நேரம்: 9:00 நிமிடங்கள்
காட்சி-1
(Y என்ற இளைஞன் தனது முதலாளியுடன் கைப்பேசியில் பேசுகிறான்)
இளைஞன் Y
ஹாங்... சார்.... (மவுனம்)
இல்லையே....
சார்... கொஞ்சம் உடம்பு சரியில்லை அதான்... ( மவுனம்) லேசா ஜுரம். (மவுனம்) இல்லை சார்... திடீர்ன்னு... எப்படியாச்சுன்னு தெரியலசார் ( மவுனம்) நாளைக்கு வந்திடுவேன் சார் ( மவுனம்) இல்ல சார்.. இன்னைக்கு நல்ல ரெஸ்ட் எடுத்துக்குவேன்..( மவுனம்) அய்யோ! எங்கயும் ஊர் சுத்தல சார்.. மருந்து வாங்க போயிருந்தேன்.( மவுனம்)நாளைக்கு வந்திடுவேன் சார்..(மவுனம்)கண்டிப்பா...சரியாயிடும் சார்..( மவுனம்) டாக்டர் மருந்து கொடுத்திருக்காரு.. ஊசியும் பொட்டாரு. (மவுனம்) ஓ.கே சார் தேங்க் யூ சார்... ஸாரி சார்... தேங்க் யூ சார்.. ஓ.கே சார். ஓ.கே
காட்சி-2
( A என்ற இளைஞன் B என்ற பெண்ணுக்கு கால் செய்கிறான். இளைஞன் அலுவலகத்தில் டை கட்டிக் கொண்டு இருக்கிறான். பெண் மொட்டை மாடியில் இருக்கிறாள்)
இளைஞன் -A
ஹாய்!! டார்லிங்..
பெண்-B
டேய்! கழுத, ஹலோ சொல்லு, யார் பேசுறாங்கன்னு கேளு, வேற யாராவது எடுத்திருந்தா?
இளைஞன் -B
யார்டா, எடுப்பா. எடுத்தாலும், என் நிலைமையை புரிஞ்சுக்குவாங்க.
பெண் - B
போதும், நிறுத்துடா. என்ன இன்னைக்கு நல்ல மூட்ல இருக்கிறாப்புல.
இளைஞன் -A
ஹேய் டார்லிங்! நான் எப்பவும் மூட்ல தான் இருப்பேன். உன் குரலை கேட்ட போதும், எனக்கு இறக்கை முளைச்ச மாதிரி ஆகிடுது. ( கையை அந்தரத்தில் இறக்கை போல் ஆட்டுகிறான் )
பெண்- B
(சிரித்தபடி)... என்னடா அச்சு உனக்கு? உங்க பாஸ் வரலையா? ஆபிஸ்ல இருந்தா உன் சத்தமே வராது. இன்னைக்கு என்னவாம்...
இளைஞன் -A
(close up) அம்மா தாயே! இப்ப அந்த தடியன ஏன் ஞாபகப் படுத்துற. உனக்கொரு விஷயம் தெரியுமா, இப்பவெல்லாம் அவன் என் கனவுலவும் வர ஆரம்பிச்சுட்டான். ஹும்.. கனவுல இன்னும் தடியா இருக்கான். கிங் காங் மாதிரி.. ( சிரிக்கிறான்) சரிடா குட்டி, நாளைக்கு நாம சந்திக்கிறோம் ( பாடுகிற பாவனையில்)
பெண்- B
(close up)நாளைக்கா.., நாளைக்கு சனிக்கிழமையில்ல? அட நாளைக்கி... ( உதடுகளை பிதுக்குகிறாள்)
இளைஞன் -A
டேய்! இப்ப முடியாது மட்டும் சொல்லிடாத. உன் மீட்டிங் கீட்டிங் எல்லாத்தையும் குப்பையில் போடு. சரியா ஐந்து மணிக்கு சந்திக்கலாம். சரியா.. பாய். ( அவசரமான குரலில்)
பெண்-B
அஞ்சு மணிக்கா...? அஞ்சு மணிக்கு என்னால வர முடியாது. ( கொஞ்சம் எரிச்சலுடன்)
இளைஞன் -A
அப்படின்னா எப்ப வர முடியும்? இங்க பாரு.. அஞ்சு மணிக்கு முன்னால என்னால வரமுடியாது. உன் ஆபீஸ் தான் நாலரை மணிக்கே முடிஞ்சுடும்ல. அப்ப அஞ்சு மணிக்கு சந்திக்கலாம். சரியா. பாய்டா ஸ்வீட்டி! (இழுத்துச் சொல்லுதல்)
பெண்-B
(செல்லமான குரலில்) ஹேய்! இரு..இரு..இரு கொஞ்சம் பொறுடா. அஞ்சு மணிக்கு எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. அவசரமா ஒரு பைல் தயார் செய்யனும். நாம ஏழு மணிக்கு சந்திக்கலாமா.. ஹாங்... ஹாங்...ப்ளீஸ்..ப்ளீஸ்..
இளைஞன் -A
ஏழு மணிக்கு...ம்ம்.. இல்லப்பா. கண்டிப்பா முடியாது. எனக்கு வேற வேலை இருக்கு
பெண்- B
அஞ்சு மணிக்கு என்னால வர முடியாதுல்ல..?ஹும்.
இளைஞன் -A
நீ கண்டிப்பா வர்ர. நாம நாளைக்கு அஞ்சு மணிக்கு சந்திக்கிறோம். ஓ.கே. ஓஓஓ..கேகேகே.. பாய்டா.
இளைஞன் -A போனை வைக்கிறான். சிரித்துக் கொள்கிறான்.
பெண்-B குழப்பத்தில் இருக்கிறாள். யோசிக்கிறாள். முடிவு செய்கிறாள். கால் செய்கிறாள்.
காட்சி-3
(பெண்- B இளைஞன் -C யை அழைக்கிறாள் )
பெண்-B
ஹாய்! ஹெல்லோ.. ஹவ் ஆர் யூ?
இளைஞன் -C
ஃபைன் டியர்! நீ எப்படி இருக்க?
பெண்- B
நல்லா இருக்கேன். வேற எல்லாம் எப்படி போய்க்கிட்டிருக்கு?
இளைஞன் -C
ஆல் ரைட்! எல்லாம் நல்லாயிருக்கு! மிஸ்ச தான் கொஞ்சம் மிஸ் பண்ணுறேன். வேற ஒன்னுமில்ல.
பெண் -B
(தயங்கியபடி) ஸாரி டியர்! நாளைக்கு புரோகிராம்ல ஒரு சின்ன சேஞ்ஜ்!
இளைஞன் -சி
ஏடி, ஏன் மூட கெடுத்துறாத. என்ன சேஞ்ஜ், சிக்கிரம் சொல்லு?
பெண்-B
அய்யோ, கோபத்த பாரு! நாளைக்கு நாம சந்திக்கிறோம். ஆனா அஞ்சு மணிக்கு இல்ல..(நிறுத்திவிட்டு) ஏழு மணிக்கு..
இளைஞன் - c
(Close up- முகம் மாறுகிறது) ஏழு மணிக்கா? ஏழு மணிக்கு என்னால வர முடியாது. எனக்கு வேற வேலை இருக்கு. (சிடுசிடுப்பாக)
பெண்- B
ப்ளீஸ்!! ப்ளீஸ்!! திடீர்ன்னு வேலை வந்துட்டுப்பா (கொஞ்சலாக) நான் என்ன பண்ணுவேன். ப்ளீஸ்டா! என் குட்டில! என் செல்லம்ல!!
இளைஞன் -C
( அலட்சியமாக) ஹேய்! போதும் நிறுத்து! ( அமைதி) சரி நாளைக்கு நாம சந்திக்க வேண்டாம்.
பெண் -B
மென்மையான குரலில். பாரு கோபமாயிட்டல்ல.. வேலையிருக்குன்னு சொல்றன்ல. இல்லன்னா நான் வரமாட்டேனா? நீ கூப்பிட்டு நான் வராமலா.. நோ சான்ஸ்.
இளைஞன் - C
அதில்லடா.. ஏழு மணிக்கு...ம் ம் ம்
பெண் - B
உன் ஏஞ்சல பார்க்க நீ கண்டிப்பா வருவ. சரியா. நாளைக்கு ஏழு மணிக்கு. அந்தேரி ஸ்டேஷன்ல, ஓகே. பைய்.. பைய்.. ஐ மிஸ் யூ டா ( கிசுகிசுப்பான குரலில்) ஐ... மிஸ்... யூ...
இளைஞன் -c
ஐ டூ..... ( முகத்தை கோணலாக்குகிறான்)
மாட்டிக் கொண்டது போல் முழிக்கிறான். சிந்திக்கும் பாவனை. முடிவு செய்கிறான். கால் செய்கிறான்.
காட்சி-4
( இளைஞன் -C பெண்-D க்கு கால் செய்கிறான் )
இளைஞன் -C
(தளர்ந்த குரலில்) ஹெலோ, என்னப்பா பண்ணிக்கிட்டிருக்க?
பெண்- D
கொஞ்சம் பிஸியா இருக்கேன்ப்பா, சீக்கிரம் சொல்லு, என்ன விஷயம்?
இளைஞன் -C
ஓ.கே. அப்படின்னா நான் அப்புறம் கால் பண்ணுறேன்.
பெண்- D
இல்ல, இல்ல, சொல்லு. உங்கிட்ட பேசுறத விட பெரிய வேலை இல்லை.
இளைஞன் -C
நீ கோபப் பட மாட்டல்ல?
பெண்- D
என்ன விஷயம்முன்னு சொல்லு.
இளைஞன் - C
முதல்ல நீ கோபப் பட மாட்டேன்னு புராமிஸ் பண்ணு.
பெண்- D
(இறுக்கமான முகத்துடன்) ஏன் திரும்பவும் சிகரெட் குடிச்சியா?
இளைஞன் -C
(கையில் பற்ற வைக்காத சிகரெட்டை மறைத்தபடி) அய்யோ இல்லப்பா. உன் மேல சத்தியம் பண்ணியிருக்கேன். சிகரட்ட பார்க்க கூட மாட்டேன்.
பெண்-D
அப்படின்னா, வேற என்ன விஷயம்?
இளைஞன் -C
நாளைக்கு நாம ஏழு மணிக்கு இல்ல, ஏழு மணிக்கு சந்திக்கிறோம். அவ்வளவுதான் வேற ஒன்னுமில்ல.
பெண்-D
ஏழு மணிக்கா....? மை காட்!! அய்யோ ஏழு மணிக்கு நான் எப்படி வரமுடியும்? எங்கப்பா ஹிட்லர் குணம் தெரியும்ல. வீட்ல நுழைஞ்சுட்ட போதும், வெளிய வர முடியாது.
இளைஞன் -C
நான் என்னப்பா பண்றது, புரெஜெக்ட் விஷயமா கொஞ்சம் டாக்குமெண்ட்ஸ் கலெக்ட் பண்ணனும். அதான். ப்ளீஸ்ப்பா.
பெண்-D
சரி! சரி! இப்ப அழுறத நிறுத்து. சரியா ஏழு மணிக்கு சந்திக்கலாம். ஐய்யோ.. என்ன எவ்வளவுப்பா பொய் சொல்ல வைப்ப. ஹுஸ். கடவுளே!
இளைஞன் - C
சரிப்பா, உன் பாவத்தின் பலனை எனக்கு பார்வர்டு பண்ணிடு. சரியா. பாய்ப்பா. டேக் கேர்.
பெண்- D
நீயும் பத்திரம். பாரு, நாளை ஏழு மணிக்கு காத்திருப்பேன். வந்திரு. கால வாரி விட்டுறாத. ஆமா. பாய்.
காலை முடித்தவுடன் பெண்-D ஒரு எண்ணை டயல் செய்கிறாள்.
காட்சி-5
பெண்-D இளைஞன் -E க்கு கால் செய்கிறாள்.
பெண்-D
ஹாய்.. புஜ்ஜுக் குட்டி..
இளைஞன் -E
ஹாய், இப்பத்தாண்ட உன்னப் பத்தி நினைச்சுக்கிட்டிருந்தேன்.
பெண் -D
டேய்! புழுகு மூட்ட!
இளைஞன் -E
இல்லடா கண்ணா, நெஜமா!! சத்தியமா!! புராமிஷா!!
பெண்- D
ஓ.கே ஓ.கே, இப்ப கேளு, There is a little change in our program. We are not meeting by 7pm but meeting by 5 pm. புரிஞ்சதா!
இளைஞன் -E
என்னது??? இல்லப்பா.. இல்ல, என்னால முடியாது. என்னப்பா இது. சரி ஏன் இந்த sudden change?
பெண்- D
Sorry dear, I have an urgent appointment, அதனாலதான்
இளைஞன் -E
அப்படி என்ன அவசரமான அப்பாய்ன்மெண்ட்? என்னப்பா இது? இப்ப நான் எப்படி manage பண்ணுவேன்?
பெண்-D
ப்ளீஸ்ப்பா, என்ன நம்பு. இந்த ஒரு முறை மட்டும். ஒரேயொரு தடவ. சரியா?
இளைஞன் - E
உன்ன... ஒவ்வொரு தடவையும் இப்படித்தான் பண்ணுற. ( அழமாக மூச்சு விடுகிறான்) சரி விடு. எங்க வரனும்.
பெண்-D
அக்கம் பக்கம் யாருமில்லா.. பூலோகம் போவோம் ( பாடுகிறாள்)
இளைஞன் -E
சரி, போதும் போதும்.. ( சிரித்தபடி) பாய்
பெண்- D
பாய் டியர்! பாய்ய்ய்ய்..
காட்சி-6
இளைஞன் -E கால் செய்கிறான்
இளைஞன் -E
ஹலோ!! ஹல்ல்ல்லோ..
Fade out...
காட்சி- 7
வாஷி ரயில் நிலையம் எதிரில் கைப்பேசியில் பிஸியாக. ( வாஷி ரயில் நிலையத்துக்கும் அந்தேரிக்கும் இடையில் ஒன்றரை மணி நேர இடைவெளி)
இளைஞன் -X
அய்யோ.. நீ வந்துட்டியா? எங்க அந்தேரி ஸ்டேஷன்ல நிக்குறியா? நான் பாந்திரா ஸ்டேஷன்ல இருக்கேன்ப்பா. இதோ இன்னும் பதினைஞ்சே நிமிஷத்துல வந்துடுறேன். இதோ ஹூங்கறதுக்குள்ள வந்துடுவேன். சரியா.. பாய்.
( கேமரா மெதுவாக சுழன்று மேலே போய் ரயில் நிலைய பெயர்ப் பலகையில் உரைகிறது )Fade out...
- மதியழகன் சுப்பையா (