vidarbha_farmer_suicide_380மூன்றாண்டு கால இடைவெளியில் இரண்டு முறை பின்வரும் முக்கியச் செய்தியைத் தாங்கி ஒரு முழுப் பக்கக் கட்டுரை வெளியானது- முதல் முறை செய்தியாகவும் அடுத்த முறை விளம்பரமாகவும்.

‘இரண்டு கிராமங்களில் ஒருவர் கூடத் தற்கொலை செய்துகொள்ளவில்லை.’

மூன்றரை ஆண்டுகளுக்கு முன் நாடெங்கும் மரபு மாற்ற விதைகள் தொடர்பான விவாதங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தபோது, இந்தத் தொழில்நுட்பத்தின் வெற்றி குறித்த மனதைத் தொடும் சித்திரத்தை(!) ஒரு செய்தித்தாள் வெளியிட்டது. “இங்கு தற்கொலைகளே இல்லை. மக்கள் விவசாயத்தைக் கொண்டு வளமாக வாழ்கிறார்கள். கடந்த 4 அல்லது 5 ஆண்டுகளாக பாம்ப்ரஜா மற்றும் அந்தர்கான் கிராமங்களில் பாரம்பரிய பருத்தியிலிருந்து போல்கர்ட் அல்லது பி.ட்டி.பருத்திக்கு மாறியிருப்பது ஒரு சமூக, பொரு ளாதார மாற்றத்திற்கு வழிகோலியிருக்கிறது.” (டைம்ஸ் ஆப் இந்தியா, அக்டோபர் 31, 2008)

இதே செய்தி, ஒன்பது மாதங்களுக்கு முன்பும் ஒருமுறை அதே செய்தித்தாளில் வரிக்குவரி அப்படியே வெளியாகியிருந்தது. (டைம்ஸ் ஆப் இந்தியா ஆகஸ்ட் 28, 2011) ஆனால் அந்தக் கிராமத்து மக்களோ வேறுவிதமாகச் சொல்கிறார்கள்.

கடந்த மார்ச்சில் வருகை தந்த பாராளுமன்ற உயர்மட்டக்குழு உறுப்பினர்களிடம், எங்கள் கிராமத்தில் 14 பேர் தற்கொலை செய்து செத்துப்போய் விட்டார்கள் என்று கடும் கோபத்துடன் பேசினார்கள் பாம்ப்ரஜா கிராமத்தினர். இறந்தவர்களில் பெரும்பாலும் பி.ட்டி பருத்தி வந்த பிறகு இறந்தவர்கள். 2003 முதல் 2009 வரை ஒன்பது பேர் இறந்திருப்பதாக இந்து நாளிதழ் கூறுகிறது. அதன்பிறகு 5 பேர் இறந்ததைக் களப் பணியாளர்கள் தெரிவிக்கிறார்கள். இதுவெல்லாம் விவசாயத்தால் மக்கள் வளமாக வாழ்வதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்ட 2002ஆம் ஆண்டுக்குப் பிறகுதான். “எங்கள் நிலமெல்லாம் பாழாய்க் கிடக்கிறது. பலருக்கு விவசாயத்தின் மீதே நம்பிக்கை போய்விட்டது. இன்னும் சிலர் நட்டம் குறைவாக உள்ள சோயாபீன்ஸ் விவசாயத்திற்குப் போய்விட்டார்கள்”

நுற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் மாகிகோ-மன் சாண்டொ பயோடெக் நிறுவனம் பி.ட்டி. பருத்தியை அறிமுகம் செய்த இந்த “மாதிரி கிராமத்தில்’ இருந்து வெளியேறிவிட்டனர். விவசாயம் அழிந்து கொண்டிருப் பதால் மற்றவர்களும் வெளியேறிவிடு வார்கள் என்று கடந்த செப்டம்பரிலேயே சுரேசு ராம்தா போந்த்ரே என்ற பாம்ப்ரஜா விவசாயி நம்மிடம் சொன்னார்.

2008ல் டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட மன்சான்டோவின் பி.ட்டி. பருத்தி பற்றிய முழுப் பக்கப் புகழுரையோடு சிலநாட்கள் காணாமல் போயிருந்த பி.ட்டி. பருத்தி ஆகஸ்ட் 2011ல் இந்திய உயிரியல் தொழில்நுட்ப ஒழுங்காற்று அதிகாரச் சட்ட மசோதா (ஙிஸிகிமி) பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வது தடுக்கப்பட்ட பின் மறுபடி உயிர்த்தெழுந்து வந்தது. இந்த மசோதா தடுக்கப்பட்ட காரணத்தால் வேளாண் உயிரியல தொழில்நுட்பத் தொழிலின் எதிர்கால பிரகாச வாய்ப்புகளும் தடுக்கப்படவே அதனை மீண்டும் விரைவில் தாக்கல் செய்வதற்கான திரைமறைவு வேலைகள் தொடங்கின. தங்கம் கொட்டும் பி.ட்டி பருத்தி என்ற ஆகஸ்ட் 28 தேதிய முழுப்பக்கச் செய்தி மலரைத் தொடர்ந்து மாகிகொ மன்சான்டோ பயோடெக் (இந்தியாலிட் நிறுவனத்தின் தொடர்ச்சி யான விளம்பரங்கள் அடுத்தநாள் முதல் டைம்ஸ் ஆப் இந்தியாவிலும் வேறு நாளிதழ்களிலும் வெளியாகத் தொடங்கின. இவை ஆகஸ்ட் 29,30,31 செப் 1, மற்றும் 3 தேதிகளிலும் வெளியாகியிருக்கின்றன. மேற்படி மசோதா பாராளுமன்றத்தின் விவாதப்பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தாலும், வேறு பல பிரச்சினைகள் எடுத்துக்கொள்ளப்பட்டபடியால், மழைக்காலக் கூட்டத் தொடரிலும், பின்னர் குளிர் காலக் கூட்டத் தொடரிலும் தாக்கல் செய்யப் படவில்லை. எனினும் பி.ட்டிபருத்தி மூலமாக இல்லாவிட்டாலும் செய்தித்தாள் விளம்பரங்கள் மூலமாக யாரோ ஒருவருக்கு “தங்கம் கொட்டத்தான்” செய்தது.

மரபுமாற்றப் பயிர்கள் குறித்த தமது கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டிய வேளாண்மைக்கான பாராளுமன்ற உயர்மட்டக்குழுவினரிடம் மேற்படி விளம்பர வெள்ளங்கள் எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. விதர்பா விவசாயிகளின் தற்கொலை மற்றும் வறுமை தொடர்பான செய்திகளால் கவலையடைந்திருந்த பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அதன் உறுப்பினர்கள் அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட முடிவு செய்தார்கள். மாகிகொ மன்சான்டொ நிறுவனத்தால் பி.ட்டி. அற்புதம் நிகழ்ந்ததாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டாடப்பட்ட கிராமமான பாம்ப்ரஜாவுக்கே செல்ல அனுபவம் மிக்க பாராளுமன்ற உறுப்பினர் பாசுதேவ் ஆச்சார்யா தலைமையிலான எம்.பி.க்கள் குழு முடிவு செய்தது. இன்னொரு கிராமம் மாரேகான்-சோனேபர்டி. (சோனா என்றால் தங்கம்!) ஆனால் குழுவினர் அங்கே எந்தத் தங்கத்தையும் பார்க்க முடிய வில்லை. சரிந்து விழுந்த அற்புதங்களால் ஏற்பட்ட துயரங்களையும் அரசின் தோல்விகளையும்தான் பார்த்தார்கள்.

2012ல் இந்தியாவில் பி.ட்டி. பருத்தியின் பத்தாண்டு நிறைவு தொடர்பான விவாதங்களுடன் மீண்டும் இந்தப் பிரச்சினைகளும் (டைம்ஸ் ஆப் இந்தியா கதை களும்) உயிர்பெற்று வந்தன. தங்கம் கொட்டும் பருத்தி என்ற தலைப்பில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ல் வெளி யான கட்டுரை ஒரு நுகர்வோர் சார்ந்த முன்முயற்சி என்று புதியபெயரில் வெளியிடப்பட்டது. ஆனால் கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரமாக. அதாவது கட்டுரையை எழுதித் தயாரித்தவர்கள் டைம்ஸ் ஆப் இந்தியா நிருபர்களும் புகைப்படக்காரர்களும்தான். இந்தக் கட்டுரை ஏற்கெனவே 2008 அக்டோபர் 31ல் டைம்ஸ் ஆப் இந்தியா நாக்பூர் பதிப்பில் வரிக்குவரி அப்படியே வெளியானதுதான். இந்த மறுவெளியீட்டு மோசடி விமர்சகர்களால் கண்டுபிடிக்கப்பட்டு கேலிக்கு ஆளானது. 2011 ஆகஸ்ட் 28ல் வெளியான கட்டுரையில் அது மறுவெளியீடு என வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது. 2008ல் வெளியான கட்டுரையில் விளம்பரம் எனக் குறிக்கப்படவில்லை. இந்த இரண்டு வெளியீடுகளுமே ஒத்துக்கொள்ளும் ஓரு விசயம்-- யாவட்மாலுக்கு செய்திநிருபர்களை அழைத்துச் சென்றது மாகிகொ- மன்சான்டொ பயோடெக் கம்பெனி என்ற உண்மையைத்தான்.

ஒரு முழுப்பக்கச் செய்தியறிக்கை மூன்றாண்டு காலத்திற்குள் இரண்டுமுறை பிரசுரமாகியிருக்கிறது. முதல்முறை செய்தியாக, மறுமுறை, விளம்பரமாக. முதல்முறை வெளி யிட்டது. அந்த நாளிதழின் நிருபர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர். அடுத்த முறை அதே நாளிதழின் விளம்பரப் பிரிவினர். முதல் முறை, மாகிகொ-மன்சான்டொ கம்பெனி யால் “ஏற்பாடு செய்யப்பட்ட” செய்திப் பயணக் கட்டுரை யாக. அடுத்த முறை அதே கம்பெனியால் தரப்பட்ட விளம்பரமாக. முதல்முறை சோகக் கதையாக. மறுமுறை காமெடி நாடகமாக.

2008ல் வெளியான கட்டுரையை டைம்ஸ் ஆப் இந்தியாவின் “முழுப்பக்கச் செய்தி வெளியீடு” என்கிறது மேற்படி கம்பெனி. “அந்த வெளியீடு பத்திரிகைக் காரர்களின் களஆய்வின் அடிப்படையிலான ஒரு செய்தியறிக்கைதான். அவர்கள் அங்கு செல்ல வாகன வசதி மட்டும் செய்து கொடுத்தோம் என்று மாகிகொ-மன்சான்டொ பயோடெக் நிறுவனத்தின் அதிகாரி கடந்த வாரம் இந்து நாளிதழுக்கு பேட்டியளிக் கிறார். 2011 ஆண்டின் செய்தியானது, 2008ல் வெளியான செய்தியின் சுருக்கப்படாத மறுபதிப்புத்தான் எனினும் ஒரு விற்பனை உத்தியாக அது பயன்படுத்தப் பட்டது என்கிறார். அவர் 2008 முழுப் பக்கச் செய்தி நாக்பூர் பதிப்பில் வெளியானது. ஆனால் 2011 ஆண்டில் விற்பனை உத்தியாகப் பயன்படுத்தப்பட்ட அதே செய்தி அந்த நாளிதழின் எல்லாப் பதிப்புகளிலும் வெளியாகியிருப்பதுதான். (இணையத்தில் சிறப்புச் செய்திகள் காணலாம்) நாக்பூரைத் தவிர. நூக்பூர் பதிப்பில் 2011ல் வெளியாகியிருந்தால் அது கடும் அதிர்ச்சியைத் தோற்றுவித்திருக்கும்.

இப்படியாக ஒரு முழுப்பக்கச் செய்தியறிக்கை மூன்றாண்டு காலத்திற்குள் இரண்டுமுறை பிரசுரமாகி யிருக்கிறது. முதல்முறை செய்தியாக, மறுமுறை, விளம் பரமாக. முதல்முறை வெளியிட்டது. அந்த நாளிதழின் நிருபர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர். அடுத்த முறை அதே நாளிதழின் விளம்பரப் பிரிவினர். முதல் முறை, மாகிகொ-மன்சான்டொ கம்பெனியால் “ஏற்பாடு செய்யப்பட்ட” செய்திப் பயணக் கட்டுரையாக. அடுத்த முறை அதே கம்பெனியால் தரப்பட்ட விளம்பரமாக. முதல்முறை சோகக் கதையாக. மறுமுறை காமெடி நாடகமாக.

இதில் உயர்ந்த தரத்திலான வெளிப்படைத் தன்மை இருப்பதாக அந்தக் கம்பெனியின் பிரதிநிதி சொல்லிக் கொள்கிறார். அந்த வெளியீட்டில் அது எங்கிருந்து எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவலை -இது அக்.31 2008ல் டைம்ஸ் ஆப் இந்தியா நாக்பூர் பதிப்பில் வெளி யான கட்டுரையின் மறுவெளியீடு என்று போடச் சொன்னோம், என்கிறார். ஆனால் தி இந்துவுக்கு அவர் அனுப்பிய பதில் மின்னஞ்சலில் அது பற்றி அவர் எதுவும் மூச்சுக் காட்டவில்லை. அதற்குப் பதிலாக,” 2011ல் நாங்கள் விவசாயத்தில் பருத்தி விதைகள் மற்றும் பயிர்த் தொழில்நுட்பவியலின் பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சிறிது காலம் சில முயற்சிகளை மேற்கொண்டோம்” என்கிறார். தி இந்து இது பற்றிய கேள்வியை எழுப்பியிருந்தும்- அது எப்படி பாராளுமன்றத் தொடர் நடக்கும்போது ஙிஸிகிமி மசோதா விவாதத்திற்கு வரும் போது இந்த விளம்பரங்கள் வெளியாகின்றன என்ற கேள்விக்குப் பதில் இல்லை.

அது மட்டுமல்ல. பி.ட்டி. பருத்தி அற்புதங்கள் பற்றிய டைம்ஸ் ஆப் இந்தியா கட்டுரையுடன் வெளி யான பளப்பள புகைப்படங்களில் காட்சியளிப்பவர்கள் உள்ளூர்க்காரர்கள்தான் என்றாலும் அந்தப் படங்கள் பாம்ப்ரஜா அந்தர்கான் கிராமங்களில் எடுக்கப்பட்டவை அல்ல என்கிறார் அந்த கிராமத்துக்காரர் பிபன்ராவ் காவன்டே.

கற்பனை அற்புதம்

டைம்ஸ் ஆப் இந்தியா கட்டுரையில் நந்து ரௌட் என்று ஒரு திறமையான படித்த விவசாயி வருகிறார். ஆவர் ஒரு எல்அய்சி ஏஜண்டும் கூட. அவரது வரு மானம் பி.ட்டி. அற்புதங்களோடு பெருகத் துவங்கியது. குடந்த ஆண்டில் நான் 2 லட்சம் சம்பாதித்தது உண்மைதான். அதில் 1.6 லட்சம் நான் விற்ற பாலிசிக ளில் இருந்து கிடைத்தது. அதாவது அவருக்கு விவசா யத்தில் கிடைத்ததைவிட நான்கு மடங்கு எல்அய்சி மூலம் கிடைத்திருக்கிறது. அவருக்கு ஏழரை ஏக்கர் நிலம் உண்டு. நான்கு பேர் கொண்ட குடும்பம்.

ஆனால் டைம்ஸ் ஆப் இந்தியா அவரைப் பற்றிச் சொல்லும்போது “ஏக்கருக்கு ரூ.20,000 கூடுதல் சேமிப்பு பூச்சிக் கொல்லிகளாலே” என்கிறது. அவர் 4 ஏக்கரில் பருத்தி போட்டதால் அவரது மொத்த லாபம் ரூ.80,000 பூச்சிக்கொல்லிகளால் கிடைத்ததாம். எப்படிக் கதை? பாம்ப்ரஜா ஊரில் உள்ள எல்லோரும் கோபமாகக் கேட்கிறார்கள். ‘லாபத்தை விடுங்கள். இங்கு ஒரு விவசாயியாவது ஏக்கருக்கு ரூ.20,000 சம்பாதித்திருப்பாரா என்று கேளுங்கள்’. திரு ரௌட் கையெழுத்திட்ட கிராமக் கணக்கெடுப்புப் புள்ளி விபரம் (தி இந்துவிடம் உள்ளது) அதற்கு நேர் எதிராக உள்ளது.

பாம்ப்ரஜா மற்றும் மாரேகான் விவசாயிகள் பி.ட்டி. அதிசயம் பற்றி அம்பலப்படுத்தும் தகவல்களை மத்திய வேளாண்துறை அமைச்சரின் புள்ளிவிபரங்கள் மெய்ப் பிக்கின்றன. “விதர்பா பகுதி சராசரியாக ஒரு எக்டருக்கு 1.2 குவிண்டால் பதப்படுத்தி விதை நீக்கிய பருத்தியை உற்பத்தி செய்கிறது. ஏன அமைச்சர் சரத் பவார் 2011 டிசம்பர் 19ல் தெரிவித்தார். இது அதிர்ச்சி தரும் வகையில் மிகக் குறைவான அளவு. இதன் இரு மடங்கு கூட குறைவுதான். விவசாயி தன் விளை வித்ததை கச்சாப் பருத்தியாகவே விற்கிறார். 100 கிலோ கச்சாப்பருத்தியிலிருந்து 35கிலோ விதைநீக்கிய பஞ்சும் 65 கிலோ பருத்தி விதையும் பிரித்து எடுக்கப் படுகிறது. (2கிலோ சேதாரம் வேறு) திரு பவார் சொல்வதைப் பார்த்தால் எக்டருக்கு 3.5 குவிண்டால் கச்சாப்பருத்தி உற்பத்தியாவதாகக் கணக்கு. அதாவது ஏக்கருக்கு வெறும் 1.4 குவிண்டால். அதோடு குவிண் டாலுக்கு ரூ.4,200 என்ற அதிகவிலையை விவசாயிகள் பெறுவதாக பவார் கூறுகிறார். இது கிட்டத்தட்ட உற்பத்திச் செலவுக்குச் சமமான தொகை என்பதையும்; இதனால்தான் அங்கே நிலைமை இவ்வளவு மோச மானது என்பதையும் அவரே ஒப்புக் கொள்கிறார். திரு. பவார் சொல்வது உண்மையென்றால் திரு நந்து ரௌட்டின் மொத்த வருமானம் ஏக்கருக்கு ரூ.5.900 க்கு மேல் போகாது. இடுபொருள் கிரையத்தைக் கழித்துப்பார்த்தால் (1.5 பாக்கட் விதை விலை ரூ.1,400!) அவருக்கு மிஞ்சுவது கிட்டத்தட்ட எதுவுமில்லை. இருந்தும் அவர் ஏக்கருக்கு ரூ.20,000 சம்பாதிப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா சொல்கிறது.

நீங்கள் சொல்வதெல்லாம் மகத்தான சாதனைகள் தான் என்று கடைசிவரை உறுதியாக நிற்பீர்களா என்று மாகிகொ மன்சான்டொவின் பிரதிநிதி ஒருவரிடம் கேட்டபோது “எங்கள் நிறுவனமான னீனீதீ யின் இந்தியக்கூட்டாளி மேற்படி செய்திக் கட்டுரையில் தெரிவித்த விசயங்களைத்தான் நாங்கள் சொல்கிறோம்; இதில் வேடிக்கை என்னவென்றால் விளம்பரமாக்கப் பட்ட அந்த முழுப்பக்கச் செய்தியில் எந்த இடத்திலும் ஏக்கருக்கு ரூ.20,000 கிடைக்கும் என்று குறிப்பிட வில்லை. பி.ட்டி. பருத்தி கூடுதல் மகசூல் தருகிறது என்று மட்டுமே சொல்லப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு இவ்வளவு மகசூல் என்றும் சொல்லப்படவில்லை. அத்துடன் இரண்டு கிராமங்களிலும் தற்கொலைகளே கிடையாது என்றும் சொல்லப்படவில்லை. இப்படி அந்த நிறுவனம், டைம்ஸ் ஆப் இந்தியா தந்திருக்கும் நேரடி சாதனைப்புள்ளி விபரங்களை மிகக் கவனமாகத் தவிர்த்துவிட்டு அவற்றை விளம்பரமாக மட்டும் பயன்படுத்தியிருக்கிறது.

இந்த விசயத்தைப் பொறுத்தவரை எம்எம்பி நிறுவனப் பிரதிநிதியின் வாதம் என்னவெனில் செய்தி யாளர்கள் தங்கள் நேர்காணலின்போது விவசாயிகளின் சொந்த அனுபவங்களைக் கேட்டறிந்து அவர்கள் சொன்னதை அப்படியே வெளியிட்டிருக்கிறார்கள், என்பதுதான்.

விளம்பரமாக மறுபிறவி எடுத்திருக்கும் அந்தச் செய்திக்கட்டுரையின்படி விவசாயி நந்து ரௌட் போல்கார்ட்2 என்ற ரகத்தைக் கொண்டு ஏக்கருக்கு 20 குவிண்டால் மகசூல் எடுத்திருக்கிறாராம். இது வேளாண் அமைச்சர் சொல்லும் ஏக்கருக்கு 1.4 குவிண்டால் என்ற அளவின் 14 மடங்கு ஆகும். பருத்திக்கு குறைவான தண்ணீர் (இரண்டு அல்லது மூன்றுமுறை) போதும் என்பதால் விதர்பாவின் மழைப்பொழிவுப் பிரதேசங்களில் மகசூல் மிகவும் குறைந்துவிட்டது என்கிறார் அமைச்சர் பவார். ஆனால் தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராட்டிய மாநிலத்தில் அதிகம் மழை பெறும் பிரதேசங்களில் ஏன் பி.ட்டி. பருத்தி பரிந் துரைக்கப்பட்டது என்பதைப் பற்றி அவர் மௌனம் சாதிக்கிறார். மராட்டிய மாநில அரசின் வேளாண்துறை ஆணையாளர் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு மழைப் பிரதேசங்களுக்கு ஒத்துவராது என்று தடைசெய்திருந்த அதே விதைகளை மகாராட்டிய அரசின் விதைக் கழகம் விவசாயிகளுக்கு விநியோகம் செய்திருக்கிறது. டைம்ஸ் ஆப் இந்தியா கருத்துப்படி விவசாயி நந்து பணத்தில் புரள்கிறார். ஆனால் அமைச்சரின் கருத்துப்படி அவர் “முக்கித் தக்கி உயிர்வாழ்கிறார்”.

farmer-suicide_380முகிகொ-மன்சான்டொ பயோடெக் MMB நிறுவனம் தனது அதிர்வேட்டு விளம்பரத்தினால் இன்னொரு சிக்கலை அதேவாரத்தில் சந்தித்தது. இந்திய விவசாயி களுக்கு பெரும் லாபத்தை அள்ளித் தருவதாகச் சொல் லும் ஒரு விளம்பரம் மீதான புகாரைத் தொடர்ந்து இந்நிறுவனம். இந்திய விளம்பரத் தரக் கட்டுப்பாட்டுக் கழகத்தின் விசாரணைக்கு உட்படவேண்டியிருந்தது. கிஷிசிமி ASCI (Advertisements standards council of India) எனப்படும் அந்த நிறுவனம் தனது தீர்ப்பில்’ விளம்பரத்தில் சொல்லப்பட்டிருக்கும்; தகவல்கள் நம்பத்தக்க உண்மைகள் அல்ல’ என்று குறிப்பிட்டிருந்தது. “அதனை ஏற்றுக் கொண்டு எங்கள் நிறுவனம் விளம்பரத்தில் மாற்றங்கள் செய்தது. ஆதனை ASCI அங்கீகரித்தது” என்கிறார் எம்எம்பி நிறுவனப் பிரதிநிதி.

மூர்ச்சில் எம்.பி.க்கள் குழு வந்து சென்றபின்னர் நந்துவை மீண்டும் சந்தித்தோம். “இன்று என்னைக் கேட்டால் இது போன்ற பாசன வசதியற்ற இடங்களில் பி.ட்டி பருத்தி வேண்டாம் என்றுதான் சொல்வேன். சூழ்நிலை இப்போது மிகவும் மோசமாக உள்ளது” என்கிறார் அவர். ஆனால் எம்.பி க்கள் குழு சந்திப்பின்போது இப்படிஏதும் சொல்லவில்லை. அவர் தாமதமாக வந்ததால் சொல்ல முடியவில்லையாம்.

நாங்கள் வட்டிக்காரர்களை விரட்டிவிட்டோம் இனி அவர்கள் எங்களுக்குத் தேவையில்லை என்று மங்குசவான் என்ற விவசாயி சொன்னதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்திக்கட்டுரையில் ஒரு தகவல். பி.ட்டி.யால் செல்வம் குவிந்ததைப் பற்றி டைம்ஸ் ஆப் இந்தியா கொண்டாடும் இன்னொரு கிராமம் அந்தர்கானில்தான் இந்தக் கதை. ஆனால் விதர்பா ஜன அந்தோலன் சமிதி (VJAS) என்னும் அமைப்பு பாம்ப்ரஜாவில் உள்ள 365 விவசாயக் குடும்பங்களிலும் அந்தர்கானில் உள்ள 150 விவசாயக் குடும்பங்களிலும் நடத்திய ஆய்வு முடிவுகள் இதற்கு மாறாக உள்ளன.

“கிட்டத்தட்ட எல்லா விவசாயிகளின் வங்கிக் கடன் களும் திரும்பச் செலுத்தப்படாமல் உள்ளன. கு60 சதவீத விவசாயிகள் தனியார் வட்டிக்காரர்களிடம் சிக்கியிருக்கிறார்கள்.” என்கிறார் VJAS தலைவர் கிசோர் திவாரி.

எம்.பி.க்கள் குழுவை பாம்ப்ரஜா, மாரேகான் போன்ற மாதிரி கிராமங்களுக்குச் செல்லவிடாமல் தடுத்து, அரசினால் தேர்வு செய்யப்பட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்ல மராட்டிய மாநில அரசு கடுமை யாக முயற்சி செய்தது. ஆனால் எம்பிக்கள் குழுவின் தலைவர் திரு. பாசுதேவ் ஆச்சார்யாவும் மற்றவர்களும் அங்கு செல்வதில் உறுதியாக இருந்தனர். ஏம்பிக்கள் குழுவின் வருகையால் உற்சாகம் அடைந்த இரண்டு கிராம மக்களும் தங்கள் மனதில் உள்ளதை அப்படியே அவர்களிடம் கொட்டினார்கள். மகாராட்டிய மாநிலத்தில் 1995லிருந்து 2010 வரையிலான 15 ஆண்டு களில் 50000 தற்கொலைகள் என்ற தேசிய குற்றங்கள் ஆவணக் கழகத்தின் புள்ளிவிபரம் நாட்டிலேயே மிகவும் மோசமானது ஆகும். மாநிலத்தில் உள்ள விதர்பா பகுதி இவ்விசயத்தில் முதலிடத்தில் இருக்கிறது. இருந்தும் விவசாயிகளின் துயர்நீக்கும் கொள்கைகள் பற்றி விவசாயிகள் தொடர்ந்து பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்தத் தற்கொலைகள் அல்லது சிக்கல்களை பி.ட்டி. பருத்தியின் விளைவுதான் என்று எந்த விவசாயியும் சொல்லவில்லை. ஆனால் இவை பி.ட்டி பருத்தியின் அற்புதங்கள்,குறைவான உற்பத்திச் செலவு, லாபம் பற்றிய கற்பிதங்களைத் தகர்த்துவிட்டன. விவசாயிகளின் சில கருத்துக்கள் எம்.பி.க்களுக்கு புதிய செய்திகளாக இருந்தன. ஆனால் அவை எதுவும் காசுகொடுத்துப் போடும் செய்தியாகவோ, விற்பனைக் கான விளம்பர உத்தியாகவோ இல்லை.

தமிழில்: காஞ்சனை மணி

Pin It