இன்று நாம் (திராவிடர்கள்) இரண்யனையும், இராவணனையும் எப்படிப் போற்றிப் புகழ்ந்து மரியாதை செய்கிறோமோ அது போலவே நரகாசுரனும் நம் மரியாதைக்கு உரியவனாவான். ஆதலால் அப்படிப்பட்ட அவனை தேவர் கூட்டம் கொன்றதற்காக நாம் துக்கப்பட வேண்டுமேயொழிய, மகிழ்ச்சி அடைவது மடமையும், இழிவும், ஈனமுமாகும். ஆதலால் திராவிட மக்கள் எவரும் தீபாவளி பண்டிகைக் கொண்டாடக் கூடாது என்று வேண்டிக் கொண்டதோடு, திராவிடர் கழகத்தவர்கள் கண்டிப்பாகக் கொண்டாடக் கூடாது என்று தெரிவித்துக் கொள்கிறோம். தீபாவளியன்று கருப்புச் சட்டையுடன் நரகாசுரனுக்கு வாழ்த்துக் கூறிக் கொண்டு ஊர்வலம் வந்து அவனது கொலைக்காகத் துக்கப்படும் துக்க நாளாகக் கொள்ள வேண்டும்.

பெரியார் - 12.10.49 ‘விடுதலை’ தலையங்கம்


கழகத்துக்கு புதிய தலைமையகம்

பெரியார் திராவிடர் கழகத்தின் புதிய தலைமையகம் சென்னையில் செயல்படத் தொடங்கியிருப்பதை தோழர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். தலைமைக் கழக முகவரி:

95, நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம்,

மைலாப்பூர், சென்னை - 600 004.

(தொலைபேசிக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது)

Pin It