செங்கல்பட்டு, 10-2-09.

ஈழத்தமிழர்களை கொன்று குவித்து வரும் சிங்கள அரசிற்கு இந்தியா தொடர்ந்து உதவி வருவது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை எற்படுத்தியுள்ளது. சிங்கள அரசின் தமிழின அழிப்புப் போரை உடனே நிறுத்தக் கோரி தமிழக மக்கள் தன்னெழுச்சியாக பல்வேறு வடிவங்களில் போராடி வந்த போதும் இந்திய அரசு செவி சாய்க்காமல் உள்ளது. மேலும் சிங்கள அரசின் தமிழின அழிப்புப் போருக்கு இந்தியா தொடர்ந்து உதவி செய்து வருவது கவலையளிக்கிறது என்ற நிலையில் தியாகி முத்துக்குமார் உட்பட பல தமிழர்கள் தீக்குளித்த தன்னுயிரை ஈகம் செய்துள்ளனர்.

இதன் பின் மாணவர்களும் வழக்கறிஞர்களும் தன்னெழுச்சியாக போராட்டங்களை கூர்மைப்படுத்தி வருகின்றனர். மாணவர்களின் எழுச்சி கண்டு அஞ்சியுள்ள தமிழக அரசு 7-2-09 அன்று தமிழ்நாட்டின் அனைத்துக் கல்லூரிகளையும் காலவரையின்றி உடனே மூடிட உத்தரவிட்டது. இதன் மூலம் மாணவர்களின் போராட்டங்களை நசுக்கி விடலாம் என தமிழக அரசு நினைத்தது.

தற்பொழுது நேற்று(9-2-09) முதல் பொறியியல மற்றும் மருத்துவக்கல்லூரிகளை தமிழக அரசு திறக்க உத்தரவிட்டுள்ளது.

மாணவர்கள் பொறியியல், மருத்துவம், சட்டம், கலை, அறிவியல் என்ற பிரிவுகளை பாராமல் ஈழத்தில் அழிக்கப்படுவது நமது இனம் என்ற ஒரே நோக்கத்தோடு ஒற்றுமையுடன் போராடி வரும் நிலையில், பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளை மட்டும் திறந்து மாணவர்களை பிரித்தாளும் சூழ்ச்சியை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஈழத்தமிழர் படுகொலை பற்றிய உணர்வில்லை என்பது போன்ற சூழ்ச்சிகரமான செயலாகவே தமிழக அரசின் இச்செயல் விளங்குகிறது.

எனவே, தமிழக அரசு மாணவர்களை பிளவுபடுத்த நினைக்கும் இது போன்ற சூழ்ச்சிகரமான நடவடிக்கைகளை கைவிட வேண்டும். தமிழ்நாட்டின் அனைத்துக் கல்லூரிகளையும் உடனே திறக்க வேண்டும். மாணவர்களை பிளவு படுத்தும் தமிழக அரசின் இந்நடவடிக்கையை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

செங்கல்பட்டு சட்டக்கல்லுரி மாணவர்கள் சார்பாக,
அன்பரசு
பேச 98940 45451
-
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It