிழகத்தை வஞ்சிக்கும் மலையாள இனவெறியர்களை முறியடிக்க வேண்டும் என்பது அதன் நோக்கமன்று. தமிழ்த் தேசியவாதிகளை முறியடிக்க வேண்டும் என்பதே அதன் முதன்மை நோக்கம். தமிழர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள இனஉணர்வு பெற்றுவிடக் கூடாது என்பதில் ம.க.இ.க. குறியாக இருக்கிறது.

இருமாநிலங்களுக்கும் பாதிப்பில்லாமல் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்கிறதே, அது எப்படி? அப்படியொரு பொருளாதாரத் தடை உலகத்தில் எங்காவது செயல்படுத்தப் பட்டிருக்கிறதா? அநீதி இழைக்கும் கேரளத் தையும் அதனால் பாதிக்கப்படும் தமிழகத்தையும் சமதட்டில் வைத்துப் பேசுவதன் மூலம் தமிழகத்திற்கு எதிரான நிலை எடுத்துள்ளது ம.க.இ.க.

தாங்க முடியாத கேடுகளை தமிழர்களுக்கு இழைத்து வரும் மலையாளிகளை இப்பொழு தும் அரவணைக் கிறது ம.க.இ.க. இதோ அது கூறுகிறது:

“... கேரள மக்கள் நம்முடைய எதிரிகள் அல்லர்; மொழியாலும் பண்பாட்டாலும் நாம் பிணைக்கப்பட்டவர்கள். நமது எதிரிகள் இரண்டு பக்கமும் உள்ள (தமிழ்நாட்டிலும்- கேரளத்திலும் உள்ள) பன்னாட்டு முதலாளிகள், தரகு அதிகார வர்க்க முதலாளிகள் புதுப் பணக்காரர்கள், புதிய தரகு வர்க்கங்கள், ஓட்டுப் பொறுக்கிக் கட்சித் தலைவர் கள்தான். இருந்த போதிலும் அண்ணன் - தம்பி உறவா னாலும் அதில் சமத்துவமும் நேர்மையும் இருக்க வேண்டும் என்பதை நாம் கேரளத்துக்கு உணர்த்த வேண்டும்.”

-மேற்படி வெளியீடு பக்கம்-- _12

இந்தியத் தேசியம் பேசும் ம.க.இ.க. இந்த இடத்தில் அண்ணன்- - தம்பி உறவு சொல்லி திராவிடத் தேசியம் பேசுகிறது. பாவம், தமிழின எழுச்சியைச் சிதைக்க எத்தனை வேடம் போட வேண்டியி ருக்கிறது! திராவிடம் என்பது இந்தியத் தேசியத்தின் இளைய பங்காளி என்று நாம் கூறி வருவதை ம.க.இ.க.வும் மெய்ப் பித்துள்ளது.

மலையாளிகளுக்கு நேர்மை யைக் கற்றுக்கொடுக்கப் புறப்பட் டுள்ள ம.க.இ.க.வே, உன்னிடம் நேர்மை இருக்கிறதா?

பத்துநாள்களாகத் தமிழர்கள் மலையாளிகளால் தாக்கப் பட்டதை இந்திய அரசு தடுக்க வில்லை, தமிழக அரசால் தடுக்க முடியவில்லை. அதன் பிறகு, தமிழ்நாட்டில் தமிழுணர் வாளர்கள் மலையாளிகளுக்குப் பதிலடி கொடுக்கத் தொடங்கினார்கள். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி 7.12.2011 அன்று தஞ்சாவூர், குடந்தை, கோவை, ஓசூர், சென்னை ஆகிய இடங்களில் மலையாள நிறுவனங்களை மூடச்செய்து பதிலடி கொடுத் தது. த.தே.பொ.க. தோழர்கள் மீது பிணையில்வர முடியாத பிரிவுகள் போட்டுத் தமிழக அரசு சிறையி லடைத்தது. தமிழகமெங்கும் தமிழுணர் வாளர்கள், அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், அமைப்பு களைச் சேராதவர்களும் பத்து நாள்களுக்குமேல் தொடர்ந்து மலையாளிகளுக்குப் பதிலடி கொடுத்தார்கள். மலையாள நிறுவனங்கள் தமிழகமெங்கும் மூடப்பட்டன.

பதிலடி கொடுத்த மருத்துவத் திற்குப் பின்தான், தமிழகத் திலுள்ள மலையாள சங்கங்கள், கேரளத்தில் தமிழர்கள் தாக்கப் படுவதைக் கண்டித்து அறிக்கை கள் வெளியிட்டன. தாங்க ளாகவே தங்கள் கடைகளை அடைத்து முல்லைப் பெரியாறு அணை உரிமையில் தமிழகத் திற்கு ஆதரவு தெரிவித்தன.

அதன் பிறகுதான், கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவது மட்டுப்பட்டது. பின்னர் நின் றது. இவ்வளவு பெரிய தாக்கத் தை உண்டாக்கிய இந்த எதிர் வினை நிகழ்வுகளை ம.க. இ.க. தனது வெளியீட்டில் குறிப் பிடாதது ஏன்? மறைத்தது ஏன்? ம.க. இ.கவுக்கு நேர்மை இருந் திருந்தால், இந்த எதிர்வினை நிகழ்வுகளைப் பதிவு செய்து விட்டு, அவை குறித்து தனது விமர்சனத்தையும் கூறியிருக் கலாம்.

டிசம்பர் தமிழர் எழுச்சியின் முகாமையான முழக்கமாக “இடுக்கி மாவட்டத்தைத் தமிழ் நாட்டுடன் இணை" என்ப தாகும். அந்த முழக்கத் தையும் ம.க.இ.க. மறைத்து விட்டது. யாருக்குச் சேவை செய்வதற்காக தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம் செய்ய புறப்பட் டுள்ளது. ம.க.இ.க.? மலையா ளிகளுக்குச் சேவை செய்வதற் காகவா?

முல்லைப்பெரியாறு அணையை உடைக்க மலையாளிகள் திட்டமிடுவது இன வெறியால் அல்லவாம்! தமிழர் கள் மீது அவர்களுக்கிருக்கும் இனப்பகையால் அல்லவாம்! ம.க.இ.க. கூறும் காரணத்தைப் பாருங்கள்.

“...ஆனால், இன்று பெரியாறு அணையைத் தகர்க்க வேண் டும் என்று வெறிபிடித்தாற் போல கேரள அரசும் ஓட்டுப் பொறுக்கிகளும் இறங்கியிருப் பதற்கு தனியார்மயம், தாராள மயம் என்ற பெயரில் அமல் படுத்தப்படும் மறு காலனி யாக்கக் கொள்கைகளே காரணம்”.

-மேற்படி வெளியீடு, பக்கம்-_8

தமிழர்களுக்கெதிரான மலையாளிகளின் இனமுரண் பாட்டை முதலாளியத்திற்கும் மக்களுக்குமான முரண் பாடாகத் திரித் துக் காட்டுகிறது ம.க.இ.க. உலகத்தில் நடக்கும் எல்லா இன முரண்பாடு களுக்கும் முதலாளியம் மட்டு மே காரணமா? மாசேதுங் தலைமை தாங்கிய காலத்தில் 1970களில், கம்யூனிஸ்ட்டு சீனாவும், கம்யூனிஸ்ட் வியாட் நாமும் எல்லைச் சிக்கலில் இராணுவ மோதல் அளவுக்குப் போயினவே, அது எந்த முதலாளி யத்தால்?

இன முரண்பாடு முதலாளி களிடமும் வரும், பாட்டளி களிடமும் வரும். கேரளத்தில் மலையாள இனவெறியைத் தூண்டி விடுவதில் முதன்மைப் பாத்திரம் வகிப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக் கட்சிதான். ம.க.இ.க.வின் கேரள மாநில அமைப்பு (அப்படி ஒன்று இருந்தால்) முல்லைப் பெரியாறு போராட்டத்தில் என்ன முடிவு எடுத்து, எவ்வாறு செயல் பட்டது என்பதைத் தெரிவிக் கலாம். மலையாளிகள் முல்லை பெரியாறு அணையை உடைக்க முயல்வது தனியார் மயத்தாலும், தாராளமயத்தாலும்தான் என்று ஏன் கூறுகிறது ம.க.இ.க.? தனியார் மயமும் தாராள மயமும் கேரளத்திலும் இருக் கிறது. தமிழகத்திலும் இருக் கிறது. எனவே இரு மாநிலப் பாட்டாளிகளும் சேர்ந்து போராட வேண்டும் என்று வலியுறுத்துவதற்குத்தான் அவ்வாறு கூறுகிறது. சிங்களப் பாட்டாளியும் தமிழ்ப் பாட் டாளியும் சேர்ந்து போராட வேண்டும் என்று காதில் பூச்சுற்றிய அமைப்பல்லவா அது!.அதே பாணியில் முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலில் தமிழர்களின் காதுகளில் பூச் சுற்ற முனைகிறது.

அப்படியே தனியார் மயம், தாராளமயம், மறு காலனி யாக்கம் ஆகியவற்றை எதிர்க்க அனைத்திந்தியப் போராட்டம் தேவை என்று கூறி, இந்தியத் தேசியத்திற்கு வால்பிடிக்கச் செய்வதற்காகத்தான் தமிழர்- மலையாளி என்ற இன முரண் பாட்டை மறைத்து, வர்க்க முரண்பாடாகக் காட்டுகிறது. ம.க.இ.க. தமிழ்த் தேச விடு தலையுடன் இணைந்தது தான் உலகமய எதிர்ப்பு என்ற உண்மையைத் திரித்து, இந்திய தேசியத்துடன் அதனை இணைக்கப் பார்க்கிறது.

முள்ளை முள்ளால் எடுப் பது போல் இன முரண் பாட்டை இன அடிப்படையில் தான் தீர்க்க முடியும். அதை வர்க்க அடிப்படையில் தீர்க்க முடியாது.

மலையாளிகள் தாங்கள் மின்சாரம் உற்பத்தி செய்வதற் காகக் கட்டிய மிகப்பெரிய இடுக்கி அணைக்குப் போதிய தண்ணீர் வரத்து இல்லை. முல்லைப்பெரியாறு அணையை உடைத்து விட்டால் இத் தண்ணீர் இடுக்கிக்கு வரும் என்ற இனச்சார்பு நிலையில் இருந்துதான் முல்லைப் பெரி யாறு அணைச்சிக்கலைக் கிளப் பினர் மலையாளிகள். தமிழ் நாட்டில் ஐந்து மாவட்ட மக்கள் வேளாண்மையும் குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படுவது பற்றி மலையாளிகளுக்குக் கவலையில்லை. தமிழர்கள் வேறு இனம், தாங்கள் வேறு இனம் என்ற அடிப்படையில் தான் முல்லைப் பெரியாறு அணை உடைப்புத் திட்டத்தை காங்கிரசு, கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்துக் கேரளக் கட்சி களும் எடுத்துள்ளன. இதுதான் இனவெறி.

தமிழ் மக்களை இழிவுபடுத் தவும் தயங்கவில்லை ம.க.இ.க.

”தமிழகத்தின் அரசியல்வாதி கள் வாய்ச்சவடால் பேர் வழிகள், எளிதில் விலை போகிறவர்கள்; தமிழகத்தின் மக்கள் இவர்களுக்குப் பின்னா லும் நடிகர்களுக்குப் பின்னா லும் அலையும் 'ஏமாளிகள்' என்பது தமிழகத்தைப்பற்றி கேரளத்தில் நிலவும் பொதுக் கருத்து. முல்லைப் பெரியாறு பிரச் சனையில் இதுவரை நடந்துள்ள விசயங்களை மட் டும் தொகுத் துப்பார்த்தால் கூட மேற்கூறிய கருத்து கிட்டத் தட்ட சரிதான் என்றே தோன்றுகிறது. வெற்று வாய்ச் சவடால், முகத்துதி, பிழைப்பு வாதம், அருவருக் கத்தக்க ஆடம்பரம், அடிமைப்புத்தி, கோழைத்தனம், காரியவாதம், போன்ற இழிவுகள் அனைத் தின் இருப்பிடமாகவும் யார் வேண்டுமானாலும் வஞ்சிக்க முடிந்த சமூகமாகவும் தமிழகத் தை வளைத்து வைத்திருக்கி றார்கள் ஆளும் வர்க்கங்களும் ஓட்டுப் பொறுக்கிக் கட்சி களும் ஊடகங்களும்”.

- பக்கம்_-12.

இந்த அளவுக்குக் கேவல மாகத் தமிழர்களை ஏசும் ம.க.இ.க. இதே வெளியீட்டில் இன்னொரு பக்கத்தில் தமிழர் களின் போர்க்குணத்தை மெச்சு கிறது.

“அணையைப் பாதுகாப்பதற் காக 2011 டிசம்பரில் பல்லா யிரக்கணக்கில் போலீசைத் துச்சமாக மதித்துத் திமிரி எழுந்து போராடினோமே, அப்படிப்பட்ட ஒரு மகத்தான எழுச்சிகரமான போராட் டத்தை மீண்டும் கட்டி யமைக்க வேண்டும்”.-

பக்கம்_-13.

உதவாக்கரைகளாகி விட்டார்கள் தமிழர்கள் என்று முன்பக்கத்தில் இகழ்ந்துவிட்டு, அடுத்த பக்கத்தில் “: போலீசைத் துச்சமாக மதித்துத் திமிரி எழுந்து” போராடிய அவர் களின் வீரத்தைப் பாராட்டு கிறது.

முன்னுக்குப்பின் முரணாகப் பேசும் குழப்பம் ம.க.இ.க.வுக்கு ஏன் வந்தது? இன எழுச்சியாகக் கிளம்பிய மக்கள் போராட் டத்தைத் திரித்துச் சிதைக்க வேண்டும் என்பது அதன் ஆசை. அதை அப்படியே ஒளிவு மறைவின்றிப் பேசிவிட முடியா தல்லவா! அதனால் ஏற்பட்ட குழப்பம்.

தமிழின மக்களிடம் உள்ள பலவீனங்களைச் சுட்டிக்காட்டு வதற்கு ஒருவருக்கு எப்போது உரிமை வரும்? அவர் தமிழினத் திற்காகத் தன்னை ஒப்படைத் துக் கொண்டவராக, அடிப் படையில் தமிழர்களை நேசிப் பவராக, இனப்போராட்டம் நடத்துபவராக இருந்தால், உரிமையோடு தமிழர்களிடம் உள்ள பலவீனங்களைச் சுட்டிக் காட்டலாம். தமிழினத்தின் மீதான ம.க.இ.க. வின் தாக்குதல் அந்த வகையிலானது அன்று. தமிழர்களை இன அடிப் படையில் கொச்சைப்படுத்தி, குழப்பிவிடும் நோக்கம் கொண் டது. அதனால்தான் தமிழர் களைப் பற்றி மலையாளிகள் கேவலமாகப் பேசுவது ”கிட்டத் தட்ட சரி” என்று அது சான்ற ளிக்கிறது.

எதிரிகளை விட ஆபத்தா னவர்கள் நண்பர்களைப் போல் நடிப்பவர்கள். தமிழர்களுக் கெதிரான மலையாளிகளின் இனவெறியையும் இந்திய ஏகாதிபத்தியத்தின் சதியையும் முறியடித்துத்தான் முல்லைப் பெரியாறு உரிமையை மீட்க வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புப் போராட்டம் இடுக்கி மாவட்ட இணைப்புப் போராட்டமாகவும் வளர்ந் துள்ளது அத்துடன் எதிரிக ளுக்குப் பதிலடி கொடுக்கும் போராட்டமாகவும் புதிய தளத்திற்குச் சென்றுள்ளது.

அதே வேளை, “பல் குழுவும், பாழ் செய்யும் உட்பகையும், கொல் குறும்பும்” என்று திரு வள்ளுவப்பெருந்தகை நமக்கு அடையாளங்காட்டிய உட் குழப்பங்களைத் தமிழர்கள் புரிந்து கொள்ளவேண்டும். வலதுசாரி இந்தியத் தேசி யத்தைப் போலவே இடதுசாரி இந்தியத் தேசியமும் தமிழ்த் தேசியத்தின் பகைக் கருத்தியல் தான்.

Pin It