வேலையில்லா திண்டாட்டம்;
மாதத்தவணை கட்ட இயலா தவிப்பு;
திறக்காத பள்ளிக்கு கட்டணம்;
வங்கி அதிகாரிகளின் அர்ச்சனை;
திமிங்கலகுட்டி போடும் மீட்டர் வட்டி;
புரிந்து கொள்ளாத இரத்த உறவுகள் ;
விலகி போன சொந்தங்கள்;
கை கொடுக்காத நட்பு;
அதிகரித்த அழுத்தங்கள்;
தண்டுவடத்தை நொறுக்கிய பாரங்கள்;
இவைகள் எதுவுமே
இறப்பிற்கான காரணமாகக்
குறிப்பிடப்படவில்லை....
தூக்கிட்டு தற்கொலை
செய்து கொண்டவனின்
பிரேத அறிக்கையில்!

- பா.சிவகுமார்

Pin It