•              2005-06 ஆம் ஆண்டிலிருந்து அய்க்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி, பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்துள்ள வரி - 3,74,937 கோடி ரூபாய்.                (இது, 2ஜி அலைக்கற்றை ஊழல் தொகையைவிட 2 மடங்கு)

•              இப்போது நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கையில் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்துள்ள வரி - ரூ.88,263 கோடி.

•              இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு நாளும் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்யப்படும் தொகை ரூ.240 கோடி!

•              ஒவ்வொரு நாளும் இதே 240 கோடி ரூபாயும் சட்டவிரோதமாக, வெளிநாட்டு வங்கிகளுக்கு போய்க் கொண்டிருக்கிறது.                (வாஷிங்டனில் உள்ள பொருளாதார ஆய்வு நிறுவனம் -  Global Financial Integrity  - இத்தகவலைத் தெரிவித்துள்ளது)

•              இப்படி பெரும் தொகையை தொழில் நிறுவனங்களுக்கு ரத்து செய்த பிரணாப் முகர்ஜி, விவசாயத் துறைக்கான ஒதுக்கீட்டில் ரூ.5568 கோடியை வெட்டி விட்டார். பயிர்ப் பாதுகாப்புக்காக, விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தொகையில் மட்டும் குறைக்கப்பட்ட நிதி ரூ.4,447 கோடி.

•              நிதிநிலை அறிக்கையில் பொருளாதார சேவைத் துறைகளிலேயே மிக அதிகமான பாதிப்பு விவசாயத் துறைக்குத் தான்.                (தகவல்: டாட்டா சமூக ஆய்வு மய்யம் - Tata Institute of Social Science

•              பெரும் தொழில் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகையை தள்ளுபடி செய்தது மட்டுமல்ல, இனி எதிர்காலத்தில் செலுத்த வேண்டிய சுங்கவரியைக் கட்டத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்ட தொகை - ரூ.48,798 கோடி!                (நாடு முழுதும் பொது விநியோகத் துறையான ரேஷன் கடைகளுக்கு ஓராண்டுக்கு செலவிடப்படும் தொகையில் இது பாதி)

•              அப்பல்லோ போன்ற ‘நட்சத்திர ஓட்டல்’ தரத்தில் நடத்தப்படும் தனியார் மருத்துவமனை களுக்கு வெளிநாடுகளிலிருந்து நவீன மருத்துவக் கருவிகளை இறக்குமதி செய்ய, இந்த நிதி நிலை அறிக்கையில் விலக்காக அளிக்கப்பட்டுள்ள சுங்கவரித் தொகை ரூ.1,74,418 கோடி.

                (இந்த மருத்துவமனைகளில் 30 சதவீத படுக்கைகளை ஏழைகளுக்கு இலவசமாக வழங்கி, சிகிச்சை அளிப்பதாக இந்த நிறுவனங்கள் பொய் கூறி அரசிடமிருந்து சலுகைகளைப் பெறுகின்றன. உண்மையில் அப்படி எந்த இலவச சிகிச்சையும் இங்கே வழங்கப்படுவது இல்லை.)

•              இந்த நிதிநிலை அறிக்கையில் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகளாக அறிவிக்கப்பட்டுள்ள தீர்வை வரி - ரூ.1,98,291 கோடி.                (கடந்த ஆண்டு - ரூ.1,69,121 கோடி)

•              தொழில் வருமான வரி, சுங்க வரி, தீர்வை வரி - ஆக பனியா - பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் செலுத்தத் தேவையில்லை என்று 2005-2006 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை மொத்தமாக வழங்கப்பட்ட வரிச் சலுகை - ரூ.21,25,203 கோடி. (21 இலட்சத்து 25 ஆயிரத்து 203 கோடி. 2ஜி அலைக்கற்றை ஊழலைவிட 12 மடங்கு அதிகம்)

கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வரிச் சலுகையும் அவர்களால் செலுத்தப்படாத வரித் தொகையும் அதிகரித்துக் கொண்டே போவதால் இதை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் நேர்ந்துள்ளது” என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால், இந்த ஆண்டில் அதற்கான எந்த மாற்றமும் இல்லை. மேலும் மேலும் கூடுதலாக வரிச் சலுகைகள் வாரி வாரி வழங்கப்பட்டுள்ளன.

இப்படி கோடிகோடியாக தொழில் திமிங்கலங்களின் வயிற்றில் கொட்டும் பார்ப்பன - பனியா ஆட்சி தான். ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் உணவுப் பொருள்களை வழங்க நிதி இல்லை என்று கை விரிக்கிறது. உணவுக்காக வழங்கப்படும் நிதி உதவியை குறைக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளில் தனி மனிதர் ஒருவருக்கு சராசரியாகக் கிடைக்கும் உணவு தானியத்தின் அளவு 50 ஆண்டுகளுக்கு முன்பு 1955-59 காலத்தில் கிடைத்ததைவிட பாதியாகக் குறைந்துள்ளதாக அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் பொருளாதார மதிப்பீட்டு அறிக்கையே கூறுகிறது!

பார்ப்பன - பன்னாட்டு வேட்டைக்காடா, இந்த நாடு?

(மார்ச் 7 ஆம் தேதி ‘இந்து’ ஏட்டில் பி.சாய்நாத் எழுதிய கட்டுரையிலிருந்து)

Pin It