lady in loveகுளிர்வையும்,
வெப்பத்தையும்
ஒரே நேரத்தில்
உன்னிடம் மட்டுமே உணர்ந்தேன்.

என்னை
ஓர் இசைக்கருவியை
மீட்டுவது போல்
அத்துனை இலாவகமாய் மீட்டினாய்.

அதிர்ந்து அதிர்ந்து
அடங்குகிறது
அன்பின் நரம்புகள்.

கொதித்து
குளிர்வது தானே இயல்பு
ஆனால்
உன்னுள் குளிர்ந்து
பின் கொதிக்கிறது என்னுடல்.

மரத்துப்போன
செல்களெல்லாம்
மறுபடியும்
துளிர்த்து சிலிர்க்கிறதே.

மாடக்குழி விளக்கென
காற்றின் போக்கில்
அசைந்தாடிய சுடராய்
இருந்த என்னை
கரம் குவித்து
காப்பாற்றினாய்

இப்போது
நான் ஒளிரவா?
குளிரவா?

- இசைமலர்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.