அரசுகளுடன் உரையாடுக

டாக்டர். அன்புமணி அவர்கள் மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தபோது மருத்துவமனைப் பதிவுச்சட்டம் (CLINICAL ESTABLISHMENTS ACT) கொண்டுவரும் முயற்சிகள் நடந்தன. பின் முடங்கின. 2010 ஏப்ரல் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இச்சட்டத் திற்கான மசோதாவை குலாம் நபி ஆசாத் அவர்கள் முன்மொழிந்து நிறைவேற்றப்பட்டது.

நாடு முழுவதுமுள்ள மருத்துவமனைகளின் தரம் மற்றும் சேவை வசதிகளை ஒழுங்குபடுத்தும் நோக்கோடு இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதனை அமுல்படுத்த மாநில அளவிலான பல உறுப்பினர்களைக் கொண்ட ‘State council of clinical Establishment’, பல உறுப்பினர்கள் அடங்கிய மாவட்டளவிலான ‘The Registering Authority for Clinical Establishments’ போன்ற அரசு அமைப்புக்கள் செயல்படும்.

எந்த ஒரு துறையிலும் தனிநபர்களோ, குழுக்களோ எவ்வித ஒழுங்கு களும் கட்டுப்பாடுகளுமின்றி செயல்படும்போது மக்கள் பாதிக்கப்படுவார் கள். அதனை ஒழுங்குபடுத்துவது அரசின் கடமையே. மருத்துவத் துறை அதற்கு விதிவிலக்காக இருக்கமுடியாது. ஆனால் நெறிப்படுத்தும் சட்டமும் நடவடிக்கைகளும் ஜனநாயக உள்ளடக்கத்துடன் அமைய வேண்டியது அவசியம்.

தென்னிந்தியாவில், கர்நாடக மாநிலத்தில் இச்சட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மக்களுக்கு சிகிச்சையளிக்கும் எந்த ஒரு மருத்துவமனையாக (Hospital & Clinic) இருந்தாலும் ரூ.500 செலுத்தி, விண்ணப்பித்து பதிவு பெற்றாக வேண்டும் என்ற நிலை அங்கு உருவாகியுள்ளது. விண்ணப்ப அடிப்படையில் முதலில் தற்காலிகப் பதிவும் பின்னர் பரிசீலனை முடிந்து நிரந்தரப் பதிவும் வழங்கப்படுகிறது.

சித்த மருத்துவத்தில் தமிழகத்தில் அரசு பதிவு பெற்றவர்கள் கர்நாடகாவில் மருத்துவமனைப் பதிவுக்காக விண்ணப்பித்தபோது மறுக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள். சித்த மருத்துவமும் இந்திய மருத்துவங் களில் ஒன்றுதான் என்பதை அதிகாரிகளுக்கு எடுத்துரைத்த பின் மறுபரிசீலனை செய்து ஏற்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் மருத்துவமனைப் பதிவுச் சட்டத்தை அமுல்படுத்த மாவட்டளவிலான மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழு செயல்படுகிறது. இவர்களில் இருவர் அரசு தரப்பு (சுகாதார துறை) அதிகாரிகள். ஒருவர் இந்திய மருத்துவ சங்கத்தின் (IMA) மாவட்டப் பொறுப்பாளர். அம்மூவரடங்கிய குழு விண்ணப்பங்களை ஆய்வுசெய்து, பரிந்துரை செய்த பின் தான் பதிவுச் சான்றிதழை மாநில அரசு வழங்குகிறது. இந்தக் குழுவில் AYUSH அமைப்புகளின் பிரதிநிதிகள், மாற்றுமருத்துவங்களைச் சார்ந்தவர்கள் ஏன் இடம்பெறவில்லை? அலோபதி மருத்துவர் சங்க உறுப்பினருடன் ஆயுஷ் அமைப்பு உறுப்பினரும் இல்லாமல் நியாயமான ஜனநாயகப் பூர்வமான பரிசீலனைகளும், பதிவுகளும் எப்படி நடக்க இயலும்? மருத்துவத்துறைக்குள் மீண்டும் மீண்டும் ஒற்றைத் தன்மை நீடிக்கலாமா? பன்மைத் தன்மை மலர வேண்டாமா? “எது மருத்துவம்? எது மருத்துவம் இல்லை?” என்று ஆராய்ந்து பரிந்துரைக்கும் அதிகா ரத்தை ஆங்கில மருத்துவத் துறையினரிடம் ஒப்படைப்பது சரியா?

அக்குப்பங்சர், அக்குபிரசர், யோகா, ஹிப்னாடிசம், உளவியல் மருத்துவம், மூலிகை மருத்துவம் போன்ற பல இயற்கைமுறைகளில் சிகிச்சையளிப் பவர்களை, பாரம்பரிய மருத்துவர்களை, அவரவர் வீடுகளில் ஓர் அறை யையே மருத்துவ மையமாக மாற்றிச் சிகிச்சையளிப்பவர்களை இச்சட்டம் கவனத்தில் கொள்ளவில்லை. இந்த மாற்றுமருத்துவச் சிகிச்சை மையங்களுக்கு பதிவு மறுக்கப்பட்டால் அல்லது சீல் வைக்கப்பட்டால் எத்தனை பேரால் மேல் முறையீட்டுக்குச் செல்ல முடியும்? வெல்ல முடியும்? மேல்முறையீட்டிலும் தடை ஏற்பட்டால், தோல்வி ஏற்பட்டால் அவர்களின் வாழ்வாதாரம் பறிபோகாதா?

மருத்துவத்துறை இன்று மிகப்பெரும் வணிகச் சந்தையாக இயங்கிவருகிறது. ஆங்கில மருத்துவ பக்கவிளைவுகளும், ஊழல்களும் உலகளவில் அம்பலமாகி வரும் சூழலில் கார்ப்பரேட் மருத்துவமனை களிலும் கூட மாற்றுமருத்துவங்களைப் பயன்படுத்துகின்றனர். MLM நிறுவனங்களும் மாற்று மருத்துவங்களை குறிவைத்து செயல்படுகின்றன. நவீன சாமியார்களும் ஆன்மீகப் பணிகளின் தன்மையை மாற்றி இயற்கை மருத்துவ முறைகள் மூலம் நீண்ட ஆயுள் பெறுமாறும், அத்தனைக்கும் ஆசைப்படுமாறும் கூறி ஆரோக்கிய வாழ்வுக்கலையை கற்றுதருவதாக ஏமாற்றி கோடி கோடியாக குவிக்கின்றனர். அரசின் சட்டதிட்டங்களும் மாற்றுமருத்துவங்களுக்கு சாதகமாக இல்லை.

மருத்துவத் துறையில் ஜனநாயகத்தை உருவாக்க, மாற்றுமருத்துவங் களைப் பாதுகாக்க... ஏன்... மக்களைப் பாதுகாக்க... ஒரே ஒரு சிறந்த வழிதான் உள்ளது. மத்திய, மாநில அரசுகள் மீது எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் அவை மக்களின் பிரதிநிதிகள். எனவே அரசுகளுக்கும் அதிகார மையங்களுக்கும் மருத்துவதுறை ஜனநாயகக் கோரிக்கைகளைப் புரிய வைக்க, உணரவைக்க ஆயுஷ் அமைப்புக்கள் அரசுகளோடு உரையாடலைத் துவங்க வேண்டும்; தொடர வேண்டும். அரசுகளின் எந்த ஒரு கதவும் மூடப்படவில்லை என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். மக்கள் நலத்திற்காக பாடுபடும் எந்த ஒரு அரசியல் கட்சியும் கூட இதற்கான முயற்சிகளை செய்யலாம்.

அன்புடன்

ஆசிரியர்.

Pin It