Tree
வேகமாய்
வேர்பிடிக்கிறது
ஓரிலைத் தாவரம்
இலைகள் குவித்து
கிளைகள் பரப்ப.

2)

பசுமை இலைகள்
சிறு- பெறு கிளைகள்
வண்ண, நறுமண
மலர்கள்
பழுத்த, சுவைமிக்க
கனிகள்
முடங்கிக் கிடக்கிறது
வீசி பிடித்து
விளையாடுவதை நிறுத்து
விதைத்துப்பார்
விந்தை புரிவாய்
அல்லேல்
விட்டெறி
தானே முளைத்து
வாழும்

3)

இலையுதிர்த்து
மெலிகிறது
மரம்
ஈரம் தேடி
அலைகிறது
வேர்கள்

- மதியழகன் சுப்பையா, மும்பை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.