கீற்றில் தேட...

Templeநாச்சந்தி ரோட்டோரம்
லச்சுமி படம் போட்டு
பிச்சை கேட்டு நின்றாலும்
மிச்ச சில்லறையில்லைன்று
பச்சையாய் பொய் சொல்லி
அச்சு அசலாய் வரைந்தவனுக்கு
எச்சில் இலையை சுட்டி காட்டும்
நெஞ்சுடைய மக்கள் தாம்
எந்தேச திரு மக்கள்

தலைமுறை தலைமுறையாய்
விலையாக இளமை கொடுத்து
வீணான கல்லுடைத்து நீக்கி
தூண் தூணாய் சிற்பத்தை
ஆண், பெண் ஆடலென்றும்
அவதார புருஷனென்றும்
தவம் செய்யும் ஞானியென்றும்
கோவிலில் வடித்திருப்பதெல்லாம்
அவசர உலகத்திற்கு
அவசியமில்லையென்று, உள்ளே
மூலவரை முண்டியடித்து
முடிந்த வரை பார்த்து விட்டு
முடிச்சு அவிழ்த்து தின்று விட்டு
கூடியவரை குப்பையாக்கி
விடுமுறை நாள் சுற்றுலாவை
முடிக்கின்ற கூட்டமடா....
எந்நாட்டு திரு மக்கள்

எந்நாட்டு கலையெல்லாம்
உள்நாட்டில் விற்பதில்லை
இந்நாட்டில் வந்து நின்று
வெளிநாட்டு வெள்ளையர்கள்
ஒளி போட்டு படம் பிடித்து
அந்நாட்டில் காட்டும் போது
என் நாட்டு மக்களெல்லாம்
நம் நாட்டு பெருமை நினைத்து
கன்னதில் போட்டு கொள்ளும்
கலை ரசிக மக்களடா எம் மக்கள்

கற்பனை பாரதி (ponnu_இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)