முதலில் சர்க்கரை நோய் என்றால் என்ன என்பதை தெரிந்து கொண்டால்தான் - அதற்கு சிகிச்சை உண்டு என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.
நவீன மருத்துவம் சர்க்கரை நோய்க்கான அடிப்படைக் காரணம் - கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலின் பற்றாக்குறைதான் என்று கூறுகிறது. இவ்வளவு சுரப்பு திடீரென குறைய என்ன காரணம்? அதுவும் நம் உடல் முழுவதும் பலவகையான சுரப்புக்கள் ஒழுங்காக இருக்கும் போது அந்த ஒரே ஒரு சுரப்பு மட்டும் ஏன் திடீரென குறைகிறது? முன்பு லட்சத்தில் ஒருவருக்கு வந்த கொண்டிருந்த சர்க்கரை நோய் இப்போது உலகையே பயமுறுத்தும் ஆட்கொல்லி நோயாக எப்படி மாறியது? இந்த கேள்விகளுக்கெல்லாம் நவீன மருத்துவத்தின் ஒரே பதில் - இன்னும் ஆராய்ச்சி முடியவில்லை என்பது மட்டும் தான்.
சர்க்கரை நோய்க்கான அடிப்படை காரணத்தையும், அதற்கான சிகிச்சையையும் மிக எளிதாக முன் வைக்கிறது அக்குபஞ்சர்.
நம் முறையற்ற உணவுப் பழக்கம் மற்றும் ஜீரண உறுப்புக்களின் இயக்கக் குறைவு காரணமாக, செரிமானத்தின் இறுதி எரிப்பொருளான குளுக்கோஸ் தரம் குறைந்ததாக கிடைக்கிறது. எப்படி கொழுப்பில் தரம் குறைந்த, தரம் கூடிய வகைகள் உள்ளனவோ அதே போல குளுக்கோஸிலும் இருவகைகள் உள்ளன. இப்படி செரிமானம் மூலம் கிடைக்கக் கூடிய குளுக்கோஸின் தரம் தான் இன்சுலின் சுரப்பின் அளவை தீர்மானிக்கிறது. பாதி அளவே தரம் உள்ள குளுக்கோஸ் செரிமானத்தில் கிடைக்குமானால் வழக்கமாக சுரக்கும் இன்சுலின் அளவு பாதியாக குறையும், தரம் குறைந்த குளுக்கோஸ் தொடர்ந்து உற்பத்தியாகுமானால் இன்சுலின் அளவு குறைந்து கொண்டே போகும். தரம் குறைந்த குளுக்கோஸ் இரத்தத்திலிருந்து சிறுநீராக பிரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. அதிகப்படியான தரம் குறைந்த குளுக்கோஸ் உருவாகும் போது அதிகப்படியான சிறுநீர் வெளியேறும். இந்த நிலையில் அதிகமான பசியும், உடல் மெலிவும் ஏற்படும். உடலில் இருந்து சிறுநீராக வெளியேறும் தரம் குறைந்த குளுக்கோஸை செயற்கையாக மருந்து மாத்திரை மூலம் உடலிலேயே அடக்கி வைக்க முயன்றால் சிறுநீரகம் படிப்படியாக செயலிழக்கும்.
சர்க்கரை நோய்க்கு அடிப்படைக் காரணமே இரத்தத்தில் உள்ள தரம் குறைந்த குளுக்கோஸின் பெருக்கம் தான். இதை அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தி, சீர் செய்தால் தரம் குறைந்த குளுக்கோஸ் சிறுநீர் மூலம் முழுமையாக வெளியேறும். உடலிற்கு தேவையான தரம் உயர்ந்த குளுக்கோஸ் கிடைக்கும். இன்சுலின் சுரப்பு தானாகவே அதிகரித்து உடல் நலம் திரும்பி விடும்.
நன்றி : ஹெல்த் டைம்