காற்று இல்லாமல் இறக்கும் மனிதன்
காற்று இல்லாமல் எரிவது இல்லை
ஒற்றை சிறகில் பறக்கும் பட்டாம்பூச்சி
எரிந்த பின்பு காற்றில் பறக்குது சாம்பலாய்.

ஒற்றை காலை ஊன்றி நடந்தோம்
கட்டை கொம்பும் கையில் இல்லை
மயக்கம் வந்தது என மெல்லப் படுத்தோம்
எழுந்து பார்க்கையில் எரியூட்டப் பட்டோம்

வாக்காளர் பெட்டி போல
பிணங்கள் கிடந்தன ஓரமாய்
எனக்கு இறக்க விருப்பமில்லை..
எனது அரசு விரும்பினால்
எரியும் குழியில் இறங்கச்சொல்லும் என்னை…

பிணங்களுடன் காத்து இருந்தவர்களும்
சேர்ந்து எரிக்கப்பட்டார்கள்
செந்தாமரை தழலில்…

வரலாற்றில் மறைக்க
பள்ளங்கள் எடுக்கவில்லை
சாம்பல் நிறைந்தது
சடங்குகள் நடக்கவில்லை
மரங்களை வெட்டியதால்
விரகும் நனைய வில்லை…

நாங்கள் வேந்து விட்டோம்
எங்களில் எதுவுமில்லை
இது தான் எங்கள்
இந்தீயா…

- மு.தனஞ்செழியன்

Pin It