1 *இரவென்பது
ஒளியின்
மாயை.
2* இரவென்பது
ஸ்பரிசத்தின்
தேடல்.
3* இரவென்பது
ஏக்கத்தின்
பெருமூச்சு.
4 * இரவென்பது
பௌர்ணமி
காணல்.
5* இரவென்பது
பலரது
வீடடங்கல்.
6* இரவென்பது
முற்றத்து
இளந்தென்றல்.
7* இரவென்பது
காதலர்களின்
கனவு நீட்சி.
8* இரவென்பது
இராவுலாவிகளின்
கொண்டாட்டக் காலம்.
9* இரவென்பது
கடலலைகளின்
கானப்பொழுது.
10* இரவென்பது
சில்வண்டுகளின்
காதற்வேளை.
- இசைமலர்